குகேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox chess biography | name = குகேஷ் தொம்மராஜு<br/>Gukesh Dommaraju | image = Alireza Firouzja - Gukesh D, Candidates Tournament 2024 03 (cropped).jpg | caption = 2024 வேட்பாளர் சுற்றுப் போட்டியில் குகேசு | full_name = தொம்மராஜு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Kanags
Kanags பக்கம் குகேஷ் என்பதை குகேஷ் தொம்மராஜு என்பதற்கு நகர்த்தினார்
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[குகேஷ் தொம்மராஜு]]
{{Infobox chess biography
| name = குகேஷ் தொம்மராஜு<br/>Gukesh Dommaraju
| image = Alireza Firouzja - Gukesh D, Candidates Tournament 2024 03 (cropped).jpg
| caption = 2024 வேட்பாளர் சுற்றுப் போட்டியில் குகேசு
| full_name = தொம்மராஜு குகேஷ்
| country = இந்தியா<!-- DO NOT ADD FLAG -->
| birth_date = {{Birth date and age|2006|05|29|df=y}}
| birth_place = [[சென்னை]], தமிழ்நாடு, இந்தியா
| title = [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாசுட்டர்]] (2019)
| rating =
| peakrating = 2758 (செப்டெம்பர் 2023)
| peakranking = No. 8 (செப்டெம்பர் 2023)
| FideID = 46616543
| medaltemplates =
{{MedalCountry|{{IND}}}}
{{MedalCompetition|[[ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]]}}
{{Medal|Silver|[[2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|2022 ஆங்சூ]]|ஆண்கள் அணி}}
}}
'''தொம்மராஜு குகேஷ்''' (''Dommaraju Gukesh'', பிறப்பு: 29 மே 2006) இந்திய [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|சதுரங்கப் பேராதன்]] ஆவார். [[சதுரங்க மேதை]]யான இவர், பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற வரலாற்றில் மூன்றாவது-இளையவரும், 2700 என்ற [[எலோ தரவுகோள் முறை|சதுரங்க மதிப்பீட்டை]] எட்டிய மூன்றாவது-இளையவரும், 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவரும் ஆவார். குகேசு 2024 வேட்பாளர் போட்டியில் வென்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.<ref name=":0">{{Cite news |date=2024-04-22 |title=Candidates Chess: Gukesh becomes youngest winner, to challenge for world title |url=https://economictimes.indiatimes.com/news/sports/candidates-chess-gukesh-becomes-youngest-winner-to-challenge-for-world-title/articleshow/109485704.cms |access-date=2024-04-22 |work=The Economic Times |issn=0013-0389}}</ref>

==வாழ்க்கைக் குறிப்பு==
குகேசு Gukesh [[சென்னை]]யில் 2006 மே 29 அன்று பிறந்தார். இவரது குடும்பம் [[ஆந்திரப் பிரதேசம்]], [[கோதாவரி]] வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த் ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரும், தாயார் பத்மா ஒரு [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலாளரும்]] ஆவர்.<ref>{{cite web |author=Prasad RS |date=2019-01-16 |title=My achievement hasn't yet sunk in: Gukesh |website=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/sports/chess/my-achievement-hasnt-yet-sunk-in-gukesh/articleshow/67562543.cms |access-date=2019-03-18}}</ref> குகேசு தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார்.<ref>{{cite web |author=Lokpria Vasudevan |date=2019-01-17 |title=D Gukesh: Grit and determination personify India's youngest Grandmaster |website=India Today |url=https://www.indiatoday.in/sports/other-sports/story/d-gukesh-grit-and-determination-personify-india-s-youngest-grandmaster-1433361-2019-01-17 |access-date=2019-03-18}}</ref> சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்தியாலயத்தில் படிக்கிறார்.<ref>{{cite web |date=2018-12-09 |title=Velammal students win gold at World Cadet Chess championship 2018 |website=Chennai Plus |url=http://chennaiplus.in/velammal-students-win-gold-at-world-cadet-chess-championship-2018/ |access-date=2019-03-18 |archive-date=27 March 2019 |archive-url=https://web.archive.org/web/20190327090711/http://chennaiplus.in/velammal-students-win-gold-at-world-cadet-chess-championship-2018/ |url-status=dead }}</ref>

<h1>சதுரங்க வாழ்க்கை </h1>
==2015-2019==
குகேசு 2015 இல் 9-அகவைக்குட்பட்டோருக்கான ஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார்,<ref>{{cite news |author1=Shubham Kumthekar |author2=Priyadarshan Banjan |date=2018 |title=Gukesh D: The story behind a budding talent |website=IIFL Wealth Mumbai International Chess Tournament |url=http://www.iiflwmumbaichess.com/index.php?option=com_content&view=article&id=134:gukesh%20d-the-story-behind-a-budding-talent&catid=8:news-event&Itemid=130 |accessdate=2018-12-09 |archive-date=16 April 2019 |archive-url=https://web.archive.org/web/20190416062735/http://www.iiflwmumbaichess.com/index.php?option=com_content&view=article&id=134:gukesh%20d-the-story-behind-a-budding-talent&catid=8:news-event&Itemid=130 |url-status=dead }}</ref> 2018 இல் 12 அகவைக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார்.<ref>{{cite news |date=2018-11-16 |title=Chess: India's Gukesh, Savitha Shri bag gold medals in U-12 World Cadets Championship |website=scroll.in |url=https://scroll.in/field/902419/chess-indias-gukesh-savitha-shri-bag-gold-medals-in-u-12-world-cadets-championship |accessdate=2018-12-09}}</ref> அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில், 12-இற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில் ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார்.<ref>{{cite news |author=Prasad RS |date=2018-03-13 |title=Gukesh wins 5 gold medals in Asian Youth Chess Championship |website=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/sports/chess/gukesh-wins-5-gold-medals-in-asian-youth-chess-championship/articleshow/63687428.cms |accessdate=2018-12-09}}</ref> மார்ச் 2018 இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டே திறந்த சுற்று பன்னாட்டு மாசுட்டர் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.<ref>{{cite news |author=Prasad RS |date=2018-03-13 |title=Gukesh making all the right moves |website=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/sports/chess/gukesh-making-all-the-right-moves/articleshow/63289164.cms |accessdate=2018-12-09}}</ref>

குகேசு 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய [[சதுரங்க மேதை|சதுரங்கப் பேராதன்]] ஆனார்.<ref>{{cite news |last=Shah |first=Sagar |date=2019-01-15 |title=Gukesh becomes second youngest GM in history |website=Chess News |publisher=ChessBase |url=https://en.chessbase.com/post/gukesh-becomes-second-youngest-gm-in-history |accessdate=2019-01-15}}</ref>

==2021==
2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார்.<ref>{{Cite news|last=Rao|first=Rakesh|date=14 June 2021|title=Gritty Gukesh wins Gelfand Challenge|work=The Hindu|url=https://www.thehindu.com/sport/other-sports/gritty-gukesh-wins-gelfand-challenge/article34815917.ece|access-date=18 June 2021}}</ref>

==2022==
ஆகத்து 2022 இல், குகேசு [[44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு]] போட்டியை 8/8 என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியை தரவரிசையில் நம்பர் 1 ஆன அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேசு 11 க்கு 9 மதிப்பெண்களுடன் முடித்து, 1-ஆவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

செப்டெம்பர் 2022 இல், குகேசு முதற்தடவையாக 2700 என்ற [[எலோ தரவுகோள் முறை|தரவுகோளை]]த் (2726) தாண்டி,<ref>[https://ratings.fide.com/profile/46616543/chart Gukesh D, Rating Progress Chart, [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு]]</ref> இது வெய் யி, [[அலிரெசா பிரூஜா]] ஆகியோருக்குப் பிறகு 2700 தரவுகோளைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார்.

அக்டோபர் 2022 இல், ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான [[மாக்னசு கார்ல்சன்|மாக்னசு மேக்னஸ் கார்ல்சனை]] வீழ்த்திய இளைய வீரர் ஆனார்.<ref>{{Cite web |title=Gukesh D vs. Carlsen, Magnus {{!}} Aimchess Rapid {{!}} Prelims 2022 |url=https://chess24.com/en/watch/live-tournaments/meltwater-champions-chess-tour-aimchess-rapid-2022-prelims/9/1/6 |access-date=2022-10-16 |website=chess24.com |language=en}}</ref>

==2023==
பெப்ரவரி 2023 இல், குகேசு [[தியூசல்டோர்ஃபு|தியூசல்டார்ஃபில்]] நடந்த WR மாசுட்டர்சு போட்டியின் முதல் பதிப்பில் பங்கேற்று, 5½/9 புள்ளிகளுடன், லெவன் அரோனியன், [[இயான் நிப்போம்னிசி|இயன் நெப்போம்னியாச்சி]]யுடன் முதல் இடத்தைப் பிடித்தார். சமன்முறியில் அரோனியனுக்கு அடுத்தபடியாக குகேசு வந்தார்.

ஆகத்து 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரர் ஆனார்.<ref>[https://www.chess.com/news/view/gukesh-youngest-player-to-break-2750 Gukesh Breaks Record: Youngest Player To Cross 2750 Rating], chess.com, July 21, 2023.</ref>

குகேசு [[சதுரங்க உலகக் கோப்பை 2023]] சுற்றில் பங்கேற்று, [[மாக்னசு கார்ல்சன்|மாக்னசு கார்ல்சனிடம்]] தோல்வியடைவதற்கு முன்னர் காலிறுதிக்கு வந்தார்.<ref>{{Cite web |date=2023-08-16 |title=2023 Chess WC Q/Fs: Pragg takes Erigaisi to tie-breaks; Gukesh, Vidit out |url=https://www.espn.com/chess/story/_/id/38203203/2023-chess-world-cup-quarterfinals-r-praggnanandhaa-arjun-erigaisi-tie-breaks-magnus-carlsen-beats-gukesh-vidit-gujrathi-out |access-date=2023-08-16 |website=ESPN.com |language=en}}</ref>

செப்டம்பர் 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு அதிகாரப்பூர்வமாக [[விசுவநாதன் ஆனந்த்|விசுவநாதன் ஆனந்தை]]முந்தி முதலிடத்தில் உள்ள இந்திய வீரராக இருந்தார்.<ref>{{cite web|url=https://www.espn.co.uk/chess/story/_/id/38303895/37-years-how-world-changed-viswanathan-anand-stayed-constant-top-indian-chess-d-gukesh|title=37 years - How the world changed as Anand stayed constant on top of Indian chess|date=September 1, 2023|website=[[ஈஎஸ்பிஎன்]]|first=Anirudh|last=Menon}}</ref><ref>{{cite web|url=https://www.chess.com/news/view/gukesh-ends-anands-37-year-reign|title=Gukesh Ends Anand's 37-Year Reign As India's Official Number 1|date=September 1, 2023|website=Chess.com|first=Leon|last=Watson}}</ref>

திசம்பர் 2023 இல், 2023 பிடே சர்க்கியூட் சுற்றின் முடிவில் குகேசு 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார்.<ref>{{Cite web |date=2023-12-30 |title=Gukesh confirms his Candidates spot |url=https://www.hindustantimes.com/sports/others/gukesh-confirms-his-candidates-spot-101703957927677.html |access-date=2024-01-15 |website=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]] |language=en}}</ref> குகேசு சர்க்யூட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் வெற்றியாளரான பாபியானோ கருவானா ஏற்கனவே [[சதுரங்க உலகக் கோப்பை 2023|2023 உலகக் கோப்பையின்]] மூலம் வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.<ref>{{Cite web |title=FIDE World Championship Cycle |url=https://wcc.fide.com/fide_circuit.phtml |access-date=2024-01-15 |website=International Chess Federation (FIDE) |language=en}}</ref> குகேசு [[பாபி ஃபிஷர்]], [[மாக்னசு கார்ல்சன்]] ஆகியோருக்குப் பிறகு, வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரர் ஆனார்.<ref>[https://www.hindustantimes.com/sports/others/gukesh-confirms-his-candidates-spot-101703957927677.html Gukesh confirms his Candidates spot], [[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]], December 31, 2023</ref><ref>[https://en.chessbase.com/post/candidates-tournament-2024-poll Who will win the 2024 Candidates Tournament?], Chessbase, 24 March, 2024</ref>

==2024==
[[File:Alireza Firouzja - Gukesh D, Candidates Tournament 2024 01.jpg|thumb|2024 வேட்பாளர் சுற்றில் "குகேசு எதிர் [[அலிரெசா பிரூஜா|பிரூசா]]".]]
சனவரி 2024 இல், குகேஷ் 2024 டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று, 13 ஆட்டங்களில் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 8.5 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். 12-ஆவது சுற்றில், [[ர. பிரக்ஞானந்தா]]வுக்கு எதிராக வெற்றிபெறும் நிலையைப் பெற்றார், ஆனால் மூன்று முறை மீண்டும் மீண்டும் தவறு செய்தார். சமன்முறிகளில் குகேசு அரையிறுதியில் அனிஷ் கிரியைத் தோற்கடித்தார், ஆனால் இறுதிப் போட்டியில் வெய் யியிடம் தோற்றார்.<ref>{{Cite web |last=Rao |first=Rakesh |date=2024-01-29 |title=TATA Steel Chess 2024: Gukesh finishes joint second in Masters, Mendonca wins Challenger |url=https://sportstar.thehindu.com/chess/tata-steel-chess-2024-d-gukesh-second-masters-leon-luke-mendonca-challenger-results/article67788872.ece |access-date=2024-01-31 |website=Sportstar |language=en}}</ref>

==2024 வேட்பாளர் சுற்று==
2024 ஏப்ரலில், குகேசு கனடா, [[தொராண்டோ]]வில் நடைபெற்ற 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் பங்கேற்றார்.<ref>[https://www.chess.com/blog/CoffeeandChess007/magnus-predictions-performance-of-candidates Magnus Predictions], chess.com, April 18, 2024</ref> குகேஷ், சக நாட்டு வீரர்களான [[ர. பிரக்ஞானந்தா|ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா]], [[விதித் சந்தோசு குச்ராத்தி|விதித் குசராத்தி]] ஆகியோருக்கு எதிராகக் கறுப்புக் காய்களுடனும், [[அலிரெசா பிரூஜா|அலிரேசா பிரூச்சா]]வுடன் வெள்ளைக் காய்களுடனும், நிசாத் அபாசோவுடன் வெள்ளைக் காய்களுடனும் விளையாடி வெற்றி பெற்றார்.<ref>[https://www.chess.com/news/view/2024-fide-candidates-tournament-round-14 Gukesh Youngest Ever Candidates Winner, Tan Takes Women's By 1.5 Points], chess.com, April 18, 2024</ref> பிரூச்சாவுடன் கறுப்புக் காய்களுடன் விளையாடியதே அவரது ஒரே இழப்பு. இது அவருக்கு 5 வெற்றிகள், 1 தோல்வி, 8 சமன்களைக் கொடுத்து, 9/14 என்ற மதிப்பெண்ணுடன், சுற்றை வென்றார். இதன் மூலம், 2024 நவம்பரில் நடக்கும் உலக வாகையாளர் போட்டியில் நடப்பு வாகையாளர் [[திங் லிரேன்|திங் லிரேனுடன்]] மோதுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் விளையாடும் இளைய வீரர் இவர் ஆவார்.<ref name=":0" />

== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
*{{Fide}}
*[http://www.365chess.com/players/Gukesh_D Gukesh D] chess games at 365Chess.com
{{Authority control}}

[[பகுப்பு:இந்திய சதுரங்க வீரர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:சென்னை சதுரங்க வீரர்கள்]]
[[பகுப்பு:2006 பிறப்புகள்]]
[[பகுப்பு:சதுரங்க கிராண்டு மாசுட்டர்கள்]]
[[பகுப்பு:தமிழக சதுரங்க வீரர்கள்]]

05:47, 25 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

"https://tamilar.wiki/w/index.php?title=குகேஷ்&oldid=331144" இலிருந்து மீள்விக்கப்பட்டது