திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சூர்யா செ No edit summary |
No edit summary |
||
வரிசை 10:
மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத் தமிழரால் பயன்படுத்தப்பட்டன. அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் பெயர் பெற்ற சொற்களாக உள்ளன. சில சொற்கள் பிற மொழியாளர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றதென்று அறியலாம். சான்றாகக் "கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் [[நாலடியார்|நாலடியாரிலும்]], [[ஆசாரக்கோவை]]யிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம்.
'கடி' என்பது பல பொருள் தரும் [[உரிச்சொல்]] ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம்.<br />
கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும், மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. [[சீவக சிந்தாமணி]]யில் 'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்து திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.
கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.
:"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
வரிசை 20:
என்று [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார் [[நச்சினார்க்கினியர்]]. 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை.
'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை
அறியலாம். 'மன்றல்' என்ற [[சொல்]] தொன்று தொட்டு வழங்கப்படுகிறது.
வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் [[சிலப்பதிகாரம்|சிலம்பு]], [[சீவக சிந்தாமணி|சிந்தாமணி]], [[பெருங்கதை]], [[கந்த புராணம்]], போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வரை என்பதற்கு [[மலை]], வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் [[தொல்காப்பியம்]] "வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் இது பின்னர் வழக்கொழிந்துள்ளது.
வரிசை 47:
ஆகிய மண முறைகளைக் காணலாம்.
இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர். பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது
தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இது [[கலித்தொகை]]யில் முல்லைக்கலியில் [[இடையர்|ஆயர்]] மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கித் தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் [[ஆடு]], [[மாடு]] போன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் [[புலி]] முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின் ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதை அறியலாம்.
பனை மடலைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மடலேறுதல் இல்லை. ஏனெனில் நாணம் துறந்து மடலேறுதல் என்பது காமம் மிக்க கழிபடர் தலைவனுக்கு உரிய ஒன்றாகும். மடலூரும் தலைவனே இச்செயலை நாணமிக்க செயலாகக் கருதுவதாக [[குறுந்தொகை]]ப் பாடல் காட்டுகிறது. இவ்வழக்கு தற்போது இல்லை.
தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை [[தொல்காப்பியம்]] சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப் [[புறநானூறு]] என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன.
துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக் காலங்களில் துணங்கையும், மன்னர்ப் போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை [[குறுந்தொகை]]ப் பாடல் காட்டுகிறது.
[[படிமம்:சீதனம்.jpg|thumb|200px|right|மணமகளின் பெற்றோர் தனது மகளுக்கு வழங்கிய சீர்வரிசைப் பொருள்கள்]]
மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும். மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு
வரிசை 77:
* [[குழு மணம்]]
ஓர் ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறாது. [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்]]களில் [[காமக்கிழத்தி]], பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மக்கட் பேறு மட்டும் கருதி மட்டுமே [[பலமனைவி மணம்|இப்பலதார மணம்]] நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம்.
உறவு முறைத் திருமணம் [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]] காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலை காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர்.
சங்க கால [[குறிஞ்சி]], [[முல்லை (திணை)|முல்லை]], [[மருதம்]], [[நெய்தல்]], [[பாலைத்திணை|பாலை]] என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை [[அகநானூறு]]ப் பாடல் <ref>அம்மூவனார். அகநானூறு. நெய்தல், மருதம் தினைப் பாடல்கள்</ref> மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெறவில்லை.
மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மணத்தல் சேவை மணம் எனப்படும். [[சீவக சிந்தாமணி]] யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மணந்ததும், [[பெருங்கதை]]யில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும்.
வரிசை 198:
* ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள்.
இந்தியாவில் சராசரி 89 சதவிகிதம் திருமணங்கள் சொந்த [[சாதி]]க்குள்ளேயே நடக்கின்றன. தமிழகத்தில் 2.59 சதவிகிதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. தமிழக மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவு 97.41 சதவிகிதம் அகமணமுறை திருமணங்கள் நடப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=81040 | title=கவுரவக் கொலைகள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | accessdate=30 செப்டம்பர் 2014 | author=பி. சுகந்தி | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305100703/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=81040 |url-status=dead}}</ref>
| |||