ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
வரலாறு: புள்ளித் திருத்தம்
 
No edit summary
 
வரிசை 45:
வட தமிழகத்தில் வடம் [[மஞ்சுவிரட்டு]] என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
 
==== மஞ்சு விரட்டு ====
மஞ்சு விரட்டு என்பது தமிழகத்தில், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையாட்டு. "மஞ்சி" என்பது தாளை வகை [[கற்றாழை]] நார் கொண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும். "மஞ்சி கயிற்றால்" மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பு, புத்தாடைகள், சலங்கை மணிகள் ஆகியவற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டி சென்று பிடிக்கும் விளையாட்டு மஞ்சி விரட்டு விளையாட்டு ஆகும். பிற்காலத்தில் "மஞ்சி" என்ற சொல் மருவி "மஞ்சு விரட்டு" ஆனது.
 
வரிசை 87:
|}
 
=== சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல் ===
சங்க இலக்கியமான [[கலித்தொகை]]
{{quotation|கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்<br />புல்லாளே ஆய மகள்.
வரிசை 98:
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய [[முல்லை (திணை)|முல்லை நிலத்]]தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.<ref>மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்</ref>
 
=== ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும் ===
ஏறு தழுவலுக்கும் [[குரவைக் கூத்து|குரவைக் கூத்திற்]]கும் தொடர்பிருந்தது.<ref>சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18</ref> குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.
 
வரிசை 118:
[[படிமம்:Bull Taming, Alanganallur, India.jpg|thumb|2011 ஆம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் சல்லிக்கட்டில் கிட்டி வாசலில் இருந்து சீறி வரும் காளையை அடக்கிப் பிடிக்கும் வீரர்.]]
 
=== ஆதரிப்போர் கருத்து ===
சல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடாகக் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.<ref>"சல்லிக்கட்டு" - ''தினகரன்'', சனவரி 8, 2012, பக். 7 (நாகர்கோவில் பதிப்பு)</ref>
 
=== எதிர்ப்போர் கருத்து ===
சல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்குக் கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம். கேரளாவில் இன்னொரு விலங்கை மனிதனின் களியாட்டங்களுக்கு பாவிப்பதையும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதைவிட கடுமையான நிகழ்வுகளையும் தடை செய்தால்தான் இதையும் தடைசெய்ய முடியும் என்ற சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் இவர்கள் மறுக்கின்றார்கள். ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி அடிப்படையிலேயே தவறாக இருப்பதால் அதை விட்டுக்கொடுத்து விலங்குகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமன்றி சல்லிக்கட்டு என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் பண்பாடு அல்லாது ஒரு சில மாவட்டங்களிலுள்ள சில மக்கட்பிரிவின் அடையாளம் என்ற வாதமும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.
 
=== 2008-11 ===
சல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் [[மேனகா காந்தி]] வழக்கு தொடர்ந்தார். [[இந்திய உச்ச நீதிமன்றம்]] சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ள ”தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது. இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியலிட்டது. தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர்.<ref>{{Cite web |url=http://news.outlookindia.com/items.aspx?artid=747510 |title=TN: HC Allows Holding of 'Jallikattu' on Pongal |access-date=2012-01-23 |archive-date=2012-01-17 |archive-url=https://web.archive.org/web/20120117011345/http://news.outlookindia.com/items.aspx?artid=747510 |url-status=dead }}</ref><ref>[http://www.tn.gov.in/stationeryprinting/extraordinary/2009/181-Ex-IV-1.pdf Tamil Nadu Regulation of Jalli Kattu Act 2009]</ref><ref>[http://www.indianexpress.com/news/sc-lifts-ban-on-jallikattu/261787/ SC lifts ban on Jallikattu]</ref>
 
வரிசை 137:
இது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவை ஒட்டி சல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011 இல் சல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தன.<ref>{{Cite web |url=http://www.animalpeoplenews.org/anp/2011/09/03/progress-against-public-bullfighting-in-tamil-nadu-but-not-in-uttarakhand/ |title=Progress against public bull fighting |access-date=2012-01-23 |archive-date=2011-10-02 |archive-url=https://web.archive.org/web/20111002212810/http://www.animalpeoplenews.org/anp/2011/09/03/progress-against-public-bullfighting-in-tamil-nadu-but-not-in-uttarakhand/ |url-status=dead }}</ref> பொங்கல் முடிந்த பின்னரும் 2011 இல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 இல் சல்லிக்கட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது.<ref>[http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1518331.ece Supreme Court imposes fresh guidelines on jallikattu]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}</ref> சல்லிக்கட்டை எதிர்த்து 2011 இல் உச்சநீதிமன்றத்தில் மேலுமொரு மனு பெடா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.hindu.com/2011/04/13/stories/2011041363630900.htm |title=Supreme Court admits petition challenging jallikattu law |access-date=2012-01-23 |archive-date=2011-08-15 |archive-url=https://web.archive.org/web/20110815015552/http://www.hindu.com/2011/04/13/stories/2011041363630900.htm |url-status=dead }}</ref> 2011, சூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த [[ஜெய்ராம் ரமேஷ்]] ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குகளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் "காளை" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது.
 
=== 2012 ===
ஒன்றிய அரசின் மேற்கூறிய கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.<ref>"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு" - ''தினகரன்'', சனவரி 8, 2012, பக். 5 (நாகர்கோவில் பதிப்பு)</ref>
 
வரிசை 150:
*காளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும்.
 
=== 2014 ===
மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140507_jallikattu.shtml ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை]</ref><ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=63417 | title=ஜல்லிக்கட்டுக்கு தடை | publisher=[[தீக்கதிர்]] | access-date=8 மே 2014 | archive-date=2016-03-04 | archive-url=https://web.archive.org/web/20160304184203/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=63417 |url-status=dead }}</ref> இதனை எதிர்த்து [[மதுரை]] மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=64767 | title=சல்லிக்கட்டுக்கு தடை கூடாது தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் : | publisher=[[தீக்கதிர்]] | date=20 மே 2014 | access-date=20 மே 2014 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305232651/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=64767 |url-status=dead }}</ref>
 
=== 2016 ===
ஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/india-news-india/centre-lifts-ban-on-jallikattu-tn-politicians-welcome-move/ | title=Centre lifts ban on Jallikattu, TN politicians welcome move | publisher=indianexpress. | accessdate=8 சனவரி 2016}}</ref> [[இந்திய விலங்குகள் நல வாரியம்]] ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக [[பெட்டா]] அமைப்பு கூறியது.<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/india-news-india/peta-india-slams-governments-move-to-allow-tns-popular-jallikattu/ | title=Jallikattu: No clearance given, says AWBI; will move SC says PETA India | publisher=indianexpress | accessdate=8 சனவரி 2016}}</ref> பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுமதியை எதிர்த்து திங்கள் கிழமை [[இந்திய உச்ச நீதிமன்றம்]] சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது.<ref>{{cite web | url=http://www.bbc.com/news/world-asia-india-35290272 | title=Jallikattu: India court says Tamil Nadu bullfighting ban remains | publisher=பிபிசி | accessdate=14 சனவரி 2016}}</ref><ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/india-news-india/supreme-court-stays-conduct-of-jallikattu-in-tamil-nadu/ | title=After Centre allowed Jallikattu, Supreme Court stops it, Jayalalithaa asks Modi for ordinance | publisher=இந்தியன் எக்சுபிரசு | accessdate=14 சனவரி 2016}}</ref>
 
=== 2017 ===
{{முதன்மைக் கட்டுரை|2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்}}
 
"https://tamilar.wiki/w/ஏறுதழுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது