சடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: அவா் → அவர் (3) using AWB
 
No edit summary
 
வரிசை 36:
==சடங்குகள் பெயர்க்காரணம்==
 
===சடங்கு எனும் சொல்===
 
சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.
வரிசை 54:
ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார். எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள் கொள்ளலாம்.
 
=== சடங்கிற்கு இன்னொரு பெயர் ===
சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:
 
வரிசை 75:
சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு.
 
=== மங்கலச் சடங்குகள் ===
# சேணை தொட்டு வைத்தல்
#தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்
வரிசை 94:
#முத்து விழா
 
=== அமங்கலச் சடங்குகள் ===
#உயிர் புறப்பாடு
#சடல நீராட்டு
வரிசை 103:
==பிராமண வழி சடங்குகள்==
 
===திருமணம் (விவாகம்)===
 
தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.
 
===முதல் இரவு (கர்பதானம்)===
 
திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
 
===கருவுற்றல் (பும்சவனம்)===
 
கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.
 
===வளைக்காப்பு (சீமந்தம்)===
 
கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.
 
===குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்)===
 
குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.
 
===குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்)===
 
குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.
 
===குழந்தையை முதன்முதலில் வெளியிடத்துக்கு அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்)===
 
குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.
 
===குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்)===
 
குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.
 
===குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) ===
 
குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
 
===குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்)===
 
குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை பொன்போல மின்னும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
 
===கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) ===
 
குழந்தை மழலைமொழி பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும் என்பதை இச்சடங்கு உணர்த்துகின்றது.
 
===பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) ===
 
குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய எண்ணம் வெண்மையாக (தூய்மையாக) இருக்கவேண்டும்; தீமையானவற்றில் எண்ணம் சிதறி மாசுபடக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது.
 
===வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்)===
 
வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும்.
 
===பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) ===
 
ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் ‘கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவது மிக அரிதாகும். ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. காலப்போக்கில் இந்த சடங்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
 
===பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) ===
 
உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, ஆசானுக்கு நன்றி கூறிவிட்டு, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது.
வரிசை 165:
(இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான்.)
 
===இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) ===
 
ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓரிரண்டு நாட்கள் முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு தானம் வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும்.
வரிசை 175:
நலம் குலைந்தார் வாழ்வில் நலமே விளைய வேண்டி மேற் கொள்ளப்படும் சடங்குகளும், சடங்கியல் சார் நம்பிக்கைகளும் எளிய மக்கள் வாழ்வில் காணப்படுகின்றன. இயற்கையுடன் உறவாடி இயற்கை நிகழ்வுகளைக் கண்டு தமக்கான வளம் இயற்கையைப் போல நடந்து கொள்வதன் மூலமே கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவனவாக அவை அமைந்துள்ளன. இவற்றை வளமைச் சடங்குகள் (FERTILITY RITUALS) என அழைக்கலாம். தொடக்க காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வரும் இச்சடங்குகளை இன்றும் வேளாண்குடிகளாக விளங்கும் மக்கள் பின்பற்றுகின்றனர். மேற்கு தமிழகத்தின் கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பின்பற்றப்படும் சடங்குகள் இங்கு ஆராயப்படுகின்றது. அம்மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகிய நிகழ்வுகளில் மேற்கொள்ளப்படும் இச் சடங்குகள் அவர்களது நடைமுறை வாழ்வின் கண்ணோட்டங்களிலிருந்தே தோன்றியவை ஆகும்.
 
===பூச்செடியில் வைத்தல்===
 
மழலை முதல் சிறு வயது குழந்தைகள் வரை இறந்தால் மேற் கொள்ளப்படும் சடங்கு இது. அக் குழந்தைகளைப் புதைக்கும் போது மஞ்சள் சாந்தில் நனைக்கப்பட்ட வேட்டியில் சுற்றிக் கட்டியே புதைக்கின்றனர். மஞ்சள் பூசிய துணியில் சுற்றிக் கட்டுதல் என்பது மீண்டும் கருவறைக்குச் செல்வதற்கான சடங்காகும். கைக்குழந்தையாயிருப்பின் அக்குழந்தையின் தாயாரிடம் இருந்து பால் பெறப்பட்டு அதனை இறந்த குழந்தைக்கு திலகமாய்
வரிசை 181:
இட்டு வாயிலும் ஊற்றி மஞ்சள் துணியில் சுற்றி கட்டி புதைப்பர். பதினோறாம் நாள் அக்குழந்தையின் வயதுக்கேற்ற ஆடைகளும், கருகமணி வளையல், பூ, தின் பண்டங்கள், பொறிகடலை ஆகியவற்றை நீர் நிறைந்த கிணற்று மேட்டில் உள்ள செவ்வரளி போன்ற பூஞ்செடியின் வேரில் வைத்து சடங்கு மேற்கொள்கின்றனர். இது மீண்டும் அக்குழந்தை தாயின் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிகழ்வதாகும். அம்மை, காலரா முதலான நோய்களால் இறந்திருந்தாலும் மாரி யம்மனால் அழைத்துக் கொள்ளப்பட்ட அக்குழந் தைகள் மீண்டும் வந்து பிறப்பர் என்று நம்புகின்றனர். மீண்டும் பூவாய் மலரும் என்ற நம்பிக் கையே “பூச்செடியில் வைத்தல்” சடங்காகும்.
 
===எருவின் மீது மறுமணம் செய்வித்தல்===
 
இது இளம் விதவை திருமணத்தில் மேற் கொள்ளப்படும் சடங்காகும். திருமணம் ஆன சிறிது காலத்தில் கணவனை இழந்த பெண்ணை மணக்க வேறு ஆண் முன் வரும் போது உற்றார் மறுமணம் செய்விக்க முயலும் போது மேற்கொள்ளப்படும் சடங்காகும். முதல் கணவன் விபத்தினால், கொள்ளை நோயினால், எதிர்பாராத நிகழ்வுகளால் மரண முற்று விதவையாகியிருப்பர். அவர்களுக்கான திருமணம் ‘இரவில்’ நடைபெறும். தரையில் தொழுஉரமான ‘எரு’வினைக் கொட்டி நிரவி அதன் மீது வெள்ளை வேட்டி போர்த்தி அதன் மீது மணமக்களை அமரச் செய்து திருமணம் நிகழ்த்தப்படுகின்றது.
வரிசை 189:
இது மிகுந்த கவனத்துடன் எதிர்பார்ப் புடனும், நம்பிக்கையுடனும் மேற்கொள்ளப்படு கின்றதையே உணர்த்துகின்றது. மேலும் நாற்று விடும் போது, முளைவிடும் நாற்று பழுதானால், வளர்ந்து பயிராகாமல், நோயினால் தாக்குண்டு அழிந்து போனால், மீண்டும் நன்றாக எருவிட்டு, பழுது நீக்கி நாற்று விட்டு விவசாயம் மேற் கொள்ளுவதை ஒத்ததாகவே இந்த மறுமணச் சடங்கு நிகழ்வுகள் அமைந்துள்ளன. இங்கு திருமணம் என்பது வேளாண்மைச் செயலாகவே கருதப்படுகின்றது. வேளாண்மை செழிக்க எரு விட்டு நீர் பாய்ச்ச வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். பட்டுப் போன மணமகளின் வாழ்வு செழிக்க எருவிட்டு நீர்பாய்ச்சத் தகுந்த ஆடவனை கரம் பிடிக்கும் திருமணம் இவ்வகையில் நடைபெறுகின்றது.
 
===நாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல்===
 
தம் குடிவிட்டு, ஊர் விட்டு வேற்றுப் புலங் களுக்குச் சென்று வாழ நேரிடும் போது, தொழில் புரியும் நிலையில் வேற்று சாதியாருடன் பழகி கலந்துறவாடும்போது காதல் தோன்றுவதும், மணம்புரியும் நிலைக்கு உறவு வலுப்படுவதும் நிகழ்வதுண்டு. இந்நிலையில் வேற்றுப்புலத்தில் மணம் புரிந்தோ, மணம் புரிந்துகொள்ள தமது சுற்றத்தார், ஊராரிடம் தமது இணையுடன் வரும் போதோ அவர்களை சாதி கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கிவைப்பது பொதுவான வழக்கம். ஆனால் அவ்வாறு சாதி கெட்டவர்களாகக் கருதி ஒதுக்கி வைக்காமல் மீண்டும் தம்மவராகவே சேர்த்துக் கொள்வதற்கான ஒரு சடங்காகவே ‘நாக்கு சுட்டு சேர்த்துக் கொள்ளுதல்’ சடங்கு அமைந்துள்ளது.
வரிசை 195:
வேற்றுப் புலத்திலிருந்து தமது சாதியைச் சார்ந்த ஆடவனால் அழைத்து வரப்படும் பெண்ணையும் தமது சாதிக்குள் இணைத்துக் கொள்ளும் சடங்காகவும் அமைந்துள்ளது. குல தெய்வத்தின் முன்பாக பாதம் மறையும் அளவு குழி வெட்டி அக்குழியினுள் பசுவினுடைய சாணத்தைக் கரைத்து ஊற்றி, அதனுள் மணத்தம்பதியரை நிறுத்தி வைத்து, குல தெய்வத்தை வணங்கிய பிறகு, அத்தெய்வத்திற்கு ஏற்றப்பட்ட தீபத்தின் திரியைக் கொண்டு வந்து இருவரின் நாக்கையும் நீட்டச் செய்து நுனியைச் சுடுவதன் மூலமாக சாதி தீட்டு கழிந்ததாகக் கருதுகின்றனர். அதன் பிறகு எவ்விதத் தடையுமின்றி தம்மவராக ஏற்றுக் கொள்கின்றனர். வேற்றுமை பாராட்டுவதில்லை.
 
===முறைப்பாடு தீர்த்தல்===
 
ஒரு குடியைச் சார்ந்தவர்களுக்குள் ஏற்படும் முறைப்பாடு (அ) கோரிக்கைக்காக பிணக்குகள் ஏற்பட்டு பேச்சுவார்த்தை அற்றுப் பல காலம் இது நீடித்து வரும் நிலையில் அக்குடியினுள்ளே நிகழும் இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மீண்டும் பிரிந்துள்ளவர்கள் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டிய நிலையில் அல்லது இறந்து போனவரின் இடத்திலிருந்து செயலாற்ற பேசா திருப்பவரே பொறுப்பேற்க வேண்டிய உறவுடைய வராய் இருக்கும்போது, இரத்த உறவுள்ள குடி களுக்குள்ளே இச்சடங்கு மேற்கொள்ளப்படு கின்றது. இறப்பு, திருமணம் போன்ற நிகழ்வில், இரு தரப்பினரும் ஒன்று கலந்து சடங்கு மேற் கொள்ளும் முன்பு ‘முறைப்பாடு தீர்த்துக் கொண்ட’ பிறகு சடங்கினைத் தொடங்குகின்றனர்.
வரிசை 205:
துக்க வீட்டிற்கு துக்கம் கேட்க புகும் முன்பு இடைவழியிலேயே பிரிந்திருப்பவர்களை தனித் தனியே நிறுத்தி இருதரப்பாருக்கும் இடையில் திரையிடப்படுகின்றது. கிழக்கு மேற்காக நிறுத்தப்பட்டுள்ள அவர்களின் இரண்டு தரப்பிலும் தலைமையானவர்கள் எதிரே இருப்பவருடன் இனி எப் போதும் ஒன்றாகவே இருப்போம் என்று ஒரு மனதுடன் கூறி எதிரே இருப்பவர்களுக்கு நெற்றியில் திலகமிடுகின்றனர். அவ்வாறே எதிர்தரப்பும் இவர்களுக்கு கூறுவதுடன் திலகமிடுகின்றனர். இவ்வாறு இரண்டு தரப்பிலும் அனைவருக்கும் இடப்பட்டவுடன் ஒன்றாக செயல்படுகின்றனர்.
 
===முளைப் பண்டம் கட்டுதல்===
 
அரசாணி கொம்பு நட்டு பந்தக்கால் நாட்டிய பிறகு பச்சைப் பந்தலின் நடுவில் மரக்குந்தாணியைக் கவிழ்த்து அதன் மீது நவதானியங்களை ஊற வைத்து முளைப்பண்டம் கட்டிவைப்பர். மறுநாள் திருமணச்சடங்கு நிறைவடைந்தபிறகு மணமக்கள் இருவரும் சேர்ந்தே முளைப்பண்டத்தையும் களைக் கொட்டு, குடம் ஆகியவற்றுடன் கிணற்று மேட்டிற்கு செல்கின்றனர். ஒரே களைக்கொட்டை இருவரும் தத்தமது வலதுகையால் சேர்த்துப் பற்றி கிணற்று மேட்டில் கொத்தி முளை வந்துள்ள பண்டங்களை அவ்விடத்தில் தூவுகின்றனர். பிறகு கிணற்றி லிருந்து நீரெடுத்து தெளிக்கின்றனர். பிறகு திரும்பி வரும்போது புற்றிலிருந்து சிறிது மண்ணெடுத்து வந்து குழைத்து வீட்டின் அடுப்பை மணமகள் செப்பனிடும் சடங்கும் நடைபெறுகின்றது.
வரிசை 211:
இல்வாழ்வில் புதிதாக அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு அவர்களின் நடைமுறை வாழ்க்கை யையும், பொறுப்புக்களையும் அறிமுகப்படுத்தும் சடங்குகளாக இவை அமைந்துள்ளன. இச்சடங்கு களை மணமக்கள் உரிய கரிசனத்துடன் மேற் கொள்வதைக் கணக்கில் கொண்டே அவர்களது வருங்காலத்தில் இல்லறவாழ்வில் பொறுப்பும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வார்கள் என் பதை கணிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை எத்தனை சிறப்பானதாக இருக்கும் என்று அதனடிப் படையில் நம்புகின்றனர். மேலும் கிணற்று மேட்டில் இடப்பட்ட நவதானியங்கள் முளைத்து செழித்து வளர்வதைப் போன்று அவர்களது வாழ்வும் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
 
===நலுங்கு வைத்தல்===
 
திருமணத்திற்கு ஒரு வார காலம் இருக்கும் போதே மணமக்களுக்கு நலுங்கு வைத்தல் சடங்கு தொடங்குகிறது. இச்சடங்கினை மேற்கொள் பவர்கள் மணமக்களுக்கு முறையானவர்களாக இருப்பர். முதலில் எண்ணெய் தேய்த்தும், பிறகு மஞ்சள் சாந்தினை முகம் தோள், மார்பு, உடம் பெங்கும் தடவியும் நலுங்கு வைக்கப்படுகின்றது. நலுங்கு வைக்கும்போது காதுமடல், தோள், மார்பு பகுதிகளில் தடவி விடுவதன் மூலம் புதிய வாழ்க்கை முறை, புதிய சூழலை எதிர்கொள்வதற்கான தகுதியை இச்சடங்கு வழங்குகின்றது.
வரிசை 217:
அதன் பிறகு சிறப்பாக குளிப்பாட்டி புத்தாடை வழங்கி, உளுந்தால் செய்யப்பட்ட இனிப்பு, காரம் முதலியவை பரிமாறப்படுகின்றன. இச்சடங்கின் மூலம் மணமக்களின் உடல்நலம் மேலும் கூட்டப் படுகின்றது. இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு பாலுறவு பற்றிய கூச்சம், அச் சங்களைப் போக்கும் நடைமுறைகளாகவும் இச் சடங்கு அமைந்துள்ளது. ஒரு சில பழங்குடி களிடம் திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு பாலுறவு முறையினை அக்குடியில் வயதில் முதிர்ந்த வர்கள் கற்றுத் தருவதாக அறியப்படுகின்றது. நாகரிக சமூகத்தில் நலுங்கு வைத்தல் சடங்கு அதன் எச்சமாக அமைந்ததே ஆகும்.
 
===தொப்புள் கொடி===
 
திருமணம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகும் குழந்தைப் பேறு வாய்க்காதவர்கள் உள்ளத்தாலும், உடலாலும் சோர்வடைந்து பெரும் மனச்சுமைக்கு ஆளாகிவிடுவர். அந்நிலையில் கர்ப்பிணிப் பெண் களுக்கு பிள்ளைப் பேறு நிகழ்ந்தவுடன் குழந்தையி லிருந்து நீக்கப்படும் நஞ்சுக்கொடி அல்லது தொப்புள் கொடியின் சிறு பகுதியை பெற்று கருத்தரிக்காதவர்கள் வாழைப்பழத்தில் வைத்து விழுங்கிவிட்டால் அதன் பிறகு அவர்கள் கருவுற்று மகப்பேறு அடைவர் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. நவீன சமூகத்தில் அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல் ஆய்வினை மேற்கொண்டு உயிரணுக்களை உருவாக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
வரிசை 223:
பழங்குடிச் சமூகங்களில் தொப்புள் அடையாளம் பிறர் கண்படுதலில் இருந்து காக்கப்படுவது பற்றிய நம்பிக்கைகளை சி. மகேசுவரன் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். காரிய சாத்தியமானதாகவே இந்த நம்பிக்கைகள் அமைந்திருக்கின்றன என் பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக தொப்புள் கொடி சார்ந்த செயல்பாடுகள் அமைந்திருக்கக் காண்கிறோம். இவ்விதமான நம்பிக்கைகள் அனைத்தும் தொல் பழங்காலம் முதலே இருந்து வருகின்ற நம்பிக்கைகளின் தொடர்ச்சியே ஆகும். தாந்திரிகம், சாங்கியம் மற்றும் உலகாயதம் போன்ற பொருள்முதல்வாத கொள்கையினரும் கூட இவ்வாறான சடங்குகளைப் பின்பற்றியுள்ளனர். அவை வைதீக சமயத்தாரின் சுயநலமிக்க, மக்களின் உபரி உற்பத்தியைப் பறிக்கும் நோக்கிலான முயற்சி களை முறியடிக்கும் வகையில் “முள்ளை முள்ளால் எடுத்தல்” எனும்படி அமைந்தவையாகும்.
 
===கோயில் - கருவறை - சிலை===
 
தாந்திரீகர்கள் பெண்ணின் பிறப்புறுப்பைப் போற்றி வழிபடுவார்கள். இவ்வுலகினை, நதி யினை எல்லாம் பெண்ணாகவே பாவிப்பதும் நிலமும் பெண்ணாகவே வணங்கப்படுவதும் உயிர் களின் தோற்றத்திற்கு தாய்மைப் பேறுதான் அடிப் படை என்பதாலேயே ஆகும். இன்றும் இத்தகைய வழிபாட்டு கோயில்கள் இருப்பது தெரியவரு கின்றது. ‘அல்குல்’ என்ற நூலில் பெண்ணின் பிறப்புறுப்பு பற்றி பல பத்து சொற்களை தமிழ் நாடனும், கி. ராஜநாராயணனும் பட்டியலிடு கின்றனர். அவை அனைத்துமே பெண்ணை பகடி செய்தும் ஏளனமாக, எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், சினம் கொண்டு புத்தி பேதலித்த நிலையில் பேசக்கூடிய சொற்களாகவே இருக்கின்றன.
வரிசை 235:
பிறப்புச் சடங்கில் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்கிற காரணத்தினால் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானவை சேனை தொடுதல், தொட்டில் கட்டுதல், காது குத்துதல் மற்றும் மொட்டை அடிப்பது போன்ற சடங்குகள் ஆகும்.
 
===சேனை தொடுதல்===
 
இந்த சடங்கின் அர்த்தம் குழந்தைக்கு சர்க்கரையுடன் நெய் கலந்த சேனை தொட்டு குழந்தைக்கு ஊட்டுவதுசேனை தொடுதல் ஆகும். சேனை வைக்கும் பெரியவர்களின் குணம் குழந்தைக்கும் வரவேண்டும் என்பது இந்த சடங்கின் மகிமையாகும்.
 
===தொட்டில் கட்டுவது===
 
குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பது தமிழர்கள் மட்டுமே இதற்கான காரணம் குழந்தைக்கு எந்தவொரு சங்கடமின்றி தாயின் தாலாட்டை கேட்டுக்கொண்டே தாயின் வாசம் தூங்கும்போதும் வீசவேண்டும் என்பது இதன் பண்பாகும்.
 
===காது குத்துதல்===
 
குழந்தை சடங்குகளில் மிகவும் முக்கியமான சடங்கு காது குத்துதல் ஆகும். குலதெய்வ சன்னதியில் மூளை வளர்ச்சியும் ஞாபக சக்தியும் பெருகும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை ஆகும்.
 
===மொட்டை அடித்தல்===
 
பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பதின் நோக்கம் மனித உடம்பில் அதிக அழுக்கு படியும் இடம் தலைமுடி என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். கருவில் குழந்தையின் தலையில் அதிகளவில் அழுக்கு சேர்ந்திருக்கும் அதனை அகற்றுவதற்காக மொட்டை அடிக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.
 
===பூப்புனித நீராட்டு விழா===
 
சிறுமியாக இருப்பவள் குமரியாக மாறும் பருவ வயதை அடையும் பெண்ணை தூய்மை படுத்துவது பூப்புனித விழாவின் விளக்கம் ஆகும். ஒரு பெண்ணின் முதல் மாதவிடாய் நாளில் தான் அவள் பருவ நிலைக்கு மாறுகிறாள் என்பது நமது முன்னோர்கள் நமக்கு கற்பித்த பண்பாடு ஆகும். சுமங்கலிப் பெண்கள் ஒன்றிணைந்து பூப்புனித பெண்ணை மஞ்சள் நீரில் நீராட்டுவது இதன் முக்கிய அம்சம் ஆகும். மேலும் தாய்மாமன் பச்சை ஓலைகளால் கட்டும் குச்சுக்குள் அந்த பெண் 16 நாட்கள் இருக்க வேண்டும் அப்படி இருப்பதினால் எதிர்காலத்தில் அவள் ஓர் குழந்தையை தாங்கும் அளவிற்கு அவளுக்கு சத்தான ஆகாரங்களை கொடுத்து அவளை வலிமை படுத்துவது இதன் நோக்கமாகும். மேலும் இவ்விழா நடத்துவதின் முக்கிய நோக்கம் எங்கள் வீட்டில் இல்லற வாழ்க்கைக்கு தகுதியடைந்த பெண் இருக்கிறாள் என ஊர் மக்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துவது இந்த விழாவின் மேலும் ஒரு சிறப்பாகும்.
வரிசை 259:
பெரும்பாலான இன்றைய சமுதாயம் காதல் திருமணத்தைக் கூட நிச்சயித்த திருமணமாக நடத்த ஆசைப்படுகின்றன. இதற்கான காரணம் நம் சமுதாயத்தில் இருக்கும் எண்ணற்ற திருமண சடங்குகள் ஆகும். பெண்ணிற்கு பூவைப்பது தென் தமிழகத்தில் மிகவும் பிரபலம் ஆகும். ஒரு பெண்ணை பார்த்து ஜாதக கட்டங்கள் பொருந்தும் பட்சத்தில் மணமகன் வீட்டார் மணமகளுக்கு பூவைப்பார்கள் இதற்கு மற்றொரு பெயர் பரிசம் போடுதல் ஆகும். இப்படி செய்வதினால் அந்த பெண்ணை வேறு எவரும் பெண் பார்க்க வரமாட்டார்கள் என்பது இதன் ஐதிகம் ஆகும்.
 
===நிச்சயதார்த்தம்===
 
பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணையும் பிடிக்கும் பட்சத்தில் இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்து திருமணத்திற்கு நாள் குறிப்பது நிச்சயதார்த்தம் ஆகும். வீட்டு வாசலில் முகூர்த்த கால் நட்டு வீட்டின் பூஜை அறையில் முகூர்த்த அரிசி அள்ளிப்போட்டு மண்டபத்திற்கு குடும்பத்துடன் புறப்படுவார்கள். இவ்வாறு செய்வதினால் திருமணத்தில் எந்தவொரு தடங்களும் வராது என்பது நம்பிக்கை ஆகும். திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பு முதல் சாந்தி முகூர்த்தம் வரை பல சடங்குகள் அடங்கும்.
 
===மாப்பிள்ளை அழைப்பு===
 
மாப்பிள்ளை மண்டபத்திற்கு வந்த பின் அவர பெண்வீட்டார்கள் மேளதாளத்துடன் வாணவேடிக்கையுடன் சுமங்கலி பெண்கள் ஆரத்தி எடுத்து மணமகனை மண்டபத்திற்குள் அழைத்து செல்வார்கள்.
 
===காப்புக்கட்டுதல்===
 
தொடங்கிய காரியம் நிறைவேறும் வரை எந்தவொரு தீங்கும் மணமக்களை நெருங்க விடாமல் தடுக்கவே காப்புக்கட்டப் படுகிறது. நவதானிய பூஜை சுமங்கலி பெண்களால் சிறிய மண் சட்டிகளில் நவதானியங்களை செலுத்தி வழிபாடு செய்வது. இவ்வாறு செய்வதினால் நவதானியங்கள் போல மணமக்களின் திருமண வாழ்க்கையும் வளர வேண்டும் என்பது இந்த சடங்கின் பொருள் ஆகும்.
 
===கன்னிகாதானம்===
 
அனைத்து வளங்களும் பெற்று இவர்கள் வாழ வேண்டும் என்று இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் திலகமிட்டு மரியாதை செய்துக் கொள்வர்கள்.
 
===அம்மி மிதித்தல்===
 
பெண்ணின் வலது காலில், மணமகன் கையால் அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிக்க வேண்டும். இந்தக் கல்லைப் போல் வாழ்வில் எப்போதும் நிலையாக நின்று எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் கற்பிக்கிறது. கல் எப்படி எதனையும் தாங்குமோ அதுபோல வாழ்கையிலும் இன்ப துன்பங்கள் இரண்டையும் கண்டு பயமில்லாமல், உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று உணர்த்துவது இதன் பொருளாகும்.
 
===அருந்ததிப் பார்த்தல்===
 
அருந்ததி நட்ச்சத்திரதை மணமக்கள் பார்ப்பதினால் அவர்களது இல்லற வாழ்க்கை அருந்ததி நட்சத்திரத்தைப் போன்று உன்னதமாக இருக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை ஆகும்.
 
===வளைகாப்புச் சடங்கு===
 
திருமணமாகிய பெண்ணின் கர்ப்பகாலத்தில் எழாவது மாதத்தில் வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுவது தமிழர்கள் வழக்கம் ஆகும். பெண் வீட்டார்கள் தங்களது உறவினர்களுடன் பலவிதமான உணவுகளை சமைத்து மாப்பிள்ளை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். பெண்ணிற்கு கண்ணாடி வளையல்கள் அனுவித்து அவரை தங்களது வீட்டிற்க்கு அழைத்து செல்வார்கள். குழந்தை பெற்றெடுப்பது என்பது ஒருவகையில் மறு பிறவியாகும். கருவுற்ற பெண்ணிற்கும் பிறக்கபோகும் குழந்தைக்கும் எந்தவொரு கெடுதலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக வளைகாப்புச் சடங்கு நடத்தப்படுகிறது.
"https://tamilar.wiki/w/சடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது