ஒளியிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி வரலாறு: clean up, replaced: தொழில்நுட்பம் → தொழினுட்பம்
 
No edit summary
 
வரிசை 23:
 
== பயன்கள் ==
===ஒளியிழை தொடர்பு===
ஒளியிழை என்பது [[கணினி வலையிணைப்பு]] களிலும், [[தொலைதொடர்பு]]த் துறைகளிலும் ஒரு ஊடகமாக பயன்படுகிறது, ஏனென்றால் இவை எளிய முறையில் [[ஒளிவடம்]] செய்வதாகவும் உள்ளது. இது குறிப்பாக வெகு தூர கடத்திகளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இவை ஒளியை கடத்தும் பொழுது மின்சார வடத்தினை காட்டிலும் சிதறல்கள் (ஆற்றல் குறைதல்) குறைவாகவே உள்ளது. இவை குறைந்த [[மீட்டுருவாக்கி]]களை கொண்டே வெகு தொலைவு ஒளியை கடத்த பயன்படுகின்றன . இதனோடு , ஒளியிழைகளில் பரவிய ஒற்றை-புகுபாதை ஒளிக் குறிகைகள் கடத்து வீதத்தை உயர்வான 111 Gbps வரை வீச்ச மாற்றங்கள் (modulation) செய்யமுடியும் என்று நிப்பான் தொலைத்தந்தி மற்றும் தொலைபேசி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது . ஆயினும் 10 அல்லது 40 Gbps உள்ள ஒரு தொடர்பு குறிப்பாக பிரித்த அமைப்புகளாகும் . ஒவ்வொரு ஒளியிழையிலும் எத்தனை புகுபாதைகளை (channels) வேண்டுமானாலும் அமைக்கலாம் ; ஒவ்வொன்றும் வெவ்வேறு ஒளி அலைநீளத்தை பயன்படுத்தும் ( [[அலைநீள பகு பன்னமைப்பு]] (Wavelength-division Mutiplexing)) . ஒற்றை புகுபாதை தரவு விகிதம் FEC Overhead குறைத்து , புகுபாதையின் எண்ணிக்கையை பெருக்குவது ஒரு ஒளியிழையின் சராசரி தரவு விகிதம் ஆகும் . [[பெல்]] ஆய்வகத்தில் நடக்கும் நடப்பு ஆய்வக ஒளியிழை [[தரவு விகிதம்]] 155 புகுபாதைகளை அமைத்து சுமார் 7000 [[கி.மீ]] தொலைவை 100 Gb/s வேகம் கொண்டதாக உள்ளது .
 
சிறு தொலைவு பயன்பாடுகளில் , அதாவது ஒரு அலுவலகத்திக்குள் உருவாக்கும் வலையிணைப்பு போன்றவற்றில் , ஒளியிழை வட அமைப்பானது வட நாளங்களின் இடத்தை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது . இது எதனால் என்றால் , நாளிணை [[காட்-5]] ஈத்தர்நெட் வட அமைப்பு போன்று , ஒரு ஒளியிழை மின் வடங்களை காட்டிலும் பன்மடங்கு தரவுகளை எடுத்துச்செல்லும். மேலும் இவை மின்சார விளைவுகள் தடுப்பு திறன் கொண்டவை ; வெவ்வேறு வடங்களின் குறிகைகளுக்கிடையில் குறுக்கு பரிமாற்றங்கள் ஏற்படாது ; சூழல் சத்தம் குறிக்கிடாது .
 
=== ஒளியிழை உணரிகள் ===
[[ஒளியிழை உணரி]]கள் வெப்பம், அழுத்தம், முதலியவற்றை உணரக்கூடிய கருவியாகும் . அவ்வாறு உணரும் தன்மையை வைத்து நாம் உணர்ந்தவையை அளக்கப் பயன்படுத்துகிறோம் . இவ்வகையான ஒளியிழை பெரிதும் ஒளியினை உணர்கின்றன . ஆகையால் இதைக்கொண்டு தரவுகளை , பிம்பங்களை உணரும் அறியும் ஒரு கருவியாக பயன்படுகின்றன .
 
=== வேறு பயன்பாடுகள் ===
ஒளியிழைகளை பல்வேறு துறைகளில் பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்துகின்றனர் . இயற்கை மற்றும் செயற்கை மரங்களுக்கு ஒளியூட்டமாகவும் பயன்படுத்துகின்றனர் . பாதுகாப்பு சாதனமாகவும் , தரவு சரிபார்ப்புகளுக்கும் இதனை பயன்படுத்துகின்றனர் . மின்னூலகத்தில் இதன் பயன்பாடு அலாதியாகும் .
 
வரிசை 37:
கண்ணாடி ஒளியிழை என்பது [[முழு அக எதிரொளிப்பு|மொத்த உட்புற எதிரொளிப்பினால்]] ஒளியை தனது நேரச்சில் கடத்தும் உருளையான மின்காப்பு [[அலைநடத்தி]] ஆகும் . ஒளியிழை மின்காப்பு பொருளினால் உருவாக்கிய அச்சுள்ளையும் , அதை சுற்றிய மின்காப்பு அச்சுறையையும் கொண்டிருக்கும் . ஒளிக் குறிகையை ஒளியிழையின் அச்சுள்ளிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால் , அச்சுறையை விட அச்சுள்ளிற்கு [[ஒளிவிலகல் குறிப்பெண்]] அதிகமாக இருக்க வேண்டும் . அச்சுளிற்கும் அச்சுறைக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதி [[படிமாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் படிப்படியாகவும் ,[[சீர்மாற்று ஒளியிழை]]யில் உள்ளார்ப்போல் சீராகவும் இருக்கலாம் .
 
===ஒளிவிலகல் குறிப்பெண் ===
 
ஒளிவிலகல் குறிப்பெண் என்பது ஒரு பொருளில் ஊடுருவும் ஒளியின் வேகத்தை கணிப்பதற்கான வழி ஆகும் . ஒளி [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] தான் வேகமாக செல்ல முடியும் . [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] ஒளியின் வேகம் நொடிக்கு சுமார் 300,000 [[கி.மீ]] இருக்கும் . ஒளியிழையின் அச்சுள்ளில் செல்லும் ஒளியானது அச்சுறையின் சுவர்களில் முன்னும் பின்னுமாக மோதி மோதிச்செல்லும் . அவ்வாறு செல்லும் ஒளியானது தனது எல்லையை சரியாக கடக்க வேண்டும் ஆனால் ஒளியானது [[மாறுதிசைக் கோணம்|மாறுநிலைக் கோணத்தை]] விட அதிகளவு கோணத்தில் செலுத்தப்படவேண்டும் . இல்லையேல் அவ்வொளி கசிந்து வேறு எல்லைக்கு சென்று விடும் . இந்த குறிப்பிட்ட கோணங்களுக்கு இடையில் உள்ளப் பகுதியை [[ஏற்புக்கூம்பு]] என்றழைக்கப்படும் .
 
===மொதத் உட்புற எதிரோளிப்பு===
 
ஒளி அதிக அடர்த்தி பொருளில் இருந்தது குறைந்த [[அடர்த்தி]] பொருளுக்கு செல்லும் போது [[ஒளி விலகல்]] ஏற்படுகிறது. இந்த ஒளி விலகல் ஒளி விழும் கோணத்தை (Angle of Incidence) பொருத்து வேறுபடுகிறது. இந்த கோணம் அதிகரிக்க அதிகரிக்க விலகு கோணமும் அதிகரிகின்றது. ஒரு குறிபிட்ட விழும் கோணத்திற்கு விலகு கோணம் 90 டிக்ரி அடைகிறது. அதற்கு மேல் விழும் கோணம் அதிகரிக்கும் பொழுது ஒளி அதே ஊடகத்தினுள் எதிரொளிகப்படுகிறது. இதை மொதத் உட்புற எதிரோளிப்பு (Total Internal Reflection) எனபடுகிறது.<ref>{{cite book|author=Gerg Keiser |title=Optical Fiber Communications|url=https://books.google.co.in/books?id=5JeN4QhYo8kC&pg=PR2&lpg=PR2&dq=optical+fiber+communication+by+gerd+keiser&source=bl&ots=Z_YXnWtYax&sig=Aldd-4o6B-ZdeukJbOqyV-AHIEo&hl=en&sa=X&ved=0ahUKEwi9-q6CgpHMAhVSkY4KHcaWCd0Q6AEIHTAB#v=onepage&q&f=false}}</ref>
"https://tamilar.wiki/w/ஒளியிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது