சங்கத்தானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Tom8011
சி Updated link
 
imported>Thiagalingam
"'''சங்கத்தானை''' யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு|சாவகச்சேரி பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

13:29, 25 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

சங்கத்தானை யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கில் உள்ள உப்பாறு கடலேரிக்கு அண்மையில் இருந்தாலும் இவ்வூருக்குக் கடலேரியுடன் எல்லை கிடையாது. இவ்வூரின் வடக்கில் மீசாலை வடக்கும், கிழக்கு எல்லையில் அல்லாரையும், மேற்கில் மந்துவில், சாவகச்சேரி நகரப் பகுதி என்பனவும், தெற்கில் கோயிற்குடியிருப்பும் உள்ளன.[1] இவ்வூர் சங்கத்தானை கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம்-கண்டி வீதியும், தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் இவ்வூரினூடாகச் செல்கின்றன. இவ்வூரில் ஒரு தொடர்வண்டி நிலையமும் உள்ளது.

குறிப்புகள்

  1. Statistical Information-2010, பக். 17ல் உள்ள நிலப்படத்தைப் பார்க்க.

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சங்கத்தானை&oldid=122029" இலிருந்து மீள்விக்கப்பட்டது