கறையான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5
 
"{{cleanup-reorganize|date=மார்ச் 2016}} {{Taxobox | fossil_range = {{fossilrange|228|0}}<small>(20 கோடி ஆண்டுகளுக்கு முன்) கிரீத்தேசியக் காலம்-இக்காலம்</small> | image = Coptotermes formosanus shiraki USGov k8204-7.jpg | image_caption = பல்வகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 33:
கறையான்கள் ஏறத்தாழ 20 [[கோடி]] ஆண்டுகளுக்கு முன்னரும், இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை, அதற்குரிய [[தொல்லுயிர் எச்சம்]] மற்றும் [[அம்பர்]] உறுதி செய்கின்றன. கறையான்களை<ref group="கு">Termites - கறையான்கள்</ref>, ''வெள்ளை எறும்புகள்'' <ref group="கு">White ants - வெள்ளை எறும்புகள்</ref> என்றும் அழைக்கின்றனர். இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே, நமக்கு [[பொருளாதாரம்|பொருளாதார]] சீர்கேட்டை உருவாக்கும். மற்றவை, தேவையில்லாதவைகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட நுட்பங்களை நாம் அவசியம் அறிய வேண்டும்.
 
===உயிரின வேறுபாடு===
இவை [[எறும்பு]]களைப் போல காணப்பட்டாலும், [[அறிவியல் வகைப்பாடு|உயிரின வகைப்பாட்டின்]] படி ஆராய்கின்ற போது கறையான்கள், எறும்புகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன<ref>எறும்பு எதிர் கறையான் = [http://www.grantext.com/images/Ants_vs_Termites.jpg வரைப்படத்துடனான வேறுபாடுகள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110203082608/http://www.grantext.com/images/Ants_vs_Termites.jpg |date=2011-02-03 }}</ref>. எறும்புகளைச் ''சமமற்ற இறகிகள்'' என்ற [[வரிசை (உயிரியல்)|உயிரினவரிசையில்]] தொகுத்துள்ளனர்.
 
வரிசை 43:
கறையான்கள் தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப, தமது இடத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. எனவே, [[மண்]]ணின் கீழ், மண்ணின் மேல், மரக்கிளைகளில் என வேறுபட்டு வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில், ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதற்கு தகுந்தபடி தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. அவைகளின் நிலவசிப்பிடத்தினைப் "புற்று" என்பர். இப்புற்றுகள், பல்வேறு காரணிகளால் மாறுபட்டு, பலவிதமாக உருவாகின்றன.
 
===புற்றுக்காரணிகள்===
கிடைக்கும் [[உணவு]], மண்ணின் தன்மை, [[இயற்கை]]ச் சீற்றம் ஆகியவற்றால் புற்று/கூடு மாறுபடுகிறது. இவற்றின் அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமாக இருக்கிறது. ''சமஇறகிகள்'' என்ற கறையான் வரிசையில், 7 [[குடும்பம் (உயிரியல்)|கறையான் குடும்பங்கள்]] உள்ளன. அவை, இப்பக்கத்தின் வலமேலுள்ள, அறிவியல் வகைப்பாட்டுக் கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு கறையான் குடும்பமும் முறையான பேரினங்களையும், சிற்றினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. கறையான்களில், ஏறத்தாழ 275 [[பேரினம் (உயிரியல்)|கறையான் பேரினங்களும்]], அவற்றிற்குரிய 2750 [[இனம் (உயிரியல்)|கறையான் சிற்றினங்களும்]] உள்ளன.
* பல புற்றுகள், அடுத்தடுத்து அமைந்து, பரந்த நிலப்பரப்பில் கறையான் திட்டுகளாகவும் இருக்கிறது.
வரிசை 49:
[[படிமம்:Termite mounds.jpg|கறையான் திட்டுகள், [[சாம்பியா]]|thumb|center]]
{{clear}}
=== மெக்சிகோவின் மரக்கூடு ===
* கறையான்களின் வசிப்பிடம், மரக்கிளைகளில் இருந்தால் "கூடு" என்று பெயர். இக்கூட்டினுள் பல அறைகள் இருக்கும். இராணிக் கறையானுக்கு தனி அறை, உணவு சேமிக்கும் அறை, [[நீர்|தண்ணீர்]] அறை, குஞ்சுகளுக்கான அறை என தனித்தனித் தேவைகளுக்கு, ஒவ்வொரு அறையாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒட்டு மொத்தக் கூடும், மரத்தின் கீழுள்ள நிலத்துடன் ''தரைத்தொடர்குழாய்'' மூலம் இணைக்கப்பட்டிருக்கும். அக்குழாயும் மூடிய நிலையிலேயே அமைந்திருக்கிறது. இதனால் [[காற்று]], [[மழை]], [[பறவை]]கள் போன்றவற்றின் இன்னல்களிடமிருந்து, பாதுகாப்புக் கிடைக்கிறது.
<gallery>
வரிசை 59:
</gallery>
 
=== பன்னாட்டுப் புற்றமைவுகள் ===
* ஒவ்வொரு நாட்டிலும் அமைந்துள்ள புற்றுகள், ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகின்றன. அங்குள்ள மண்ணின் தன்மை, நிலவும் [[தட்பவெப்பம்]], [[மழை]]ப் பொழிவு, கிடைக்கும் [[உணவு]], புற்றுக்கு பிற உயிரிகளால் விளையும் ஆபத்துகள் போன்றவைகள், புற்றின் உயரம், நிறம் மற்றும் அமைப்பினைக் கட்டுபடுத்தும் காரணிகளாக விளங்குகின்றன.
 
வரிசை 109:
[[படிமம்:White Ants (Termites)147.jpg|வெள்ளை எறும்புகள் = கறையான்கள்|thumb|right|240px]]
 
=== புற்றின் காற்றோட்டம் ===
புற்றின் நடுவில், ஒரு உள்ளீடற்ற குழாய்<ref group="கு">உள்ளீடற்ற குழாய் = Central chimney</ref> புற்றின் உச்சி வரை நீண்டிருக்கும். புற்றின் மண்சுவரில், மேற்பரப்பிலிருந்து 2 [[மீட்டர்|செ.மீ.க்குள்]], நம் உடலின் [[இரத்தம்|இரத்த]] நாளங்களைப் போன்று, எண்ணற்ற அடிப்பரப்புக் குழாய்கள்<ref group="கு">அடிப்பரப்புக் குழாய் = Surface conduit</ref> இருக்கும். இவை இரண்டையும் இணைக்கும் பக்கவாட்டு இணைப்புக்குழாய்<ref group="கு">பக்கவாட்டு இணைப்புக் குழாய் = Lateral connectives</ref> இருக்கும்.
 
வரிசை 116:
இவ்விதங்களில் அடிப்பரப்புக் குழாய்கள், உரிய துளைகள் மூலம், பூமியின் [[தட்பவெப்பநிலை]]யுடன் தொடர்பு கொள்கிறது.
 
===காற்றுப்பரிமாற்றம்===
கறையான்களின் வளர்சிதை மாற்றங்களால் உருவாகும் [[வெப்பம்]] மற்றும் [[நீராவி]] ஆகியன, ஒருவித மிதவை உந்து விசைகளை <ref group="கு">மிதவை உந்து விசை = Buoyant forces</ref> உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் [[காற்று]], உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே வருகிறது.
 
வரிசை 151:
</gallery>
 
=== இராணிக் கறையான் ===
ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு, இராணிக்கரையானின் [[வயிறு|அடிவயிறு]] வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 [[மீட்டர்|செ.மீ]] வரை வளரும். <ref group="கு">இது Physogastry எனப்படும்.</ref>
புற்றின் ஆரம்ப காலத்தில், இராணி இடத்தை தேர்ந்தெடுத்து, சிறுகுழி பறித்து முட்டைகள் இடும். இராணிக் கறையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 [[முட்டை]]கள் வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 [[நொடி]]க்கும், ஒரு [[முட்டை]] வைக்கும். இராணிக்கறையான்களின் வாழ்நாள் 15-25 [[ஆண்டு]]கள் ஆகும். வாகைக் கறையான்களும், பணிக்கறையான்களும் எண்ணிக்கை குறையும் போது, அவற்றிற்கே உரிய நாற்றம் குறையும். இதனை அறிந்த இராணிக்கறையான், அவைகளுக்கான முட்டைகளை வைத்து அவ்வெண்ணிக்கையை பெருக்கச் செய்யும். வாழிடம் சரியில்லாத போது, இராணிக்கறையான் [[இடப்பெயர்ச்சி]] செய்ய, மற்ற கறையான்களுக்குக் கட்டளையிடும். முட்டையிடும் பெரிய இராணிக்கறையான், எப்பொழுதும் தனது நகரும் தன்மையை இழப்பதில்லை. ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும். முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்.
 
===ஆண்கறையான்கள்===
சில சிற்றினங்களில் மட்டுமே, ஆண் கறையான் இறந்தாலும், மற்றொரு [[ஆண்]] கறையான், இராணிக்கறையானுடன் கலவி புரிந்து இனப்பெருக்கம் செய்யும். இராணிக்கறையானின் [[முட்டை]]களிலிருந்து பொரிந்து வரும் குஞ்சுகளை, ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன், குஞ்சுகளைப் பாதுகாக்கும் பணியினை, பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும் [[சூரியன்|சூரிய]] ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால், அவை இறந்து விடும்.
 
இவற்றுள் வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத் தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கறையான் தன் உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பினை<ref group="கு">இராணி [[ஃபெரமோன்]] = Queen pheromone</ref> உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே ஏற்படுகிறது.
 
===வாகைக் கறையான்கள்===
வாகைக்கறையான்களுள் இரண்டு வகை உண்டு.
# பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன் இருக்கும். <ref group="கு">அரிவாள் கறையான் - Mandibulate Soldiers</ref> இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி விடும்.
# துப்பிக்கறையான் <ref group="கு">துப்பிக்கறையான் - Nasute Soldiers</ref> - இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி விடும்.
 
===பணிக்கறையான்கள்===
பணிக்கரையான்கள் தங்கள் [[உமிழ்நீர்|உமிழ்நீரையும்]], மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும். அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு [[ஆண்டு]]களில் இறந்து விடும்.
 
===ஈசல்கள் ===
புற்றுகள் பல பிற இடங்களிலும் பரவி இனப்பெருக்கம் செய்ய இராணிக்கறையான், சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அம்முட்டைகளிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள். அவை ஒருநாள் உயிரி என கருதப்படுவது தவறு. தப்பிப்பிழைக்கும் ஈசல்கள், இணையுடன் பூமிக்குள் இணை சேர்ந்து, முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. அவை தனித்துவமான புதிய புற்றை உருவாக்குகிறது. இப்புற்று, வெளியேறிய புற்றிலிருந்து வேறுபட்டும், இனப்பெருக்கத்தால் தோன்றும் இளங்கறையான்களும் தனித்துவங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.
 
வரிசை 233:
ஒருவகை கொட்டையும் சேர்த்து வருத்து பொடிசெய்து ஆடி,ஆவணி மாதங்களில் பூமியும் புற்றும் ஈரமாக இருக்கும்போது இரவில் புற்றின்மீது பொடியை தூவினால் லாந்தர் விளக்கு ஒளியால் கவரப்பட்டு வெளி வரும் ஈசல்களை சேகரித்து இறகுகளை நீக்கி வருத்து உலர்த்தி பின் கையால் தேய்த்து கால்கள் தலைகளை புடைத்து சுத்தமாக்கி பின் உண்கின்றனர்.
 
=== உணவுச் செரிமானம் ===
கறையான்களின் [[உணவு|உணவில்]] பெரும்பாலும் [[செல்லுலோசு]] உள்ளது. [[தாவரம்|தாவரங்களிலுள்ள]] செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற [[நொதி]] கறையான்களுக்கு இல்லை.
கறையான்கள் தங்கள் குடலில் [[புரோட்டோசோவா]]க்களுக்கு உணவும் உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக, Protozoa க்கள் கரையான்களுக்கு, செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்.
"https://tamilar.wiki/w/கறையான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது