ஆதிமந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''ஆதிமந்தி''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் (கரிகால் பெருவளத்தான்) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''ஆதிமந்தி''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் ([[கரிகாலன்|கரிகால் பெருவளத்தான்]]) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இது [[குறுந்தொகை]] பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது.
'''ஆதிமந்தி''' என்பவர் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர்.<ref>{{cite book |last= கா. |first= கோவிந்தன்|date= 1956|title= சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு)|url= https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf|location= |publisher= திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.|page= 9-13 |isbn= |author-link= }}</ref> இவர் சோழன் கரிகாலனின் ([[கரிகாலன்|கரிகால் பெருவளத்தான்]]) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இது [[குறுந்தொகை]] பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது. இவர் குறித்து [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடல்கள் ஊந்தில் குறிப்பிடபட்டுள்ளது. மேலும் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] மதுரைக் காண்டத்தில் இவரைப் போற்றி குறித்துள்ளது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/supplements/penn-indru/1318729-sanga-kala-love-story.html |title=பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 14: ஒரு சங்கக் காதல் கதை |date=2024-09-29 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2024-10-01}}</ref>


==பாடல் தரும் செய்தி==
==பாடல் தரும் செய்தி==
வரிசை 5: வரிசை 5:
ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் [[காதல்]] கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் [[பெண்]] கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.
ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் [[காதல்]] கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் [[பெண்]] கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.


அவனை (தன் காதலனை) [[மள்ளர்]] விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் [[மகளிர்]] துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில்([[தலைவன்]]). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.
அவனை (தன் காதலனை) மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் [[மகளிர்]] துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில் ([[தலைவன்]]). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.
* மள்ளர் = உழவர். மள்-மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.
* மள்ளர் = உழவர். மள்-மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.
* துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.
* துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.
வரிசை 25: வரிசை 25:
ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.[[மருதி]] என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது.<ref>சி. முத்துப் பிள்ளை. (2003). ''தமிழ்ப் பெண் கவிகள்''. சென்னை: பழனி நிலையம்.</ref> ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).
ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.[[மருதி]] என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது.<ref>சி. முத்துப் பிள்ளை. (2003). ''தமிழ்ப் பெண் கவிகள்''. சென்னை: பழனி நிலையம்.</ref> ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).


== பரவலர் பண்பாட்டில் ==
== மேற்கோள்கள் ==
ஆட்டனத்தி-ஆதிமந்தி ஆகியோரின் கதையைத் தழுவி [[ம. கோ. இராமச்சந்திரன்]] நடித்த [[மன்னாதி மன்னன்]] திரைப்படம் 1960 இல் வெளியானது.
<references />

== இவற்றையும் காண்க ==
== இவற்றையும் காண்க ==
[[ஆட்டனத்தி]]
[[ஆட்டனத்தி]]
[[ஆடிப்பெருக்கு]]
[[ஆடிப்பெருக்கு]]

== மேற்கோள்கள் ==
{{Reflist}}


==வெளி இணைப்புகள் ==
==வெளி இணைப்புகள் ==

09:24, 16 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஆதிமந்தி என்பவர் சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர்.[1] இவர் சோழன் கரிகாலனின் (கரிகால் பெருவளத்தான்) மகள் என்பர். இவரதுப் பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. இது குறுந்தொகை பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது. இவர் குறித்து அகநானூற்றுப் பாடல்கள் ஊந்தில் குறிப்பிடபட்டுள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் இவரைப் போற்றி குறித்துள்ளது.[2]

பாடல் தரும் செய்தி

ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் காதல் கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் பெண் கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள்.

அவனை (தன் காதலனை) மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில் (தலைவன்). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது.

  • மள்ளர் = உழவர். மள்-மண் - மண்ணைப் பிணைந்து தொழில் புரிவோர்.
  • துணங்கை = வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடும் பொழுதுபோக்கு விளையாட்டு நடனம்.

அது மட்டும் அல்ல " "—உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" என்று இளங்கோவடிகள் ஆதிமந்தியின் காதல் வலிமையைச் சிலப்பதிகாரத்தில் எடுத்துச் சொல்கிறார்.

ஆட்டனத்தி ஆதிமந்தி ஆடிப்பெருக்கில் ஆடிய படலம்

நீச்சல்-நடன விளையாட்டுவீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை ஆதிமந்தி காதலித்தாள். காவிரியாற்றில் கழார் என்னும் ஊரிலிருந்த நீர்த்துறையில் ஆட்டனத்தி என்பவன் நீச்சல் நடனம் ஆடினான். இந்த நீச்சல் நடனம் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. காவிரி என்பவள் 'தாழிருங் கதுப்பு' கொண்டவள். ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக்கொண்டாள். வெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெற்றத்தில் மாண்டுபோனாள். நீச்சல் நடனம் நடந்த வெள்ளப்பெருக்கு விழாவை இக்கால விழா ஆடிப்பெருக்கு எனக் கொள்ளுதல் பொருத்தமானது.

ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது.[3] ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது).

பரவலர் பண்பாட்டில்

ஆட்டனத்தி-ஆதிமந்தி ஆகியோரின் கதையைத் தழுவி ம. கோ. இராமச்சந்திரன் நடித்த மன்னாதி மன்னன் திரைப்படம் 1960 இல் வெளியானது.

இவற்றையும் காண்க

ஆட்டனத்தி ஆடிப்பெருக்கு

மேற்கோள்கள்

  1. கா., கோவிந்தன் (1956). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 9-13.
  2. "பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 14: ஒரு சங்கக் காதல் கதை". Hindu Tamil Thisai. 2024-09-29. Retrieved 2024-10-01.
  3. சி. முத்துப் பிள்ளை. (2003). தமிழ்ப் பெண் கவிகள். சென்னை: பழனி நிலையம்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆதிமந்தி&oldid=263423" இலிருந்து மீள்விக்கப்பட்டது