நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
"{{Infobox deity | type = Tamil |deity_of= நடனத்திற்கு அதிபதி |image=Shiva as the Lord of Dance LACMA edit.jpg |caption= பத்தாம் நூற்றாண்டின் சோழர் காலத்திய வெண்கல நடராஜர் சிலை, லாஸ் ஏஞ்சலஸ் அருங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 15:
நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. ''நடராசர்'', ''நடராஜா'', ''நடேசன்'', ''நடராசப் பெருமான்'' என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
 
=== கூத்தன் ===
கூத்தன் என்றால், [[கூத்து]] எனும் [[நடனம்|ஆடல்]] கலையில் வல்லவன் என்று பொருள். மேலும் ஞான கூத்தன் என்றும் சிவபெருமான் என்றும் வழங்கப்படுகிறார்.
 
=== சபேசன் ===
சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் [[சிவன்|சிவபெருமான்]] ஆடியதாக [[புராணங்கள்]] கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.
 
=== அம்பலத்தான் ===
[[அம்பலம்]] என்ற சொல்லிற்கு திறந்தவெளி [[சபை]] என்று பொருளாகும். இந்த வகையான அம்பலத்தில் [[சிவன்|சிவபெருமான்]] ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் ,அம்பலவாணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
 
"https://tamilar.wiki/w/நடராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது