தோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot |
No edit summary |
||
வரிசை 13:
* அடித்தோல் - உடலுறுப்புகளுடன் இணைக்கும் இணையுறுப்பாக செயல்படுகிறது.
[[படிமம்:Skin.jpg|thumb|300px| '''தோல்''' படலங்கள்: மேற்றோல், உட்தோல், அடித்தோல்<br />[[மயிர்]], வியர்வைச் சுரப்பி & எண்ணெய்ச் சுரப்பி]]
தோலின் மேற்புற எல்லை எபிடெர்மிஸ் (அ) மேற்புறத்தோல் ஆகும். இது உடலின் பாதுக்காப்பு அரணாக விளங்குகிறது. மேலும் [[நுண்ணுயிரி]]களால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், உடலிலிருந்து நீர் ஆவியாதலைத் தடுத்தல், போன்ற பணிகளை ஸ்குவாமஸ் எபிதீலியம் (அ) படை கொண்ட செதின் மேலணி [[புறவணியிழையம்|புறவணியிழையங்கள்]] செய்கின்றன. இவ்விழையம் [[நகமியம்|கெராட்டின்]] புரதத்தாலான நகமிய உயிரணுக்களைக் (கெராட்டினோசைட்டுகள்) கொண்டுள்ளன.
இந்நகமிய உயிரணுக்கள், மேற்புறத்தோல் அடுக்கின் பெரும்பான்மையாக 95% உள்ளன. மேலும் மெர்கெல் உயிரணுக்கள், கருநிறமி உயிரணுக்கள் (மெலனொசைட்டுகள்), வலியுணர் (லாங்கர்ஹான்) உயிரணுக்கள் போன்றவையும் அடங்கியுள்ளன. மேற்புறத்தோலின் மேலடுக்கிலிருந்து மேற்புறத்தோல் மேலும் கீழ்வருமாறு அடுக்குகளாக (அ) படலமாக வகைப்படுத்தப்படுகிறது,<ref name="ageingskin">[http://pharmaxchange.info/press/2011/03/the-ageing-skin-part-1-structure-of-skin-and-introduction/ The Ageing Skin – Structure]. pharmaxchange.info. March 3, 2011</ref>
கடின உயிரணுக்களைக் கொண்ட மேற்புறத்தோல் அடுக்கு. இக்கடினத் தோல் படலம் கை, கால்களில் அமைந்துள்ளன. இத்தோல் படலம் கடினத்தன்மையுடன் 15-20 அடுக்குகளைக் கொண்டிருக்கும். எனவேதான் காயத்திலிருந்து பாதுகாக்கிறது.
கடினத்தோலின் அடிப்புற அடுக்கான இவ்வடுக்கு தெளிவாக ஒளி ஊடுருவக்கூடியத் தன்மை கொண்டது. பாதம், உள்ளங்கைகளிலுள்ள இறந்த உயிரணுக்களில் இத்தெளிந்த மேற்படலம் அமைந்துள்ளது. மேலும் நீர்ப்புகா வண்ணம் அரணாக விளங்குகிறது.
நுண்மணிப் போன்ற தோலடுக்கு மடிப்பு நிலையில் வரிசைக்கிரமாக அமைந்திருக்கும். படைகொண்ட செதின் மேலணி புறவணியிழையங்கள் ஒன்று முதல் மூன்று அடுக்குகள் வரை தெளிந்த மேற்படலத்தை ஒட்டி அமைந்துள்ளன. இந்நுண்மணிப் படலத்தில் உயிரணு அடுக்குகள் குறைந்தே காணப்படும்.
கனசதுர வடிவ உயிரணுக்கள் பல வரிசையில் அடுக்கப்பட்டாற்போல் நகமிய உயிரணுக்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. இதில் 8-10 அடுக்குகள் பன்முக உயிரணுக்கள் உண்டு. இது தோல் படலத்திற்கு அமைப்பு உருவாக்கும் பணியைச் செய்கிறது. இணைப்பு உயிரணுக்களை ஒட்டி அடுக்குகளின் இணைப்புப் பாலமாக விளங்குகிறது.
மேற்புறாத்தோலின் ஆழமான அடுக்கு கீழ்முளை உயிரணுப் படலமாகும். மேற்புறத்தோலின் அடிப்புற நகமிய உயிரணுக்கள் மறைமுகச் செல்பகுப்பின் மூலம் புதிய உயிரணுக்களை உண்டாக்குகின்றன. இது கெராட்டினாக்கம் (அ) நகமிய உயிரணுவாக்கம் ஆகும். மெலும் இவ்வுயிரணுக்கள் மேலுள்ள பழைய உயிரணுக்களை வெளி நோக்கித் தள்ளிவிடுகின்றன.வெளி உயிரணுக்கள் புதிதாக உருவாகும் புதிய உயிரணுக்களைப் பாதுகாக்கும். வெளி உயிரணுக்களின் வேதிய தன்மை, அமைப்பு மாறுபட்டு உட்கருவற்ற உயிரணுக்களாக மற்றாமடைகின்றன. இச்செயல் முறையின் போது நகமிய உயிரணுக்கள் கொழுப்புடன் இணைந்து வெளிப்புறத் தளப்பொருளை உருவாக்கி தோலை வலுவாக்குகின்றன.<ref name="Pmid">{{cite journal | pmid=19333614 | year=2009 | last1=Breitkreutz | first1=D | last2=Mirancea | first2=N | last3=Nischt | first3=R | title=Basement membranes in skin: Unique matrix structures with diverse functions? | volume=132 | issue=1 | pages=1–10 | doi=10.1007/s00418-009-0586-0 | journal=Histochemistry and cell biology}}</ref>
மேற்புறத்தோலும், அடித்தோலும் மெல்லிய தகடு போன்ற கற்றையினால் பிரிக்கப்படுகின்றன. இதற்கு அடித்தளமென்றகடு (அ) தளச்சவ்வு (பேஸ்மென்ட் மெம்பரேன்) என்று பெயர். இச்சவ்வு இவ்விரு பகுதிகளின் பணிகளையும் செய்கின்றது.
தளச்சவ்வானது உயிரணு, மூலக்கூறுகளின் போக்குவரத்து இடையூறுகளைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இவை வளர்ச்சிக்காரணிகள் மற்றும் [[சைட்டோக்கைன்]]களுடன் கட்டுண்டு உடற்சீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது.<ref>{{cite journal | pmid=16064139 | year=2005 | last1=Iozzo | first1=RV | title=Basement membrane proteoglycans: From cellar to ceiling | volume=6 | issue=8 | pages=646–56 | doi=10.1038/nrm1702 | journal=Nature Reviews. Molecular Cell Biology}}</ref>
மேற்புறத் தோலின் ஆழமான பகுதி அடித்தோல் (அ) உட்சருமம் ஆகும். இவை இணைப்பிழையங்களால் ஆனவை. இதனால்
[[அழுத்தம்]], இறுக்கம் முதலியவற்றிலிருந்து மெத்தை போல் பாதுக்காக்கிறது. அடித்தோல் உயிரணு வெளித்தளப்பொருட்களின் (எக்ஸ்ட்ரா செல்லுலார் மேட்ரிக்ஸ்) மூலம் இழுவிசைப் பலத்தையும், நெகிழும் தன்மையையும் தோலுக்கு அளிக்கிறது. உயிரணு வெளித்தளப்பொருளானது, [[புரதம்]], [[கார்போவைதரேட்டு]] உள்ளிட்ட வேதிப் பொருட்களுடன் பொதிந்து, இழைய நார் (கொல்லாஜன் ஃபைப்ரில்ஸ்), நுண்சவ்வு (மைக்ரோ ஃபைப்ரில்ஸ்), இழுதகு நார்கள் (எலாஸ்டிக் ஃபைபர்ஸ்), போன்றவற்றையும் உள்ளடக்கியது.
விரல் போன்ற நீட்சிகள் மேற்புறத்தோல் வரையிலும் நீண்டு காணப்படுவதால் இது அரும்பு (பாப்பில்லே) (அ) முளைப்பகுதி எனப்படுகிறது. அரும்புப் பகுதி இலகுவான காற்று இணைப்பிழையத்தால் ஆனது. மேலும் இது சமதளமேற்பரப்பினை ஏற்படுத்தி மேற்புறத்தோலுடன் பொருந்தி இணைப்பை வலுவாக்க உதவுகிறது.
அரும்புப் பகுதியின் ஆழமான இடத்துள் தடிமனாக காணப்படும் சிறிய வலைப்போன்ற பகுதி ஆகும். இது அடர்த்தியான ஒழுங்கற்ற இணைப்பிழையத்தால் ஆனது. மேலும் இதில் செறிவுற்ற இணைப்பு நார், நெகிழ் நார், வலை நார் போன்றவை முழுவதுமாக அலைப் போன்று படர்ந்து காட்சியளிக்கின்றன. இப்புரத நார்கள் தோலுக்கு வலுச் சேர்ப்பதுடன் நெகிழவும், நீளவும் உதவுகிறது. இவ்வலைப்பகுதியில் [[முடி]]யின் வேர்ப்புறம், செபாசியஸ் சுரப்பி, [[வியர்வை]] சுரப்பி, [[நகம்|நகக்கணு]] மற்றும் [[குருதி]] நாளங்கள் அமைந்துள்ளன.
தோலின் பகுதியாக அல்லாமல், அடித்தோலுக்கு கீழ் அமைந்துள்ள பகுதி கீழ்த்தோல் ஆகும். [[எலும்பு]], [[தசை]], போன்றவற்றை தோலுடன் இணைக்கும் இணைப்பு பாலமாகச் செயல்படுகிறது. மேலும் தோலுக்கு [[நரம்பு]], [[குருதி]] பகிர்வானாகவும் உள்ளது.
இது இலகுவான இணைப்பிழையத்தாலும், நெகிழ் புரதத்தாலும் (எலாஸ்டின்) ஆனது. நாருயிரணு (ஃபிப்ரோப்ளாஸ்ட்), [[பெருவிழுங்கி]], கொழுப்பினியிழையம் (அடிபோசைட்) (உடலின் மொத்த கொழுப்பில் 50% கீழ்த்தோலில் உள்ளது) போன்ற முக்கிய [[உயிரணு]] வகைகளைக் கொண்டுள்ளது. கீழ்த்தோலின் மற்றொரு பெயர் தோலடியிழையம் (சப்-க்யூட்டேனியஸ் திசு) ஆகும்.
வரிசை 54:
தோலின் அமைவிடத்தைப் பொருத்தே நுண்ணுயிர்க் கூட்டங்களின் அடர்த்தியும் அமைகிறது. தொற்று நீக்கப்பட்ட புறத்தோற்பகுதியில் உடனடியாக ஏனைய ஆழமான தோற்பகுதிகளான [[முடி|மயிர்]]க்கால்கள், [[மனித இரையகக் குடற்பாதை]], கழிவு-இனப்பெருக்கப் பாதைகளின் முகப்பு ஆகியவற்றிலிருந்து பரவும் [[பாக்டீரியா]]க்கள் நுண்ணுயிர்க்கூட்டங்களை அமைக்கின்றன.
{{wide image|Skin_layers.svg|800px|மயிருள்ள & மயிரற்ற தோலின் பல்வேறு படலங்கள் & அமைப்பு}}
== மீன், இருவாழ்விகள், பறவை, ஊர்வனவற்றின் தோல் அமைப்பு ==
[[File:Fish scales.jpg|thumb|200px|right|{{center|செதில்கள் - தம்பட [[மீன்]] (''லேபியோ ரோஹித்தா'') }}]]
[[மீன்]]கள் மற்றும் பெரும்பாலான இருவாழ்விகள் தங்களின் தோற்பகுதியில் உயிருள்ள [[உயிரணு|செல்களையும்]], சிறிய அளவு கெராட்டின் (அ) [[நகமியம்]] எனும் [[புரதம்|புரதத்தினையும்]] தோலின் மேல் அடுக்கில் பெற்றுள்ளன. பொதுவாக இவற்றின் தோல்கள் அயல் காரணிகளை உட்புகவிடும் (அ) ஊடுருவவிடும் தன்மை கொண்டதாகும். தோலிலுள்ள துளைகள் பெரும்பாலான [[நீர்நில வாழ்வன|இருவாழ்வி]]களின் சுவாச உறுப்பாகவும் செயல்படுகின்றன. சட்டக மீன்களின் உட்தோலில் [[நாற்காலி (உயிரியல்)|நாற்காலிகளைப்]] போன்று இணைப்பிழையத்தால் ஆனது. பெரும்பாலான மீன்களின் புறத்தோல் திடமான, நீர் பாதுகாப்புக் கவசமான [[செதில்]]களால் ஆனது. ஊர்வனவற்றின் செதில்கள், பாலூட்டியான [[எறும்புண்ணி]]யைப் போன்று நீர்வாழ்வனவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
[[நீர்நில வாழ்வன|இருவாழ்விகள்]] தோற்பகுதியில் இருவகையான சுரப்பிகளைக் கொண்டுள்ளன. அவை நுண்மணி, கோழைச் சுரப்பிகள் ஆகும். இச்சுரப்பிகள் தோலின் கவசமாக உடல் முழுதும் படர்ந்துள்ளன. இச்சுரப்பிகள் மூன்று (நாளம், இடைப்பகுதி, நுண்குழிவுகளுடைய சுரப்பை) பகுதிகளைக் கொண்டுள்ளது.
[[File:FrogSkin.png|thumb|300px|கு.வெ தோற்றம் - தவளையின் தோல். A: கோழைச்சுரப்பி, B: குரோமட்டோஃபோர் (நிறந்தாங்கி), C: நுண்மணி(நச்சு) சுரப்பிகள், D: இணைப்பிழையம், E: கடின அடுக்கு, F: இடைமாற்று நிலை, G: மேற்புறத்தோல், H: அடித்தோல்]]
தோற்பகுதியில் அடர்ந்த நச்சு கொண்ட நுண்ணிய மணிவடிட சுரப்புப் பகுதிகள் காணப்படுகின்றன. இச்சுரப்புகளின் நஞ்சின் அளவு, அடர்த்தி, பரவல், போன்றவை [[நீர்நில வாழ்வன|இருவாழ்விகளின்]] வரிசை, சிற்றினம் ஆகியவற்றுள் ஒன்றனுக்கொன்று மாறுபட்டவை. இந்நஞ்சு சில சமயம் உயிர்க்கொல்லும் நஞ்சாகவும், சில சமயம் எவ்வித விளைவுகளையும் முதுகெலும்புள்ள விலங்குகளில் ஏற்படுத்துவதில்லை.
இவை நுண்மணிச் சுரப்பிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பணியைச் செய்கின்றன. உடலின் மேற்பரப்பை புறக்காரணிகளான [[வெப்பம்]], [[நீர்]], [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|pH]], நிலத்தில் ஏற்படும் உராய்விலிருந்து பாதுகாக்க இக்கோழைச் சுரப்பிகள் சுரக்கும் கோழைப்படலம் உதவுகின்றது. உடற்தோலின் ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது. வேட்டை விலங்குகளின் பிடியில் இருந்து தப்பிக்க கோழைப்படலத்தின் இவ்வழுக்கும் தன்மை உதவுகிறது. மேலும் நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது.
[[பறவைகள்]] மற்றும் [[ஊர்வன]]வற்றின் புறத்தோல் பாலூட்டிகளை ஒத்து காணப்படுகிறது. மேலும் இவைகளின் புறத்தோலில் நீரின் தேவையைக் குறைக்க இறந்த [[நகமியம்|நகமிய]] செல்கள் உதவுகின்றன. இதே மதிரியான இறந்த [[நகமியம்|நகமிய]] செல்கள் [[நீர்நில வாழ்வன|இருவாழ்வியான]] [[தேரை]]யிலும் காணப்படுகிறது.
| |||