ஔரசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" '''ஔரசம்'''; (Legitimacy (family law)) ஒருவருக்குச் சட்டப்பூர்வமாக மணமான மனைவியிடம் பிறக்கும் குழந்தை ஔரசக் குழந்தையாகும். தாம்பத்திய நிலையுள்ள காலத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
வரிசை 1:
 
'''ஔரசம்'''; (Legitimacy (family law)) ஒருவருக்குச் சட்டப்பூர்வமாக மணமான [[மனைவி]]யிடம் பிறக்கும் குழந்தை ஔரசக் குழந்தையாகும். தாம்பத்திய நிலையுள்ள காலத்தில் ஒருத்திக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஔரசக் குழந்தை ஆகும். கணவன் மரணமடைந்து விட்டாலோ அல்லது வேறு காரணத்தினாலோ தாம்பத்தியம் இல்லாமலிருந்த பின்பும் கூட 280 நாட்களுக்குள் பிறக்கும் குழந்தையும் முறையான சட்டப்பூர்வமான குழந்தையாகவே கருதப்படும். ஆனால் இவ்வாறு கருத வேண்டுமாயின் இயற்கை முறைப்படி குழந்தையுண்டாகக் கூடும் காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் சேருவதற்குச் சந்தர்ப்பமில்லாமல் இருக்கக் கூடாது. அதனுடன் அவர்கள் மக்கட்பேற்றுக்குத் தகுதியற்றவர்கள் என்பதும் நிருபனம் ஆகியிருக்கக் கூடாது. எனினும் இந்த அனுமானம் மறுக்க முடியாத அனுமானமல்ல. இதற்கெதிரான சந்தர்ப்ப சாட்சியஙக்ள் மூலம் இந்த அனுமானம் மாற்றப்படலாம். ஆனால் இம்மாதிரியான சாட்சியம் வலுவானதாகவும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஐயத்துக்கு இடமாக இருக்கக்கூடாது.<ref>{{cite web|url=http://www.parliament.nsw.gov.au/prod/web/common.nsf/key/HistoryBeforeEuropeanSettlement|title=1788 - Before European Settlement|access-date=2012-03-20|archive-url=https://web.archive.org/web/20120205181214/http://www.parliament.nsw.gov.au/prod/web/common.nsf/key/HistoryBeforeEuropeanSettlement|archive-date=2012-02-05}}</ref><ref>{{cite book |last=Macfarlane |first=Alan |chapter=Illegitimacy and illegitimates in English history |chapter-url=http://alanmacfarlane.com/TEXTS/bastardy.pdf |title=Bastardy and its comparative history |year=1980 |publisher=Arnold |editor-last=Laslett |editor-first=Peter |display-editors=etal |via=Alanmacfarlane.com }}</ref><ref>William Blackstone (1753), ''Commentaries on the Laws of England'', Book II, Chapter XV "Of Title by Purchase and I. Escheat", Section 5.</ref>
 
கணவனும் மனைவியும் நீதிமன்ற உத்தரவுப்படியோ, அல்லது பரஸ்பர உடன்பாட்டின் பேரிலோ பிரிந்து தனி வாழ்வு வாழ்ந்து வரும் காலத்தில் பிறக்கும் குழந்தை முறையாகப் பிறந்ததாகக் கருதப்பட வேன்டியதில்லை. மேலும் பிரிந்து வாழ ஆரம்பித்து 9 மாதங்களுக்குப் பிறகு பிறக்கும் குழந்தையும் இந்த 9 மாத கால வரையறைக்குள் கணவனும் மனைவியும் மறுபடியும் சேர்ந்தார்கள் என்று நிரூபிக்கப்படாத பட்சத்தில் முறையாகப் பிறக்காத குழந்தையாகவேக் கருதப்படும். கணவனுடன் வாழும் மனைவி எத்தனை ஆடவர்களுடன் பாலுறவு கொண்டிருந்தாலும் அவளுக்குப் பிறக்கும் குழந்தை முறைப்படி பிறந்த குழந்தை என்ற பாவனை தொடர்ந்து இருந்துவரும்.
"https://tamilar.wiki/w/ஔரசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது