தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''தூது''' என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அரசர்கள் பகைவர்களிடத்தும், புலவர்கள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>அனிதா தமிழாசிரியர்
No edit summary
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''தூது''' என்பது ஒருவர் தம் கருத்தை இன்னொருவருக்குப் புலப்படுத்த இடையே பிறிதொருவரை அனுப்புவதாகும். அரசர்கள் பகைவர்களிடத்தும், புலவர்கள் வள்ளல்களிடத்தும், தலைவர் தலைவியரிடத்தும், தலைவியர் தலைவரிடத்தும் தூது அனுப்பியுள்ளனர். இதற்கான சான்றுகள் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தின்]] மூலமும், [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்தின்]] மூலமும் அறியலாம்.
 
தமிழரிடத்திற் தூதுவிடும் மரபு தனிப் பாடல்களிலும், பத்தி இலக்கியங்களிலும், [[ஐம்பெருங் காப்பியங்கள்|காப்பியங்களிலும்]] இடம்பெற்று [[கி.பி.]] 14ஆம் நூற்றாண்டளவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. இந்தவகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாக கி.பி. 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதி சிவாச்சாரியாரின்]] [[நெஞ்சுவிடு தூது|நெஞ்சுவிடு தூதினைக்]] குறிப்பிடுவர். தூது இலக்கியப் பாடல்கள் கண்ணி என்ற வடிவில் அமைந்திருக்கும். இரண்டிரண்டு பூக்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலைக்குக் 'கண்ணி' என்று பெயர்.அது போல இரண்டிரண்டு அடிகளைக் கொண்டு பாடப்படுவதும் 'கண்ணி[[கண்ணி (செய்யுள் உறுப்பு)]]'எனப்பட்டது.
 
தூது இலக்கியத்தில் மிகச் சிறப்பான தூதாக இன்றளவும் சிறப்பிக்கபடுவது,'தமிழ் விடு தூது'[[தமிழ்விடு தூது]] நூல்தான். தூது இலக்கியமானது,'சந்து இலக்கியம்'அல்லது 'வாயில் இலக்கியம்' என்றும் அழைக்கப்படுகிறது.தூது அனுப்ப ஏவப்படும் பொருள்களாகச் சிலவற்றைப் பாட்டியல் நூல்கள் கூறியுள்ளன. அவற்றுள் அன்னம்,மயில்,கிளி,மேகம்,வண்டு,நெஞ்சம்,மான்,காக்கை ஆகியவை அடங்கும். தற்காலத்தில் புகையிலை விடு தூது,செருப்பு விடு தூது ஆகியன கூட இயற்றப்பட்டுள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/தூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது