ஜெ. ராம்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி clean up using AWB
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
 
'''ஜெ. ராம்கி''' என்று அழைக்கப்படும் ஜெ. ராமகிருஷ்ணன் (34) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூக நோக்கர். [[மயிலாடுதுறை]]யைச் சேர்ந்தவர். சென்னையில் மென்பொருள் வல்லுநராக பணிபுரிகிறார். அரசியல், வரலாறு, தொழில்நுட்பம் குறித்து இணையத்திலும், தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்நாட்டின் முக்கியமான மூன்று ஆளுமைகளான [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[ஜெயலலிதா]] மற்றும் [[ரஜினிகாந்த்]] குறித்து இவர் எழுதிய புத்தகங்கள், கடந்த பத்தாண்டுகளில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. [[எமர்ஜென்ஸி]] நேரத்தில் [[ஜெயப்பிரகாஷ் நாராயணனின்]] சிறை அனுபவங்கள், மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான [[ஐரம் ஷர்மிளா]] மற்றும் முன்னாள் பிரதமர் [[நரசிம்ம ராவ்]] குறித்த இவரது மொழியாக்கங்களும் குறிப்பிடத்தக்கவை.
 
''ரஜினி சப்தமா? சகாப்தமா?'' என்னும் தலைப்பில் [[ரஜினிகாந்த்|ரஜினி]]யைப் பற்றி இவர் எழுதிய முதல் புத்தகம் 2005ல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பின்னர் மு.க என்னும் தலைப்பில் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] குறித்த அலசல் புத்தகத்தின மூலமாக பரவலாகப் பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து இவர் எழுதிய [[பாகவதர்]] - எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை குறித்த புத்தகமும், ஜெ அம்மு முதல் அம்மாவரை என்னும் தலைப்பில் [[ஜெயலலிதா]] குறித்து எழுதிய புத்தகமும் குறிப்பிடத்தக்கவை. ஜெ. ராம்கியின் [[மன்மோகன்சிங்]] குறித்த புத்தகம், [[காவிரி]]யின் கதை, [[ம.தி.மு.க]]வின் வரலாறு, [[இண்டர்நெட்]] இயங்குவது எப்படி? உள்ளிட்ட சிறு புத்தகங்களும் தமிழ் வாசிப்புலகில் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
 
2008 ஆம் ஆண்டு இளம் எழுத்தாளருக்கான [[திருப்பூர்]] கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதையும் பெற்றிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் இவரது பல கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள், கேள்வி பதில்கள் போன்ற பங்களிப்புகள் குமுதம், ஆனந்த [[விகடன்]], [[குங்குமம்]], [[கல்கி]], [[இந்தியா டுடே]], இதயம் பேசுகிறது, [[தினமணி]], [[தினமலர்]] உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கைகளிலும் நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. தற்போது [[வலம்]] உள்ளிட்ட சிறு பத்திரிக்கைகளிலும் [[சொல்வனம்]], [[தட்ஸ்தமிழ்]], [[தமிழோவியம்]] உள்ளிட்ட இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்
 
<h1> நூல்பட்டியல் </h1>
== நேரடி புத்தகங்கள் ==
* ரஜினி சப்தமா, சகாப்தமா? கிழக்கு பதிப்பக வெளியீடு, மார்ச் 2005
* மு.க கிழக்கு பதிப்பக வெளியீடு, மே 2006
* பாகவதர், கிழக்கு பதிப்பக வெளியீடு, ஆகஸ்ட் 2007
* ஜெ - அம்மு முதல் அம்மா வரை, கிழக்கு பதிப்பக வெளியீடு, அக்டோபர் 2008
* ஆரம்பம் 50 காசு, கிழக்கு பதிப்பக வெளியீடு, ஆகஸ்ட் 2010
* வியாபம், கிழக்கு பதிப்பக வெளியீடு, செப்டம்பர், 2015
* 1984 சீக்கியர் கலவரம், கிழக்கு பதிப்பக வெளியீடு, நவம்பர் 2017
== மொழியாக்கங்கள் ==
* இந்திரா vs ஜே.பி - எமர்ஜென்ஸி ஜெயில் நினைவுகள், கிழக்கு பதிப்பக வெளியீடு, டிசம்பர் 2009
* ஐரோம் ஷர்மிளா, கிழக்கு பதிப்பக வெளியீடு, ஆகஸ்ட் 2010
* நரசிம்ம ராவ், கிழக்கு பதிப்பக வெளியீடு, ஏப்ரல் 2017
 
== விருதுகள் ==
* 2020-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் விருது
* 2008-ஆம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளருக்கான திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருது
 
== உசாத்துணை ==
* [https://rajniramki.blogspot.com ஜெ.ராம்கியின் வலைப்பதிவு]
*[https://www.amazon.com/J-Ramki/e/B077XYY2YN?ref=sr_ntt_srch_lnk_2&qid=1649950069&sr=1-2 ஜெ.ராம்கி யின் புத்தகங்கள் அமேசான் வலைத்தளத்தில்]
*[https://www.dinamani.com/cinema/special/2021/apr/01/rajinikanth-phalke-top-films-3595212.html ரஜினிக்கு பால்கே விருது-தினமணி ஏப்ரல் 1, 2021]
*[https://www.bbc.com/tamil/india-55199159 ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் - அடுத்தது என்ன? - BBC News தமிழ்]
* ஜெ.ராம்கி – வலம் (valamonline.in)
* [https://youtu.be/R9IZ7PEKgUY Clash between Jayalalitha vs Rajini from 1991 to 1996 | YouTube]
* [https://youtu.be/T9CM15Lb-n0 "இந்தியை திணிக்க முயன்றால் தமிழ்நாடு ஏற்காது-ரஜினி" - ராம்கி (எழுத்தாளர்) கருத்து - YouTube]
* [https://youtu.be/cQuTp_r2iGE "ரஜினிகாந்த் அரசியல் கட்சி தலைவரா?" - முதலமைச்சர் கருத்துக்கு ராம்கி (ரஜினி அபிமானி) பதில் - YouTube]
* [https://youtu.be/ES5pMgMhEKI "சீமானுக்கே எதுவும் தெரியாது" - ரஜினி ராம்கி | Rajini Ramki | Rajinikanth | Seeman - YouTube]
==வெளி இணைப்புகள்==
 
* ஜெ. ராம்கியின் வலைப்பதிவு - http://rajniramki.blogspot.com
 
* ஜெ. ராம்கியின் பிற படைப்புகள் - http://www.nhm.in/shop/J.-Ramki.html {{Webarchive|url=https://web.archive.org/web/20090409020329/http://nhm.in/shop/J.-Ramki.html |date=2009-04-09 }}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/ஜெ._ராம்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது