கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
 
No edit summary
 
வரிசை 99:
கருநாடக வரலாற்றை அப்பகுதியில், கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://metalrg.iisc.ernet.in/~wootz/heritage/K-hertage.htm|title=THE Golden Heritage of Karnataka|author=S. Ranganathan|work=Department of Metallurgy|publisher=Indian Institute of Science, Bangalore|accessdate=2007-06-07|archive-date=2007-01-21|archive-url=https://web.archive.org/web/20070121024542/http://metalrg.iisc.ernet.in/~wootz/heritage/K-hertage.htm|url-status=unfit}}</ref><ref>{{cite web |url=http://www.ancientindia.co.uk/staff/resources/background/bg16/home.html|title= Trade |accessdate=2007-05-06 |publisher=[[பிரித்தானிய அருங்காட்சியகம்]]}}</ref> பண்டைய [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின்]] எச்சமான [[ஹரப்பா]]வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் வழியே கருநாடகப் பகுதி பண்டைய காலம் தொட்டே வணிகம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. [[பொது ஊழி|பொ.ஊ.]] 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. [[சாதவாகனர்]]களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான [[கதம்பர்|கடம்பர்]]கள் மற்றும் [[மேலைக் கங்கர்|மேலைக் கங்க]] வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வழிமரபு, [[பனவாசி]]யை தலைநகராக கொண்டது.<ref name="origin">From the [[Talagunda]] inscription (Dr. B. L. Rice in Kamath (2001), p. 30.)</ref><ref name="origin1">Moares (1931), p. 10.</ref> அது போல், [[மேலைக் கங்கர்]] மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.<ref name="gan">Adiga and Sheik Ali in Adiga (2006), p. 89.</ref><ref name="gan1">Ramesh (1984), pp. 1–2.</ref>
 
=== கடம்பர், சாளுக்கியர் ===
கடம்பர் மரபைச் சார்ந்த முதலாவது அரசாங்கங்கள் கன்னட மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு வழியாகவும் மற்றும் [[பொது ஊழி|பொ.ஊ.]] ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் வழியாகவும் அறியலாம்.<ref name="first">From the Halmidi inscription (Ramesh 1984, pp. 10–11.)</ref><ref name="hal">Kamath (2001), p. 10.</ref> இவ்வம்சத்தைத் தொடர்ந்து [[சாளுக்கியர்]] வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.<ref name="cha">The Chalukyas hailed from present-day Karnataka (Keay (2000), p. 168.)</ref><ref name="cha1">The Chalukyas were native ''[[கன்னடர்]]'' (N. Laxminarayana Rao and Dr. S. C. Nandinath in Kamath (2001), p. 57.)</ref><ref name="rash">Altekar (1934), pp. 21–24.</ref><ref name="rash1">Masica (1991), pp. 45–46.</ref><ref name="west">Balagamve in Mysore territory was an early power centre (Cousens (1926), pp. 10, 105.)</ref><ref name="west1">Tailapa II, the founder king was the governor of Tardavadi in modern Bijapur district, under the Rashtrakutas (Kamath (2001), p. 101.)</ref> சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றைப் பெரிதும் வளர்த்தனர்.<ref name="unique">Kamath (2001), p. 115.</ref><ref name="flow">Foekema (2003), p. 9.</ref>
 
=== விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி ===
[[படிமம்:Tipu Sultan BL.jpg|thumb|left|100px|[[திப்பு சுல்தான்]]]]
[[பொது ஊழி|பொ.ஊ.]] 1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த [[விசயநகரப் பேரரசு]] இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது. சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன.
வரிசை 158:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/karnataka.html</ref>
 
===சமயம்===
ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் [[இந்து சமயம்|இந்து சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) [[இசுலாம்|இசுலாம் சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) [[கிறித்தவம்|கிறித்தவ சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) [[சமணம்|சமண சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) [[பௌத்தம்|பௌத்த சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) [[சீக்கியம்|சீக்கிய சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது.
 
===மொழிகள்===
கருநாடகம் மாநிலத்தில் [[கன்னடம்|கன்னட மொழி]] அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, [[தமிழ்]], [[மராத்தி]], [[கொங்கனி]], [[மலையாளம்]], [[துளு]], [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[உருது]] மற்றும் [[இந்தி]] ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.
 
"https://tamilar.wiki/w/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது