சிறுகுடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: அமைப்புக்கள் → அமைப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 24:
 
== அமைப்பு ==
=== அளவு ===
சிறுகுடலின் நீளம் பெரிதும் வேறுபடுகிறது. குறைந்த அளவாக 2.75 மீட்டர் நீளம் (9.0 அடி) முதல் அதிக அளவாக 10.49 மீ (34.4 அடி) வரையில் இந்த அளவு மாறுபடுகின்றன .<ref name=Di2016/>. வாழும் மனிதர்களின் சிறுகுடல் சராசரியாக 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை வேறுபடுகிறது <ref>{{Cite book|title=Principles of Anatomy & Physiology|url=https://archive.org/details/principlesofanat0000tort|last=Tortora|first=Gerard|publisher=Wiley|year=2014|isbn=978-1-118-34500-9|location=USA|pages=913|quote=..its length is about 3m in a living person and about 6.5m in a cadaver due to loss of smooth muscle tone after death.|via=}}</ref><ref>{{Cite book|title=Gray's Anatomy|last=Standring|first=Susan|publisher=Elsevier|year=2016|isbn=978-0-7020-5230-9|location=UK|pages=1124|quote=..and has a mean length of 5 metres (3 - 8.5 metres) when measured intraoperatively in the living adult (Tietelbaum et al 2013).|via=}}</ref>. நபருக்கு நபர் காணப்படும் உயரத்தைச் சார்ந்தும், எவ்வாறு சிறுகுடல் நீளம் அளவிடப்படுகிறது என்பதைப் பொருத்தும் இந்நீள மாறுபாடுகள் அமைகின்றன <ref name=Di2016/>.
பொதுவாக உயரமான மனிதர்களுக்கு நீண்ட சிறு குடல் காணப்படுகிறது. குடல் காலியாக உள்ள போதும், இறந்த பிறகு எடுக்கப்படும் அளவுகளும் பொதுவாகவே நீளமாக இருக்கும் <ref name=Di2016>{{cite book|last1=DiBaise|first1=John K.|last2=Parrish|first2=Carol Rees|last3=Thompson|first3=Jon S.|title=Short Bowel Syndrome: Practical Approach to Management|date=2016|publisher=CRC Press|isbn=9781498720809|page=31|url=https://books.google.ca/books?id=GBhjDAAAQBAJ&pg=PA31|language=en}}</ref>.
சிறுகுடலின் விட்டம் சுமார் 2.5-3 செ.மீ (1 அங்குல) அளவுக்கு காணப்படுகிறது. இவ்விட்டத்தின் அளவு சுமார் 3 செ.மீ வரைக்கும் விரிவடைவதாக வயிற்று எக்சு கதிர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன <ref name=medscape>{{cite web|url=http://emedicine.medscape.com/article/374962-overview|title=Small-Bowel Obstruction Imaging|website=[[Medscape]]|date=2016-09-22|author=Ali Nawaz Khan|accessdate=2017-02-07}}</ref><ref>{{cite web|url=http://www.radiologymasterclass.co.uk/tutorials/abdo/abdomen_x-ray_abnormalities/pathology_small_bowel_obstruction|title=Abdominal X-ray - Abnormal bowel gas pattern|website=radiologymasterclass.co.uk|accessdate=2017-02-07}}</ref>. [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி|சி.டி. நுணுகிநோக்கல்]] ஆய்விலும் 2.5 மீட்டர் அளவுக்கு இவ்விரிவு இருப்பதாக அறியப்படுகிறது <ref name=medscape/><ref name="GazelleGoldberg1994">{{cite journal|last1=Gazelle|first1=G S|last2=Goldberg|first2=M A|last3=Wittenberg|first3=J|last4=Halpern|first4=E F|last5=Pinkney|first5=L|last6=Mueller|first6=P R|title=Efficacy of CT in distinguishing small-bowel obstruction from other causes of small-bowel dilatation.|url=https://archive.org/details/sim_ajr-american-journal-of-roentgenology_1994-01_162_1/page/43|journal=American Journal of Roentgenology|volume=162|issue=1|year=1994|pages=43–47|issn=0361-803X|doi=10.2214/ajr.162.1.8273687}}</ref>. மடிப்புகள், விரலிகள், நுண்விரலிகள் போன்றவற்றின் விரிவால், மனித சிறுகுடல் மென்சவ்வின் பரப்பளவு சராசரியாக 30 சதுரமீட்டர்கள் அளவுக்கு காணப்படுகிறது <ref>{{cite journal|last1=Helander|first1=Herbert F|last2=Fändriks|first2=Lars|title=Surface area of the digestive tract – revisited|journal=Scandinavian Journal of Gastroenterology|volume=49|issue=6|year=2015|pages=681–689|issn=0036-5521|doi=10.3109/00365521.2014.898326|pmid= 24694282 }}</ref>.
 
=== பகுதிகள் ===
==== முன்சிறுகுடல் ====
டியோடினம் என்று அழைக்கப்படும் முன்சிறுகுடல் சிறுகுடலின் ஆரம்பப்பகுதியாகும். இது ஆங்கில எழுத்து ‘C’ போன்று வளைந்து காணப்படும் <ref name=GRAYS2005>{{cite book|last=Drake|first=Richard L.|title=Gray's anatomy for students|url=https://archive.org/details/graysanatomyfors00unse|year=2005|publisher=Elsevier/Churchill Livingstone|location=Philadelphia|isbn=978-0-8089-2306-0|author2=Vogl, Wayne |author3=Tibbitts, Adam W.M. Mitchell |author4=illustrations by Richard |author5= Richardson, Paul |page=[https://archive.org/details/graysanatomyfors00unse/page/273 273]}}</ref>. இதன் ஆரம்பப் பகுதி வயிற்று வெளியுறைக்குள்ளும், எஞ்சியிருக்கும் மற்ற பகுதிகள் யாவும் இவ்வுறைக்கு பின்பகுதியிலும் காணப்படுகின்றன. முன்சிறுகுடலின் இரண்டாவது பகுதி வலது சிறுநீரகத்தை ஒட்டி கீழ்புறமாக இறங்குகிறது. மேலும் கணையத்தின் தலைப்பகுதியை ஒட்டியும் இது அமைந்துள்ளது. பின் நடுப்பகுதியில் கணையத்தின் நாளமும்,பித்த நாளமும் வாட்டரின் விரிவு அமைப்புடன் சேர்ந்து முன்சிறுகுடலுடன் இணைகிறது. கணையத்தின் கீழ் விளிம்புடன் முன்சிறுகுடலின் மூன்றாம் பகுதியும், மகா தமனியை ஒட்டி நான்காம் பகுதியும் மேலேறி முடிவில் சிறுகுடல் பகுதி ஆரம்பமாகிறது.
 
செரிமான நொதி திரவங்களான கணையநீர் மற்றும் [[பித்தநீர்|பித்தநீருடன்]] வயிற்றிலிருந்து பெறப்படும் தொடக்கநிலை செரிமான உணவு முன் சிறுகுடலுக்கு வந்து சேர்கிறது. புரதங்கள், பித்தநீர், கொழுப்பு முதலியன இங்கு செரிமான நொதிகளால் சிறு மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டு கூழ்மம் ஆக்கப்படுகிறது. பைகார்பனேட்டு கொண்டுள்ள சளி நிறைந்த கார சுரப்பை உற்பத்தி செய்யும் பிரன்னர் சுரப்பிகள் முன்சிறுகுடலில் உள்ளன. இச்சுரப்புகள் கணையத்திலிருந்து வரும் பைகார்பனேட்டு காரத்துடன் சேர்ந்து தொடக்கநிலை செரிமான உணவிலுள்ள வயிற்று அமிலங்களை நடுநிலையாக்குகின்றன.
==== நடுச்சிறுகுடல் ====
சிறுகுடலின் மையப்பகுதியாகக் காணப்படுவது நடுச்சிறுகுடல் ஆகும். இப்பகுதி முன்சிறு குடலையில் இறுதிப்பகுதியான இலியத்தையும் இணைக்கிறது. 2.5 மீட்டர் நீளம் கொண்ட இப்பகுதியில் வட்டமடிப்பு திசுக்களும் விரலிகளும் அமைந்து இதன் பரப்பை அதிகரிக்கின்றன. சர்க்கரை, அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்ற செரிமான விளைபொருட்கள் இங்குதான் இரத்தத்தில் ஈர்க்கப்படுகின்றன. முன்சிறுகுடல் தசை நடுசிறுகுடலையும் முன் சிறுகுடலையும் பிரிக்கிறது.
 
==== பின் சிறுகுடல் ====
சிறுகுடலின் இறுதிப்பகுதி பின் சிறுகுடல் அல்லது இலியம் எனப்படுகிறது. 3 மீட்டர் நீளம் கொண்ட இது நடுசிறுகுடலில் இருப்பது போலவே விரலிகள் எனப்படும் குடல் நீட்சிகளைப் பெற்றுள்ளது. வைட்டமின் பி12, பித்த அமிலங்கள் மற்றும் ஏதாவது எஞ்சியுள்ள சத்துப் பொருட்கள் முதலானவற்றை இது ஈர்க்கிறது. பின் சிறுகுடல் சந்திப்பில் பின்சிறுகுடலும் பெருங்குடலின் பெருங்குடல் வாயும் இணைகின்றன. நடுசிறுகுடலும் இலியமும் வயிற்றுக்குழியில் தொங்கு சவ்வுகளால் இணைக்கப்பட்டுள்ளன.
வயிற்றறை உறை, தமனிகள், நரம்புகள், நிணநீர் நாளங்கள் மற்றும் நரம்புகள் பயணம்செய்யும் நடுமடிப்பு ஆகியனவற்றின் பகுதியாக தொங்கு சவ்வுகள் உள்ளன <ref name=GRAYS2005C>{{cite book|last=Drake|first=Richard L.|title=Gray's anatomy for students|url=https://archive.org/details/graysanatomyfors00unse|year=2005|publisher=Elsevier/Churchill Livingstone|location=Philadelphia|isbn=978-0-8089-2306-0|author2=Vogl, Wayne |author3=Tibbitts, Adam W.M. Mitchell |author4=illustrations by Richard |author5= Richardson, Paul |page=[https://archive.org/details/graysanatomyfors00unse/page/271 271]}}</ref>.
 
=== இரத்த ஓட்டம் ===
சீலியக் தமனியிலிருந்தும் மேல்குழாய் தமனியிலிருந்தும் சிறுகுடல் இரத்தத்தைப் பெறுகிறது. இவையிரண்டும் மகாதமனியின் கிளைகளாகும். மேல்கணையச் சிறுகுடல் தமனி வழியாக சீலியக் தமனியிலிருந்தும், கீழ்கணையச் சிறுகுடல் தமனி வழியாக மேல்குடல் இணையத் தமனியிலிருந்தும் முன்சிறுகுடல் இரத்தத்தைப் பெறுகிறது.இந்த இரண்டு தமனிகளும் முன்புற மற்றும் பின்புற கிளைகளைக் கொண்டுள்ளன. மற்றும் இவ்விரு கிளைகளும் நடுக்கோட்டில் சந்தித்து பின்னிக் கொள்கின்றன.
நடுச்சிறு குடலும், இலியமும் மேல்குடல் இணையத் தமனியிலிருந்து இரத்தத்தைப் பெறுகின்றன <ref name=GRAYS2005B>{{cite book|last=Drake|first=Richard L.|title=Gray's anatomy for students|url=https://archive.org/details/graysanatomyfors00unse|year=2005|publisher=Elsevier/Churchill Livingstone|location=Philadelphia|isbn=978-0-8089-2306-0|author2=Vogl, Wayne |author3=Tibbitts, Adam W.M. Mitchell |author4=illustrations by Richard |author5= Richardson, Paul |pages=[https://archive.org/details/graysanatomyfors00unse/page/295 295]–299}}</ref>. மேல்குடல் இணையத் தமனியின் கிளைகள் குடலுறைக்குள் பல வளைவுகளை உருவாக்குகின்றன. இவை பல அடுக்குகள் வரை ஆழமானவையாகும். நேரான குழல்கள் என்றழைக்கப்படும் நேர் இரத்தக் குழாய்கள் நடுசிறுகுடல் மற்றும் பின்சிறுகுடல் பகுதிகளுக்கு நெருக்கமான வளைவுகளில் பயனம் செய்கின்றன <ref name=GRAYS2005B />.
 
=== திசு அமைப்பியல் ===
[[File:Small intestine low mag.jpg|thumb|right|200px|சிறுகுடலின் நுண்வரைபடம். விரலி எனப்படும் குடல் நீட்சியையும், குடற் சுரப்பிகளையும் காட்டும் [[சீதமென்சவ்வு]]]]
 
வரிசை 66:
|}
 
=== வளர்ச்சி ===
நடுகுடலின் பழமையான குடல் குழாயிலிருந்து சிறுகுடல் வளர்ச்சியடைகிறது <ref name=LARSENS2009>{{cite book|first1=Gary C. |last1=Schoenwolf |first2=Steven B. |last2=Bleyl |first3=Philip R. |last3=Brauer |first4=Philippa H. |last4=Francis-West |title=Larsen's human embryology|url=https://archive.org/details/larsenshumanembr0000unse |date=2009|publisher=Churchill Livingstone/Elsevier|location=Philadelphia |isbn=9780443068119 |chapter=Development of the Urogenital system |edition=4th |page=[https://archive.org/details/larsenshumanembr0000unse/page/237 237]}}</ref>. கருவியல் வாழ்க்கையின் ஐந்தாவது வாரத்தில் இலியம் எனப்படும் பின்சிறுகுடல் மிக வேகமான விகிதத்தில் நீண்டு வளரத் தொடங்கி, U- வடிவ மடிப்பு கொண்ட சிறுகுடல் முதன்மை குடல் சுருளாக உருவாகிறது. இச்சுருள் மிக நீளமாக வேகமாக வளந்து வயிற்றுக்கு வெளிப்புறத்தில் தொப்புள் வழியாக துருத்திநிற்கிறது. 10 ஆவது வாரத்தில் இச்சுருள் மீண்டும் வயிற்றுக்குள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகிறது. ஆறு மற்றும் பத்தாவது வாரங்களுக்கு இடையே வளர்கருவின் முன்னிருந்து பார்க்கையில், சிறு குடல் இடஞ்சுழியாக சுழல்வதை பார்க்கலாம். பிறகு அது மேலும் 180 டிகிரி சுழன்று திரும்பவும் வயிற்றுக்குள் செல்கிறது. இந்தச் செயல்முறையால் பெருங்குடலின் முறுக்கப்பட்ட வடிவம் உருவாகிறது <ref name=LARSENS2009 />.
 
வரிசை 72:
வயிற்றில் இருந்து வரும் உணவு குடல்வாய் வழியாக குடல் சுருங்குதசை மூலம் முன்சிறுகுடலினுள் அனுமதிக்கப்படுகிறது.
 
=== செரிமானவியல் ===
பெரும்பாலான இரசாயன செரிமான நிகழ்வுகள் நடைபெறும் இடமாக சிறு குடல் உள்ளது. சிறுகுடலில் செயல்படுவதற்கான பல செரிமான நொதிகளை கணையமும் கல்லீரலும் சுரக்கின்றன. இச்சுரப்புகள் கணையக்குழாய் வழியாக சிறுகுடலுக்குள் நுழைகின்றன. பித்தப்பையிலிருந்து வரும் கணைய நொதியும் பித்தநீரும் கோல்சிசுடோகினின் எனப்படும் கணையச்சுரப்பு ஊக்கநொதியின் உதவியால் சிறுகுடலுக்குள் நுழைகின்றன. ஊட்டச்சத்துகள் கோல்சிசுடோகினினை சிறுகுடலுக்குள் சுரக்கின்றன. செரிநீர் என்ற மற்றொரு இயக்குநீரும் சிறுகுடலுக்குள் சுரக்கப்படுகிறது. இது கனையத்தில் கூடுதலாக சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. முன்சிறுகுடலுக்குள் பைகார்பனேட்டு வெளியிடப்படுவதை இது ஊக்குவிக்கிறது. வயிற்றிலிருந்து வரும் அமிலத்தை நடுநிலையாக்கும் பணியை இப்பைகார்பனேட்டு மேற்கொள்கிறது.
கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பு, உயிர்சத்து, கனிமசத்து, உயிர்சத்து போன்ற உடலுக்குத் தேவையான உயிர்சத்துகள் அனைத்தும் சீரணமண்டல் பாதை வழியாகவே உடலுக்குள் நுழைகின்றன. கார்போவைதரேட்டு, புரதம், கொழுப்பு முதலிய சத்துகள் சிறுசிறு அலகுகளாக உடைக்கப்பட்டு உட்கிரகிக்கப்படுதல் சிறுகுடலிலேயே நிகழ்கிறது. இங்கிருந்து கார்போவைதரேட்டும், புரதமும் இரத்தக் குழாய்கள் மூலமாகவும் கொழுப்பு நிணநீர் நாளங்கள் மூலமாகவும் உட்கிரகிக்கப்படுகின்றன.
 
====புரதங்களின் செரிமானம் ====
புரதங்கள் உட்கிரகிக்கப்படுவதற்குமுன் சிறிய பெப்டைடுகளாகவும் அமினோ அமிலங்களாகும் சிதைக்கப்படுகின்றன<ref>{{cite journal |author=Silk DB |title=Progress report. Peptide absorption in man|journal=Gut |volume=15|issue=6|pages=494–501|year=1974|pmid= 4604970 |pmc=1413009 |doi=10.1136/gut.15.6.494}}</ref>. புரதங்களின் செரிமானம் இரைப்பையில் தொடங்கி சிறுகுடலில் தொடர்கிறது. கணையத்தில் சுரக்கும் புரதச் செரிமான நொதிகளான டிரிப்சின் மற்றும் ஐமோடிரிப்சின், எலாசுடேசு போன்றவை புரதங்களை சிறிய பெப்டைடுகளாக சிதைக்கின்றன. சிறுகுடல் சளிச்சவ்வில் சுரக்கப்படும் அமினோபெப்டோடைசுகளும் டைபெப்டைடேசுகளும் புரதங்களை முற்றிலுமாக சிதைத்து அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. சிறுகுடல், சிறுகுடல் மேற்பரப்பு, சைட்டோபிளாசம் போன்ற இடங்களில் அமினோ அமிலங்களின் இறுதிச் செரிமானம் நடைபெறுகிறது.
 
==== கொழுப்புகளின் செரிமானம் ====
இங்கு லிப்பிடுகள் கொழுப்பு அமிலங்களாகவும் கிளிசராலாகவும் சிதைக்கப்படுகின்றன. கணைய லைப்பேசு முக்கிளிசரைடுகளை கொழுப்பு அமிலங்களாகவும் ஒற்றை கிளிசரைடுகளாவும் உடைக்கிறது. கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேமித்து வைக்கப்படும் பித்தநீரிலிருந்து கிடைக்கும் உப்புகளின் உதவியுடன் கணைய லைப்பேசு பணியில் ஈடுபடுகிறது. ஏனெனில் லைப்பேசு நீரில் கரையக்கூடியதாக உள்ளது. ஆனால் முக்கிளிசரைடுகள் நீரெதிர்ப்பு பண்பைக் கொண்டுள்ளன. பித்த உப்புகள் நீர்ச்சூழலில் இருக்கும் முக்கிளிசரைடுகளுடன் இணைந்து லைப்பேசு நொதி அதை விரலிகளால் ஈர்க்கமுடியுமளவிற்கு சிறுசிறு துண்டுகளாக உடைக்கிறது. செரிக்கப்பட்ட கொழுப்பு மெல்ல ஊடுறுவல் முறையில் சளிச்சவ்வு உயிரணுக்களுக்குள் நுழைகிறது.
 
==== கார்போவைதரேட்டுகளின் செரிமானம் ====
உணவில் காணப்படும் கார்போவைதரேட்டுகளில் உள்ள ஒற்றை சாக்கரைடுகள் எளிய சக்கரைகளாக சிறுகுடலில் மாற்றப்படுகின்றன. உண்ணப்படும் உணவிலுள்ள சிடார்ச்சு ஆல்பா அமைலேசு நொதியால் உடைக்கப்பட்டு சிறுகுடலுக்கு வருகிறது இங்கும் இதே நொதியும் கணையத்தில் சுரக்கும் ஆல்பா அமைலேசும் உடைக்கப்பட்ட சிடார்ச்சை ஒலிகோசாக்ரைடுகளாக மாற்றுகின்றன. சிறுகுடலின் மேற்பரப்பு செல்களால் இவை குளுகோசாக மாற்றப்பட்டு சளிச்சவ்வு உயிரணுக்களால் உள்ளிழுக்கப்படுகிறது. மற்ற கார்போவைதரேட்டுகள் எல்லாம் செரிக்கப்படாமல் பெருங்குடலை அடைந்து அங்கு குடல் பாக்டீரியாக்களால் கையாளப்படுகின்றன. டெக்சுடிரினேசும் குளுக்கோ அமைலேசும் ஒலிகோசாக்ரைடுகளை சிதைக்கின்றன.
=== உள்ளீர்ப்பு ===
செறிக்கப்பட்ட உணவு ஊடுறுவல் அல்லது நேரடி இயக்கத்தின் மூலம் சிறுகுடல் சுவரில் உள்ள இரத்த நாளங்களுக்குள் செல்கிறது. உட்கொள்ளப்பட்ட உணவில் இருக்கும் பெரும்பாலான ஊட்டச்சத்துகள் ஈர்க்கப்படும் இடம் சிறுகுடலே ஆகும். சிறுகுடலின் உட்புறச் சுவர், அல்லது சளிச்சவ்வு உள்பக்கத்தில் வட்டச்சுருக்கு தசைகளும் வெளிப்புறத்தில் எபிதீலியல் திசுவுடன் எளிய நிரல் வரிசையில் நீளவாக்கிலும் அமைந்துள்ளது. இவையே சிறுகுடலின் நிரந்தர சுவர்களாகவும் கருதப்படுகின்றன. சுருக்க விரிவுகளை அனுமதிக்கும் நிலையற்ற அல்லது தற்காலிக சுருக்கங்களிலிருந்து இவை வேறுபட்டவையாகும். வட்டசுருக்குத் தசைகளிலிருந்து ஏராளமான நீண்டகுடல் நீட்சிகள் காணப்படுகின்றன. இவை விரலிகள் என அழைக்கப்படுகின்றன. தனிப்பட்ட எபிதீலியல் செல்களிலும் சிறிய குடல் நீட்சிகள் அல்லது நுண்விரலிகள் உள்ளன. தேவையான அளவுக்கு ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதற்காக, பரப்பளவை அதிகரிக்கச் செய்யும் பணியை வட்டச்சுருக்குத் தசைகள், விரலிகள், நுண்விரலிகள் முதலியன செயற்படுகின்றன.
வரிசை 98:
*சோடியம் பைகார்பனேட்டு இயக்கமுறையிலும் குளுகோசும் அமினோ அமிலங்களும் இணை இயக்க முறையிலும் ஈர்க்கப்படுகின்றன. பிரக்டோசு எளிமையான விரவல் முறையில் ஈர்க்கப்படுகிறது.
 
=== நோய்த்தடுப்பாற்றல் ===
உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு சிறு குடல் பெரிதும் உதவுகிறது <ref>{{cite web|url=http://www.massgeneral.org/about/pressrelease.aspx?id=1533|title=Intestinal immune cells play an unexpected role in immune surveillance of the bloodstream|publisher=Massachusetts General Hospital|date=13 December 2012|access-date=1 மே 2017|archive-date=16 அக்டோபர் 2018|archive-url=https://web.archive.org/web/20181016130005/https://www.massgeneral.org/about/pressrelease.aspx?id=1533|url-status=dead}}</ref>.
மனித இரைப்பையிலுள்ள உயிர்ப்பொருட்கள், நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு நேர்முகமாக பங்களிப்பதாக தோன்றுகிறது. சிறுகுடலின் இலியத்திலுள்ள திசுக்களும் உணவுப்பாதையின் நோயெதிர்ப்பு ஆற்றலில் முக்கியபங்கு வகிக்கின்றன. இவை நிணநீர் அமைப்பின் ஒரு பகுதியாகவும், தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அல்லது பிற நுண்ணுயிர் எதிர்ப்பிகளாகவும் விளங்குகின்றன. மேலும் தொடர்ச்சியாக இத்தளத்தில் நோய் எதிர்ப்பையும் அளித்து வருகின்றன.
"https://tamilar.wiki/w/சிறுகுடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது