ஓரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>CommonsDelinker
Replacing Wedjat_(Udjat)_Eye_of_Horus_pendant.jpg with File:Eye_of_Ra_pendant.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · The [[:Category:Eye of Horus|Eye of
 
No edit summary
 
வரிசை 17:
'''ஓரசு''' (''Horus'') [[பண்டைய எகிப்தின் சமயம்|பண்டைய எகிப்தின் சமயத்தின்]] முதன்மைக் கடவுளாவார். [[வல்லூறு|வல்லூறின்]] வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு [[வானம்]], [[போர்]], [[வேட்டையாடுதல்]] ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. p. 202.</ref> இவருடைய வலது கண் [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறு]] கடவுள் [[இரா|ரா]]வாகவும் இடது கண் [[நிலா|திங்கள்]] கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் [[ஒசைரிஸ்|ஓசிரிசு]]-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி [[ஆத்தோர்]] ஆவார். ஓரசு கடவுளின் [[சென் மோதிரம்]] மற்றும் [[ஓரசு கடவுளின் கண்|ஓரசு கண்]] சின்னம் பாதுகாப்பு மற்றும் நல் வாழ்வு வழங்கும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினர்.
 
===ஓரசு மற்றும் சேத்===
[[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான [[சேத் கடவுள்|சேத்]] என்பவர், ஓரசின் தந்தை [[ஒசைரிஸ்|ஓசிரிசை]] கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் [[இசிசு|இசிசுவின்]] கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் ஓரசு கடவுள், சேத்துடன் போர்புரிந்தார்.<ref>{{Cite web |url=http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html |title=Ancient Egyptian Culture |access-date=2016-08-04 |archive-date=2010-06-04 |archive-url=https://web.archive.org/web/20100604111722/https://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html |url-status=dead }}</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை (நிலா), சேத் கடவுள் குத்தியதால் அதன் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்துவிடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் மட்டுமே வாழக் காரணம் என்று நம்பப்படுகிறது.
 
===ஓரசின் கண் மற்றும் சென் மோதிரம்===
{{முதன்மை|ஓரசு கடவுளின் கண்}}
{{முதன்மை|சென் மோதிரம்}}
"https://tamilar.wiki/w/ஓரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது