கிளைமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
No edit summary |
||
வரிசை 22:
கெற்பை வெடிக்க வைக்கும் முறைகள் மூவகைப்படும்.
இம்முறையில் கெற்பானது மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுகிறது. எந்நேரத்தில் வெடிக்க வேண்டுமென்பதை மனிதரொருவர் தீர்மானித்து இதைச் செயற்படுத்துகிறார். இம்முறையில் மின்சாரக் கெற்புகளே பயன்படுத்தப்படுகின்றன. இக்கெற்புகளுக்கு மின்சாரம் கிடைக்கும்போது அதற்குள்ளிருக்கம் தங்குதன் இளை எரிந்து வெடித்தலைத் தொடக்கிவைக்கிறது. நகர்ந்துவரும் எதிரிகளைத் தாக்கவென நிலைப்படுத்தப்பட்டிருக்கும் கிளைமோரை இலக்கு கொலைவலையத்துள் வந்ததும் குறிப்பிட்ட மனிதர் வெடிக்க வைப்பார். இம்முறையில் தாக்குதலை நடத்துபவர்கள் இலக்கை அவதானித்துக் கொண்டு நிற்க வேண்டும்.
மின்கம்பி மூலமாக நேரடியாக மின்சாரம் வழங்கியோ அல்லது தானியங்கிக் கட்டுப்பாட்டுக் கருவி மூலமோ (Remote control) தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.
இம்முறையில் கெற்பானது தாக்குதலைச் செய்யும் மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மாறாக தாக்குதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்களால் தூண்டல் ஏற்பட்டு இவை வெடிக்க வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பொறிவெடியாக அமையப் பெற்றிருக்கும். எடுத்துக் காட்டாக, வீதிக்குக் குறுக்காக இடறுகம்பியொன்றைக் கட்டி, அது இடறுப்படும்போது செயற்படத்தக்கதாக ஒரு பொறியமைப்பை அதன் ஓர் அந்தத்திற் பொருத்தி கிளைமோரை நிலைப்படுத்தி வைத்தல். வீதியில் நடந்துவருபவர்களோ வாகனமோ இடறுகம்பியில் இடறும்போது கிளைமோர் வெடிக்கும்.
இம்முறையில் மின்சாரக் கெற்புகள் மட்டுமன்றி, ஏனைய பொறிமுறைக் கெற்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இது மேற்குறிப்பிட்ட இரு வகைக்குள்ளும் அடக்க முடியாததால் தனியொரு முறையாகக் வகைப்படுத்தப்படுகிறது. கிளைமோரோடு பொருத்தப்பட்ட நேரக்கணிப்பியில் (Timer) தாமத நேரம் தெரிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் வந்தது கிளைமோர் வெடிக்கும். இம்முறை மிகமிக அரிதாகவே கிளைமோர்த் தாக்குதல்களிற் பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 38:
== வெவ்வேறு நாடுகள் தயாரிக்கும் கிளைமோர்களின் பெயர்கள் ==
* M18A1
* MON-50
* MON-90
வரிசை 47:
* MON-200
* No. 6
* MAPED F1
* Mini MS-803
* P5MK1, P5MK2
இலங்கையில் போரிடும் இருதரப்புமே கிளைமோர்க் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துகின்றன. இலங்கை இராணுவம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில்தான் கிளைமோர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும் விடுதலைப்புலிகள் அதற்கு முன்பிருந்தே அதிகளவில் கிளைமோர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
* M18A1 (அமெரிக்கா)
* P5MK1(பாகிஸ்தான்)
பிற்காலத்தில் அதிகளவு தாக்குதிறனைப் பெறுவதற்காகவும் சில சிறப்புத் தேவைகளுக்காகவும் இலங்கை இராணுவம் சொந்தமாக சில கிளைமோர்களை உற்பத்தி செய்திருந்தது.
விடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்தினர் . [[இலங்கை]]யில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்பட்டன.
| |||