ஆதிசக்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம்
சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
"{{Refimprove|date=மார்ச் 2015}} thumb|200px|right|எல்லோரா குடைவரையில் சத்தி<ref>நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது</ref> புடைப்போவியம் படிமம்:Jai..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 20:
பார்வதி, தாட்சாயினி, காளி, எல்லம்மா, மாரியம்மா, ரேனுகா தேவி, துர்கை, அங்காள பரமேஸ்வரி, சாமுண்டி, பகவதி உள்ளிட்டவை சக்தியின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றன. எல்லாமுமான சிவத்தையே சிருஷ்டித்து தனது வல்லமையை (சக்தியை) அளித்து இயங்கச்செய்வதால் இவளைச் சக்தி என்று திரிலோகமும் போற்றுகிறது.
 
=== தாட்சாயிணி ===
 
[[பிரம்மன்|பிரம்மாவின்]] மானசீக குமாரனான [[பிரஜாபதி]] [[தக்கன்|தட்சனின்]] புதல்வியாக பூமியில் பிறந்தார். இவர் [[தாட்சாயிணி]] என்றும் ''சதி தேவி'' என்றும் அறியப்படுகிறார். சிவபெருமான் மீது காதல் கொண்டு பிரஜாபதியின் விருப்பத்தினையும் மீறி சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையான பிரம்மதேவரின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்து நான்கு தலைகளாக மாற்றிய சிவபெருமான் மீது பிரஜாபதி தட்சன் கோபம் கொண்டிருந்தார். எனவே சதி தேவியார் சிவபெருமானைத் திருமணம் செய்தது கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றைச் செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தமையால், சதி தேவியார் [[வேள்வி|யாகக்]] குண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்க சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார்.
 
==== சக்தி பீடங்கள் ====
[[சக்தி பீடங்கள்|சக்தி]] பீடங்கள் 108 ஆகும். அவற்றில் 64 முதன்மையானவை. அவற்றிலும் 51 மிகப் பிரசித்திப் பெற்றவை.
 
=== பார்வதி தேவி ===
 
சிவபெருமானுக்கு மீண்டும் வல்லமை அளித்து அவரோடு இணைய ஆதி சக்தி, மீண்டும் பூமியில் [[பர்வதராஜன்]] [[மைனாவதி]] தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் [[பார்வதி]] தேவி என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாக தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்க செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையை கொய்தார். பின் பார்வதியின் விஸ்வரூபம் ஆதிபராசக்தியாய் அங்காள பரமேஸ்வரியாய் நவதுர்கையாய் தசமஹாவித்யாவாய் சிவபெருமானோடு அண்டசராசரமும் சுட்டெரிக்க தேவியின் கோபக்கனலைச் சாந்தப்படுத்த எண்ணிய ஈசன் தேவர்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையை கொண்டுவரும்படி ஆணையிட்டார். சிவ பூத கணங்களும் தேவர்களும் யானை தலையை கொண்டுவந்தனர். சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் [[பிள்ளையார்|கணபதி]] என்றும் அறியப்படுகிறார்.
வரிசை 34:
சக்தைவடிவேலன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழ்ந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
=== மீனாட்சி ===
 
'''மீனாட்சி''' என்பவர் [[பாண்டியர்|பாண்டிய]] மாமன்னன் மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியரின் மகளும் [[சிவன்|சிவபெருமானின்]] உருவமான சுந்தரேசரரின் மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானைக் கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராகத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
== கடவுளுடனான உறவு - திருமால் ==
 
=== திருமால் ===
 
ஆதிசக்தியின் சகோதரனாக திருமால் போற்றப்படுகிறார்.
 
=== நந்தி தேவர் ===
 
சிவபெருமான் முதல் தொண்டனான நந்தி தேவர், ஆதிசக்தியின் மகனுக்கு இணையானவராக கூறப்படுகிறது.
 
=== கங்கை ===
இமவானின் மகளான கங்கா தேவி ஆதிசக்தியின் (பார்வதி) சகோதரியாகக் கருதப்படுகிறார்.
 
"https://tamilar.wiki/w/ஆதிசக்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது