நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
No edit summary
No edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
<div style="float: right;"> {{#display_map:9.619773119125837, 79.77185616931645| height=350px| width=280px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div>
 
| coordinates = {{coord|9|37|9.66|N|79|46|18.99|E|display=inlineregion:LK_type:l}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் =நயினாதீவு
வரி 22 ⟶ 23:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| official_name = நயினாதீவு
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|37|9.66|N|79|46|18.99|E|display=inline}}
}}
 
'''நயினாதீவு''' (''Nainativu'') [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள]] [[சப்த தீவுகள்]] என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் ([[சிங்கள மொழி]]யில், நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite news |title=Neṭun-tīvu, Puṅkuṭu-tīvu, Nayiṉā-tīvu, Eḻuvai-tīvu, Maṇṭai-tīvu |url=https://www.tamilnet.com/art.html?artid=22728 |publisher=TamilNet |date=July 15, 2007}}</ref><ref>{{cite news |title=Naaka-naadu, Naaka-theevu, Naaga-deepa|url=https://www.tamilnet.com/art.html?artid=31711&catid=98|publisher=TamilNet |date=May 7, 2010}}</ref> இந்த தீவில் உள்ள [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நாகபூசணி அம்மன்]] கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். [[இலங்கை]]யிலுள்ள பௌத்த சமயத்தவர் [[கௌதம புத்தர்]] இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில [[பௌத்தம்|பௌத்த]] பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.
 
வரி 117 ⟶ 110:
== போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம் ==
 
1619 இல் யாழ்ப்பாணத் தமிழரசு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது. “கி.பி. 1620 இல் தொடங்கிய போர்த்துக்கீச தனியரசாட்சியில், முதற் தேசாதிபதியான[[தேர்வுத் துடுப்பாட்டம்|தே]]<nowiki/>சாதிபதியான பிலிப் தே ஒலிவேறா நல்லூரை வதிவிடமாக்கியவுடன் முன்கூறியபடி [[நல்லூர்க் கந்தசுவாமி கோவில்|நல்லூர்க் கந்தசாமி கோயிலை]] இடித்து, அக்கோயிற் கற்களைக் கொண்டு கோட்டையும் வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத்தில் இருந்த சைவ, வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோவிலதிகாரிகளும், அர்ச்சகர்களும் தத்தம் கோவில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும், குளங்களிலும் போட்டு மறைத்தார்கள். யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிற இடங்களில் எல்லாம் உள்ள புத்த, சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமையம் வாய்த்துழி வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கிவிட்டனர்,” என்பது முதலியார் செ.இராசநாயகம் அவர்களது கூற்று.
 
இக்காலத்தில் (கி.பி. 1620–1624 அளவில்) நயினாதீவுக் கோவில் அழிக்கப்பட்டது. நயினாதீவில் இருந்த கோவில் அழிக்கப்பட்ட பின்பு, போர்த்துக்கீசரும், அவர்களின் பின்வந்த டச்சுக்காரரும் அதனை மீள நிறுவுவதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் டச்சுக்கார ஆட்சியின் இறுதிக்காலத்தே (கி.பி.1788 அளவில்) கோவில் இருந்த இடத்தில் சிறிய அளவில் வழிபாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
வரி 147 ⟶ 140:
== பேரினவாத நெருக்கடி ==
 
பிரித்தானியர் ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, தமிழ் ஈழத்தின் ஏனைய சிற்றூர்களை விடவும் அதிக அளவில் சிங்களப் பேரினவாதப்பிடி நயினாதீவை இறுக்கத்தொடங்கிற்று. 1958ஆம் ஆண்டில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது. தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தமிழர்களின்[[தமிழர்]]<nowiki/>களின் சாத்வீகமான போராட்டத்தை அடக்க இனக்கலவரத்தை ஏவிவிட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். இந்த இனக்கலவரத்தின் காரணமாக தமிழ் இனத்திற்கு நேர்ந்த உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் எழுதப்புறப்பட்டால் முடிவின்றி நீளும். கொழும்பிலும் ஏனைய தென்பகுதி நகரங்களிலும் தாக்கப்பட்டும், உடைமைகளை இழந்தும் அகதிகளாகி தமது உற்றார் உறவினர்கள் தமிழ் ஈழப் பகுதிகளுக்குத் திரும்பி வந்ததாலும், பலர் கொல்லப்பட்டதாலும் தமிழர்கள் தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே சிங்களவர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களவர் எவருமே கொல்லப்படவில்லை. இந்த வேளையில், நயினாதீவில் இருந்த புத்தபிக்கு 1958.05.29இல் காரைநகர் கடற்படைமுகாமில் சென்று தஞ்சமடைந்ததன்பின்பு, நயினாதீவிலுள்ள பௌத்த விகாரை 1958 யூன் மாத முற்பகுதியில் தாக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து யூன் 10 ஆம் நாள் பகல் ஒரு மணி அளவில் பொலிசாரும் கடற்படையினரும் நயினாதீவுக்கு வந்திறங்கி, ஏழு ஊரவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றதுடன் பல வீடுகளையும், கடைகளையும் எரித்து அழித்தனர். அத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலையும் அவர்கள் எரித்துச் சேதப்படுத்தினர். கோவிலைச் சூழவிருந்த மடங்கள் யாவும் எரித்து முற்றாக அழிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஏழுபேரும் காரைநகர் கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மாலை சுமார் 7.30 மணிவரை அங்கு வைத்து பொலிசாராலும், கடற்படையினராலும் அடித்து நொருக்கப்பட்டனர். பின்னர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் அங்கும் பொலிசாராலும், கடற்படையினராலும் நடுச்சாமம் வரை அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
 
மறுநாள் - அதாவது 11. சூன் 1958 அன்று - காலை இந்த ஏழுபேரும் கடற்படைப் படகு ஒன்றில் மீண்டும் நயினாதீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் படகில் பொலிசாரும், கடற்படையினரும், ஊர்காவற்றுறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, துணை ஆய்வாளர் சிட்னி ஐவர் பளிப்பான Sub-Inspector Sydney Ivor Palipane) என்பவரும் சென்றனர். நயினாதீவில் அன்றைய தினம் மேலும் பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நயினாதீவுப் பால முகப்பில் ‘சிங்களவரே திரும்பிப் போங்கள்’ (Sinhalese Go Back) என்று ஆங்கிலத்தில் தார் கொண்டு எழுதப்பட்டு இருந்த வாசகங்களை நாக்கால் நக்கும்படி படையினர் சில கைது செய்யப்பட்ட ஊர்மக்களைப் பலவந்தப்படுத்தி செய்வித்தார்கள். அன்று மாலை சுமார் 6.30 மணிவரை நயினாதீவில் படையினரின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. மாலை 6.30 மணிக்கு நயினாதீவில் இருந்து புறப்பட்ட படகு காரைநகர் கடற்படை முகாமுக்கு சென்றடைந்ததும் கைது செய்யப்பட்ட நயினை மக்கள் அனைவரும் வேறு ஒரு படகுக்குள் மாற்றப்பட்டு அதனுள் வைத்துத் தாக்கப்பட்டனர். இரவு 9.15 மணி அளவில் கைது செய்யப்பட்டோர் யாவரும் ஊர்காவற்றுறை பொலிசு நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இரவு முழுவதும் அடித்தும், வேறு அநாகரிகமான விதத்திலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். மறுநாள் 12. சூன் 1958 பகல் 12.00 மணிவரை இவர்கள் பொலிசு நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட பின்பு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் திரு.பி.ஜி.எஸ்.டேவிட் முன்னிலையில் அன்றைய நாள் முன்னிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஒரு வாரத்தின் பின்பு, விளக்க மறியலில் இருந்தவர்களில் மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனையோரில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடைசி நபர் 3. சூலை 1958 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்ட எந்த ஒருவருக்கும் எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் பொலிசாரால் நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்படவில்லை. தம்மை அடித்துக் கொடுமைப்படுத்தியோரை அடையாளம் காட்ட முடியுமென்று தாக்கப்பட்டவர்கள் கூறியும் அரசாங்கம் அவர்களைத் தாக்கிய பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விதமாக அப்பாவி நயினை மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டமையும், அது தொடர்பாக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமையும் பிற்காலத்தில் புத்த விகாரை நிருவாகத்தின் எந்தச் செயலையும் கண்மூடிப்பார்த்திருக்கும் போக்கை நயினாதீவில் வளர்த்துவிட்டன எனலாம்.
வரி 169 ⟶ 162:
 
* [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்]]
* [[நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலயம்]]
* நயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்
* [[நயினாதீவு வீரபத்திரப் பெருமான் ஆலயம்|நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலயம்]]
வரி 174 ⟶ 168:
* இரட்டங்காலி முருகன் ஆலயம்
* வேள்விநாயன் கோயில்
* நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலயம்
* நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
* நயினாதீவு பிரண்டையம்பதி ஶ்ரீ காளி அம்மன் ஆலயம்
வரி 227 ⟶ 220:
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]
[[பகுப்பு:இலங்கையின் தீவுகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது