ஹனோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement |name = ஹ னோய் |native_name = ''ஹ னோய்'' |type = மாநகர சபை |image_skyline = Hanoi Montage.jpg |image_caption = (இடமிருந்து) மேல்: லோங் பியென் பாலம், நறுமணப் பகோடா, நடு: ஆமைக் கோபுரம், கீழ்:..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 69:
== வரலாறு ==
ஹனோய் நகரில் மனிதர்கள் கிமு 3000 ஆண்டளவிலேயே குடியேறியுள்ளனர். அறியப்பட்ட முதல் நிரந்தரக் குடியேற்றங்களுள் கிமு 200ல் அமைக்கப்பட்ட கோ லோ கோட்டை குறிப்பிடத்தக்கது.
கிமு 197ல், ஹான் ஆக்கிரமிப்பாளர்களால் ஔ லாக் நாடு இணைக்கப்பட்டது. இது 1000 ஆண்டுகால சீன ஆதிக்கத்துக்கு வித்திட்டது. 5ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீன ஆட்சியாளர்கள் பண்டைய ஹனோயின் நடுப்பகுதியில் தொங் பின் எனப்படும் புதிய மாவட்டமொன்றை உருவாக்கினர். பின்னர் இதனுடன் செவ்வாற்றின் தெற்கேயுள்ள ஙியா ஹோய் மற்றும் துய் நிங் (தற்போதைய து லியெம் மற்றும் ஹோய் டக் மாவட்டங்கள்) ஆகிய இரு மாவட்டங்களும், தற்போதைய ஹனோயின் உட்பகுதியிலுள்ள நகர்ப் பகுதியும் சேர்க்கப்பட்டு ஒரு மாகாணமாக்கப்பட்டது. 679ம் ஆண்டளவில், தாங் வம்சம் (சூ வம்சத்தின் பின்னர்) நாட்டின் பெயரை அன்னாம் (அமைதியான தெற்கு) என மாற்றியதோடு, நாட்டின் தலைநகராக தொங் பின்னையும் தெரிவு செய்தது.
வரிசை 79:
8ம் நூற்றாண்டின் பிற்பாதியில், மக்களின் கிளர்ச்சியை அடக்கும் வகையில், தாங் வம்ச ஆளுநரான துரோங் பா ஙி என்பவன், லா தாங்கை(லா கோட்டை,து லீயிலிருந்து இன்றைய பா திங் புறநகர்ப்பகுதியிலுள்ள கான் ஙுஆ வரை) உருவாக்கினான். 9ம் நூற்றாண்டின் முற்பாதியில், இது மேலும் மெருகூட்டப்பட்டு கிம் தாங் (கிம் கோட்டை) என அழைக்கப்பட்டது. 866ல், சீன ஆளுநரான காஓ பியென் ஆட்சியை நிறுவி இதனை தாய் லா கோட்டை (கான் ஙுஆவிலிருந்து பா தாஓ வரை) எனப் பெயர் மாற்றினான். இதுவே பண்டைய ஹனோயின் மிகப்பெரிய கோட்டையாகும்.<ref name="en.hanoi.vietnamplus.vn" />
1010ல், லி வம்சத்தின் முதல் ஆட்சியாளரான லி தாய் தோ தாய் வியட்டின் தலைநகரை தாய் லா கோட்டைக்கு மாற்றினான். செவ்வாற்றின் மேலாக டிராகன் ஒன்று பறந்ததைக் கண்டதாகக் குறிப்பிட்டு இவன் இவ்விடத்தை '''தாங் லோங்''' ({{linktext|昇|龍}}, "மேலெழும் டிராகன்") எனப் பெயரிட்டான். இப் பெயர் தற்போதும் கவிதைகளில் குறிப்பிடப்படுகிறது.1397 வரை தாய் வியட்டின் தலைநகராக தாங் லோங் விளங்கியது. பின்னர் தலைநகர் தாங் ஹோவுக்கு மாற்றப்பட்டு தாய் தோ ({{linktext|西|都}}), அதாவது "மேற்குத் தலைநகர்" என அழைக்கப்பட்டது. தாங் லோங் பின்னர் '''தொங் தோ''' ({{linktext|東|都}}), அதாவது "கிழக்குத் தலைநகர்" என அழைக்கப்பட்டது.
வரிசை 85:
1408ல், சீனாவின் மிங் வம்சம் வியட்நாமைத் தாக்கிக் கைப்பற்றியதுடன், தொங் தோவின் பெயரை வியட்நாமிய மொழியில் '''தொங் கான்''' ({{zh|c={{linktext|東|關}}}}, ''Dōngguān'') அதாவது, "கிழக்கு வாயில்" எனப் பெயர் மாற்றம் செய்தது. 1428ல், லீ லோயின் தலைமையில் ஒன்றிணைந்த வியட்நாமியர் சீனர்களைத் தோற்கடித்தனர். லீ லோய் பின்னர் லீ வம்சத்தைத் தோற்றுவித்ததோடு, தொங் கானை '''தொங் கின்''' ({{linktext|東|京}}, "கிழக்குத் தலைநகர்") அல்லது டொங்கின் எனப் பெயரிட்டான். தாய் சோன் வம்சத்தின் முடிவைத் தொடர்ந்து இது '''பாக் தான்''' ({{linktext|北|城}}, "வடக்குக் கோட்டை") எனப் பெயரிடப்பட்டது.
1802ல், ஙுயென் வம்சம் நிறுவப்பட்டு தலைநகர் ஹூவுக்கு மாற்றப்படுகையில், பண்டைய பெயரான '''தாங் லோங்''' ({{linktext|昇|'''隆'''}}, "மேலெழும் மற்றும் வளமுறும்") மீண்டும் பயன்படுத்தப்பட்டது. 1831ல், ஙுயெம் பேரரசரான மிங் மாங் இவ்விடத்தை ஹ னோய் ({{linktext|河|内}} "நதிகளுக்கிடையில்" அல்லது "நதியின் உட்புறம்") எனப் பெயரிட்டான். 1873ல் ஹனோய் பிரான்சினால் ஆக்கிரமிக்கப்பட்டு, பத்து வருடங்களின் பின் அவர்களிடமே கையளிக்கப்பட்டது. 1887ன் பின், இது '''ஹனோய்''' எனும் பெயரில் பிரெஞ்சு இந்தோசீனாவின் தலைநகரானது.
1940ல் இந்நகர் சப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு 1945ல் விடுவிக்கப்பட்டது. பின்னர் ஹோ சி மின் சுதந்திர வியட்நாமை அறிவித்ததைத் தொடர்ந்து சிறிது காலம் வியட் மின் அரசாங்கத்தின் இருப்பிடமாக விளங்கியது. எவ்வாறாயினும் 1946ல் பிரான்சியர் இதனை மீளக் கைப்பற்றினர். பிரான்சியருக்கும் வியட் மின் படைகளுக்குமிடையிலான ஒன்பது வருட கால மோதலைத் தொடர்ந்து, 1954ல் சுதந்திர வட வியட்நாமின் தலைநகராக ஹனோய் அறிவிக்கப்பட்டது.
வரிசை 95:
வியட்நாம் போரின்போது, பாலங்கள் மற்றும் புகையிரதப் பாதைகள் மீதான குண்டுவீச்சுக்களால் ஹனோயின் போக்குவரத்து வசதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இவையனைத்தும் உடனடியாகத் திருத்தப்பட்டன. போர் முடிவடைந்ததையடுத்து, சூலை 2, 1976ல் வட மற்றும் தென் வியட்நாம்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஹனோய் அதன் தலைநகரானது.
ஆகத்து 1, 2008இலிருந்து, ஹா தாய் மாகாணம், வின் ஃபூக் மாகாணத்தின் மீ லின் மாவட்டம் மற்றும் ஹோ பின் மாகாணத்தின் லோங் சோன் மாவட்டத்தின் 4 கொம்யூன்கள் என்பன ஒன்றிணைக்கப்பட்டு ஹனோய் பெருநகர்ப் பகுதியாக்கப்படுவதாக மே 29, 2008 அன்று முடிவெடுக்கப்பட்டது.<ref>{{cite web |url=http://earth-info.nga.mil/gns/html/cntry_files.html |work=National Geospatial-Intelligence Agency |title=Country files (GNS) |accessdate=2007-04-06 |archive-date=2012-08-23 |archive-url=https://web.archive.org/web/20120823004343/http://earth-info.nga.mil/gns/html/cntry_files.html |url-status=dead }}</ref> இதன் மூலம் 29 உப பிரிவுகளுடன் ஹனோயின் மொத்தப் பரப்பளவு 334,470 ஹெக்டேயராக உயர்ந்ததோடு<ref name="dantri.com.vn">{{cite web
| |||