கே. முத்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{refimprove|date=பெப்ரவரி 2017}} {{தகவற்சட்டம் நபர் |name =கே.முத்தையா |image = |image_size=200px |caption = |birth_name = முத்தையா |birth_date = {{birth date|df=yes|1918|1|14}} |birth_place = குருவிக் கரம்பை, தஞ்சை மாவட்டம் |d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Sukanthi
No edit summary
 
வரிசை 34:
முத்தையா தன்னுடைய ஆரம்பக் கல்வி முடப்புளிக்காட்டில் கீற்றுக் கொட்டகைப் பள்ளி ஒன்றில் தொடங்கினார். அந்தப் பள்ளி தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத இதர [[சாதி|சாதியினர்]] மட்டுமே படிக்கும் பள்ளியாகும். பிராமணர்களுக்கென்று தனியாகப் பள்ளி இருந்தது, அதில் இதர சாதியினர் படிக்க முடியாது. முத்தையா ஐந்தாம் வகுப்பு வரை அங்கே பயின்றார். ஐந்தாம் வகுப்பு தேறிய முத்தையாவை அவரது தந்தை அதற்கு மேல் படிக்கவைக்க மறுத்துவிட்டார். வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வண்டி ஓட்டினால் வருமானம் வரும் வீட்டு வேலைகளுக்குச் சம்பள ஆள் வைக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்து பிடிவாதமாக இருந்தார். ஆனால் முத்தையா தனது சிறிய தந்தை கருப்பையாத் தேவர், அத்தை வீரம்மாளின் பிடிவாதத்தினால் அண்ணன் முத்தையாவின் தந்தை கருப்பையாத் தேவர், நிபந்தனையுடன் படிக்க வைக்க ஒத்துக்கொண்டார். முத்தையன் காலையில் மாட்டுவண்டியை சுத்தம் செய்ய வேண்டும், மாடுகளை மேய்க்க வேண்டும் இந்த இரண்டு பணிகளைச் செய்துவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதற்கு உடன்பட்ட முத்தையா பேராவூரணி ஜில்லா போர்டு ஆரம்ப பள்ளியில் சேர்ந்து தினமும் இரண்டரை கிலோமீட்டர் நடந்தே சென்று படித்தார்.<ref name = "two"/> தொடர்ந்து பட்டுக்கோட்டை ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பல இன்னல்களுக்கு மத்தியில் முடித்தார்.
 
==<h1> அரசியல் பணி==</h1>
=== மாணவத் தலைவர் ===
1932 ஆம் ஆண்டில் [[பெரியார்]] [[சோவியத்|சோவியத்து நாட்டில்]] சுற்றுப்பயணம் முடித்துப் [[பட்டுக்கோட்டை]]யில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு [[சோசலிசம்|சோசலிசத்தின்]] பால் ஈடுபாட்டை முத்தையாவிற்கு ஏற்படுத்தியது. 1932 ஆம் ஆண்டு பேராவூரணி தேசவிடுதலைத் தியாகி வீராச்சாமித் தேவர் தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் முத்தையா தன் மாணவ நண்பர்களுடன் சென்று மறியல் செய்தார்.<ref name = "two"/> அதன் பின்னர் தன் நண்பர்களோடு சேர்ந்து அன்னியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் பங்கெடுத்தார். முடப்புளிக்காட்டில் நடைபெறும் சில விழாக்களுக்குச் சென்று வரும் தந்தை கருப்பையாத்தேவருக்கு ஏற்பட்ட மன வேதனை தனக்கும் ஏற்பட்டதால் சமூக ஏற்றத் தாழ்வுக்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என முடிவு எடுத்துப் பேராவூரணி வட்டாரத்தில் "11 நாடுகளின் இளைஞர்கள் சங்கம்" என்ற அமைப்பைக் குருவிக்கரம்பையில் ஏற்படுத்தி அதன் தலைவரானார். இச்சங்கத்தின் மாநாட்டிற்கு, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, [[வி. வி. கிரி]], [[ப. ஜீவானந்தம்]] ஆகியோரை அழைத்துச் சிறப்பாக நடத்தினார்.<ref name = "two"/>
 
வரிசை 42:
1938 ஆண்டில் [[திண்டிவனம்|திண்டிவனத்தில்]] காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்கலைக்கழகத்திலிருந்து கே. பாலதண்டாயுதம், முத்தையா உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர். மாநாட்டில் ப. ஜீவானந்தம் பேசிய ஆவேசமிக்கப் பேச்சையும், பி. ராம்மூர்த்தி பேசிய பொருளாதார நிலைமைகுறித்த உரையும் இவர்களைக் கவர்ந்தது. இந்தப் பேச்சாளர்களைப் பல்கலைக்கழகத்தில் பேச வைக்க வேண்டும் என முடிவு செய்து தமிழ் மன்ற பேராசிரியரை அணுகி சம்மதிக்க வைத்தனர். நிகழ்ச்சி நாளன்று ஜீவா ஒரு [[பொதுவுடமை|கம்யூனிஸ்ட்]], புரட்சிக்காரரென [[காவல்|காவல்த்துறை]] மூலமாகப் பேராசிரியருக்குத் தகவல் அனுப்பப்பட்டு நிகழ்ச்சியைத் தடைசெய்ய முயற்சித்தனர். ஆனால் பல்கலையில் இருந்த கம்யூனிஸ்ட் மாணவர்கள் மற்ற மாணவர்களைத் திரட்டி ஜீவாவைப் பேசவைத்தனர். இந்நிகழ்வுக்கு காரணம் கே. பாலதண்டாயுதம் எனக் கருதி அவரையும் சில மாணவரையும் இடை நீக்கம் செய்தனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாணவர் விடுதி மூடப்பட்டது. கே. பாலதண்டாயுதம் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் மாணவச் செயலாளரான கே. பாலதண்டாயுதத்தின் முழுப் பொறுப்பும் முத்தையாவிடம் வந்தது. கம்யூனிஸ்ட் மாணவர் குழுவையும், பல்கலைக்கழக கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் செயலாளர் பொறுப்பையும், படிப்பையும் ஒரே நேரத்தில் செய்து வந்தாலும் வகுப்பில் இண்டர்மீடியட் தேர்வில் முதலாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.<ref name = "two"/>
 
=== தலைமறைவு வாழ்க்கை ===
[[1939]] ஆம் ஆண்டு [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] சிறப்புப் படிப்பிற்காக வந்த ஆர். உமாநாத் இவரது நெருங்கிய நண்பரானார். [[காவல்துறை|காவல்துறையினரால்]] கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவ்வாண்டு நடைபெற்ற இறுதி தேர்வை எழுதாமலேயே தேர்வு நடைபெறும் அரங்கிற்கு வெளியே இருந்த காவல்துறையினரிடமிருந்து தப்பி [[திருச்சி]]க்குச் சென்றார்.<ref name = "two"/> திருச்சியில் ரயில்வே தொழிற்சங்க இயக்கத்தில் இணைந்து சங்க வேலைகளைச் சிறிது காலம் செய்து வந்தார். கம்யூனிஸ்ட் ரகசிய மையங்களைக் கண்டுபிடித்து அங்கே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த [[மோகன் குமாரமங்கலம்]], [[பி. ராம்மூர்த்தி]], [[சுப்பிரமணிய சர்மா]], [[கேரளீயன்]], [[அனுமந்தராவ்]], [[ஆர். உமாநாத்|உமாநாத்]], போன்றவர்களைக் கைது செய்தபின் தமிழகத்தில் கட்சிப்பணி செய்யவும், ஆங்கில ஆவணங்களைத் தமிழாக்கம் செய்யவும், கட்சிக்கடிதங்களை ஊர் ஊராய் கொண்டு சேர்க்கவும், மாணவர் குழுக்களுக்குக் கம்யூனிஸ்ட்ப் பயிற்சி அளிக்கவும் முத்தையா பணிக்கப்பட்டார்.<ref name = "two"/>
 
=== சென்னை மாவட்ட செயலாளர் ===
பின்னர் [[1942]] ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சிமீதான தடையை ஆங்கில அரசு நீக்கியது. முத்தையாவின் தனது தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில் திருச்செங்கோட்டில் மோகன் குமாரமங்கலத்தின் வீட்டில் கூடி கட்சியின் புதிய மாநிலக் குழுவைத் தேர்ந்தெடுத்தனர். [[மோகன் குமாரமங்கலம்]] கட்சியின் மாநிலச் செயலாளராகவும், முத்தையா சென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கினர்.<ref name = "two"/>
 
"https://tamilar.wiki/w/கே._முத்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது