சக்கீரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
No edit summary
 
வரிசை 45:
 
== இசை வாழ்க்கை ==
=== 1991 - 1994 : மகியா & பெலிக்ரோ ===
 
ஷக்கீராவின் முதல் இசைத் தொகுப்பான மகியா சோனி நிறுவனத்தால் [[1991]] இல் வெளியிடப்பட்டது. அப்போது ஷக்கீராவுக்கு 13 வயது மட்டுமே. கொலம்பியன் வானொலிகளில் ஒலிபரப்பப் பட்டு இளம் ஷக்கீராவுக்கு உந்துதல் அளிக்கப்பட்டது. ஆனால் விற்பனை நோக்கில் இந்த இசைத்தொகுப்பைச் செய்யவில்லை. ஆயிரம் படிகளுக்கும் குறைவான அளவே விற்றது. இதன் காரணமாக அடுத்த இசைத்தொகுப்பில் அதிக வெற்றிப் பாடல்களைக் கொடுக்கும் கட்டாயம் ஷக்கீராவுக்கு ஏற்பட்டது.
வரிசை 53:
பிறகு ஷக்கீரா பள்ளிப் படிப்பிற்காக இசைவாழ்வில் சற்று இடைவெளியும் விட்டார். [[2008]] இல் ஷக்கீரா கொலம்பியன் தொலைக்காட்சித்தொடர் ஒன்றில் நடித்திருந்தார்.
 
=== 1995 - 2000: Pies descalzos and ¿Dónde están los ladrones? ===
 
ஷக்கீரா தோண்ட்த் எஸ்டஸ் கொரொஜன் என்கிற பாடலை நியூஸ்ட்ரோ ராக் என்கிற இசைத் தொகுப்புக்காக 1995 ல் பாடினார். அந்த இசைத் தொகுப்பில் அப்பாடல் மட்டுமே அறியப்பெற்றதாக இருந்தது. இதனால் சோனி நிறுவனம் மூன்றாம் முறையாக மீண்டுமொரு வாய்ப்பை ஷக்கீராவுக்கு அளித்தது. ஷக்கீரா 1995 ல், லூயிஸ் ஓச்சா என்பவருடன் இணைந்து செயல்பட்டார். அவரது மூன்றாம் இசைத்தொகுப்பு தயாரானது. பியஸ் டெஸ்கால்ஜஸ் என்றழைக்கப்பட்ட மூன்றாவது இசைத்தொகுப்பு இஇலத்தீன் அமெரிக்காவில் பரவலானது. ஏறத்தாழ ஐந்து மில்லியன் படிகள் விற்று சாதனை படைத்தது. ரிமிக்ஸஸ் என்று அழைக்கப்பட்ட அவரது போர்த்துக்கீஸிய பாடல்களும் புகழ் பெற்றன. பிரேசில் சந்தையில் மட்டுமே ஒரு மில்லியன் படிகள் விற்றுத் தீர்ந்தன.
வரிசை 61:
மார்ச் 2000 ல் இஇலத்தீன் அமெரிக்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இசைச்சுற்றுலா மேற்கொண்டார். ஆகஸ்ட் 2000 ல் அவர் MTV வீடியோ இசை விருது இவருக்கு வழங்கப்பட்டது.
 
=== 2001-2004 - லாண்ட்ரி சர்வீஸ் ===
 
தோண்ட் எஸ்தன் லாஸ் லாட்ரொனெஸ் ? இன் வெற்றியைத் தொடர்ந்து 2001 ல் ஆங்கிலத்தில் இசைத்தொகுப்பு வெளியிடும் வேலைகளைத் தொடங்கினார். க்ளோரியா எஸ்தஃபன் என்பவரைத் துணைக்கொண்டு முந்தைய இசைத்தொகுப்பான தோண்ட் எஸ்தன் லாஸ் லாட்ரொனெஸ் ? ன் பாடல்களை ஆங்கில எழுத்துக்களாக்கினார். பின்னர் ஷக்கீரா அவரது பழைய பாடல்களை ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்ய முடிவு செய்தார். ஏறத்தாழ ஓராண்டு கால உழைப்பில் புதிய வகையிலான இசைத் தொகுப்பு உருவாகிக்கொண்டிருந்தது. இதனிடையே பெப்சி விளம்பர பாடல்கள் நான்கை பாடிமுடித்தார். நவம்பர் 24, 2001 ல் லாண்ட்ரி சர்வீஸ் எனப்படும் ஆங்கில இசைத்தொகுப்பு வெளியானது. ஆங்கிலச் சந்தையில் இந்த இசைத்தொகுப்பு பெருமளவில் நுழைந்தது. இதில் நான்கு எசுப்பானிய பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஷக்கீராவின் ஆங்கிலம் சற்று நலிவடைந்தது என்றாலும் இந்த இசைத்தொகுப்பு நன்கு விற்று தீர்ந்தது. அதோடு ட்ரிபில் ப்ளாட்டினம் என்று சான்றளிக்கப்பட்டது. ட்ரிபில் ப்ளாட்டினம் என்பது 3 மில்லியன் படிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்தால் வழங்கப்படுவது. ஷக்கீராவுக்கு நன்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்த இந்த இசைத்தொகுப்பு, உலகம் முழுக்க 13 மில்லியன் படிகள் விற்று தீர்ந்தது.
வரிசை 67:
2002 ல் ஷக்கீரா எசுப்பானிய இசைத்தொகுப்பான கிராண்டெஸ் எக்சிடஸ் வெளியிட்டார். செப்டம்பர் 2002 ல் International Viewer's Choice விருது வென்றார். அதே ஆண்டில் அக்டோபரில் MTV நிகழ்பட விருதுகளில் இஇலத்தீன் அமெரிக்க சிறந்த பெண் பாடகி, சிறந்த பாப் பாடகி, சிறந்த வடக்குக் கலைஞர், சிறந்த நிகழ்படம் (சுர்தே), ஆண்டின் சிறந்த கலைஞர் என்று ஐந்து விருதுகளை வென்றார்.
 
=== 2005-2007: ஃபிக்சேசன் தொகுப்புகள் ===
 
ஷக்கீரா அதன்பிறகு இரு ஆண்டுகள் காத்திருந்தார். பின்னர் 2005 தொடக்கத்தில் ஓரல் ஃபிக்சேசன் (Oral Fixation) என்கிற முயற்சியை அறிவித்தார். அம்முயற்சியின் முதல் இசைத்தொகுப்பான ஃபிக்சேசன் ஒரல் சூன் 3 ல் அயர்லாந்தில் வெளியானது. சூன் 6, 2005 ல் ஐரோப்பாவிலும் சூன் 7 2005 ல் வடக்கு அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் வெளியிடப்பட்டது. அவ்வால்பத்தின் முன்னணி பாடல் அல்ஜாண்ட்ரோ ஸான்ஸுடனான "லா டோர்டுரா" தனிப்பாடல் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. பில்போர்ட் லத்தீனில் 25 வாரங்கள் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எசுப்பானிய பாடல்களில் பெரும் வெற்றி பெற்ற பாடலும் இதுவே. உலக அளவில் இரண்டாம் இடத்திலும் இருந்தது.
வரிசை 84:
ஓரல் ஃபிக்சேசன் சுற்றுலா DVD , நவம்பர் 12 ல் வெளியானது. இது ப்ளூ ரே தட்டிலும் கிடைக்கிறது.
 
=== 2008 -2009 அடுத்த இசைத்தொகுப்பு ===
 
பிப்ரவரி 2008 ல் தனது அடுத்த இசைத்தொகுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக ஒரு வலைத் தளத்தில் தனது ரசிகரிடம் கூறியிருந்தார். ஆனால் முறையான தேதி விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆயினும் ஒரு விழாவில் ஷக்கீராவின் தந்தை வில்லியம் மெபாரக், ஷக்கீரா அடுத்த இசைத்தொகுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டார் என்று கூறினார். இது அவரது சொந்த ஒலியரங்கில் நடந்தது.
வரிசை 94:
ஏப்ரல் 27 2008 ல் ஷக்கீரா தனது சொந்த ஊரான பாரன்கில்லாவுக்குச் சென்றார். அங்கும் நிருபருக்குப் பேட்டியளிக்கையில், தனக்கு வேலைகள் நிறைந்து இருப்பதாகவும் ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இசைத்தொகுப்புக்கு உழைத்ததாகவும் கூறினார். அதே சமயம் அடுத்த ஆண்டு (2009) தனது இசைத்தொகுப்பு வெளியிடும்படி இருக்கும் என்றார். எலன்கோ பத்திரிக்கைக்குப் பேட்டியளிக்கையில் ஷக்கீரா தான் 30 பாடல்கள் எழுதி வைத்திருப்பதாகவும் இன்னும் எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
 
=== மற்றவர்களுடன் ===
 
2006 இறுதியில் அல்ஜாண்ட்ரோ ஸான்ஸுடன் " டெ லொ அக்ரேட்ஸ்கோ , பெரொ நோ " என்கிற பாடலை அல்ஜாண்ட்ரோவில் இசைத்தொகுப்புக்காக பாடினார். இது இலத்தீன் அமெரிக்காவில் முதல் பத்து இடத்தைப் பிடித்தது. பில்போர்ட் இலத்தீன் பாடல்களிலும் முதல் இடங்களை வகித்தது.
வரிசை 106:
மடோன்னா, டன்ஸ்டால், ஃபைத் ஹில், டிடோ, செலின் டியான், மெலிசா எத்ரிட்ஜ், ஜோஸ் ஸ்டோன், ஃபெர்ஜி, அனஸ்டாசியா, மற்றும் பிங்க் போன்ற பெரும் பாடகிகள் 23 பேர் பங்குபெற்ற பெரிய இசைத்தொகுப்பான "மாஸ் டிஸ்ட்ரக்ஷன்" ல் ஆனி லெனாக்சுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடினார்.
 
=== Love in the Time of Cholera soundtrack ===
 
லவ் இன் த டைம் ஆஃப் சொலேரா என்கிற கொலம்பிய நாவல் ஒன்றைப் படமாக்கும்பொழுது அதற்கென இரு பாடல்களை ஷக்கீரா எழுதிக் கொடுத்தார். அவை "பியன்ஸோ என் டி" என்றழைக்கப்பட்டன. அவரது பழைய இசைத்தொகுப்பான பியஸ் டெஸ்கால்சஸ் இசைத் தொகுப்பில் இருந்து வந்த பாடல்கள் அவை. இவற்றிலல் "டெஸ்பெடிடா" என்கிற பாடல் கோல்டன் க்ளோபுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
"https://tamilar.wiki/w/சக்கீரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது