நாவண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>Premkumar001 No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|image = Naavannan-2002may.jpg
|caption =
|birth_name =
|birth_date = {{Birth date|1947|03|15}}
|birth_place = [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[இலங்கை]]
|death_date = {{Death date and age|2006|04|15|1947|03|15}}
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = கவிஞர், ஓவியர், ஈழத்து எழுத்தாளர், சிற்பி
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''நாவண்ணன்''' (மருசலீன் சூசைநாயகம், மார்ச் 15, 1947 - ஏப்ரல் 15, 2006) ஓர் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] கவிஞர், ஓவியர், சிற்பவல்லுனர், நாடக நெறியாள்கையாளர் ஆவார்.<ref>{{cite news |title=Pirapaharan confers Maamanithar award to Poet Naavannan|url=https://tamilnet.com/art.html?catid=13&artid=21896|publisher=TamilNet |date=April 15, 2007}}</ref> போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஓவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவர். நாட்டுப்பற்றாளர். இவர் தனது கலைப்படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டி விட்டவர். சிங்கள அரசு தமிழீழத்திலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதனதன் தன்மைகளோடு காலவரிசைப்படி பதிவு செய்தவர். போராட்ட வாழ்வில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தவர். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதியநுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு ஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தவர்.
==எழுத்துலகம்==
* இவர் [[1957]] இலிருந்து நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பெயரில் நூலாக்கித் தொகுத்திருந்தார்.
* சிங்களப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றி 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.
* விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பெயரில் எழுதினார்.
* [[1999]] இல் நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றி ஒரு தொகுப்பை கையெழுத்துப்பிரதியாகச் செய்திருந்தார். அது அச்சில் வெளிவரவில்லை.
* இவரது 'அக்கினிக் கரங்கள்' என்ற நூல் [[மார்ச் 1]], [[2006]] அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது.
* [[நவாலி தேவாலயத் தாக்குதல்|நவாலிப் படுகொலை]]யின் நினைவாக 'எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன' என்னும் நூலை 10-10-1995 அன்று நவாலி தேவாலயத்தின் முற்றத்தில் வைத்து வெளியிட்டார்.
==புலிகளின் குரல் வானொலியில்==
[[புலிகளின் குரல் வானொலி]]யில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடர் நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் வழங்கினார். ஏற்கெனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளையும் சேர்த்துத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக் குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தினார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை பல விடயங்களை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.
==குடும்ப விபரம்==
இவருக்கு ஒரு மகன் ஐந்து மகள்கள். இவரின் மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) போராட்டத்தில் இணைந்து மே 16, 1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் களமொன்றில் வீரச்சாவடைந்தார்.
==விருதுகள்==
இவரது விடுதலைப் பணியைக் பெருமைப்படுத்தும் முகமாக 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசியவிருது இவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் வழங்கப்பெற்றது.
==தங்கப்பதக்கம்==
புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக 1998 இலும், கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இன்னொரு தடவையுமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் இரு தங்கப்பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.<ref>{{Cite web |url=http://www.asrilanka.com/2016/04/15/31868 |title=புலிகளின் தலைமையால் மாமனிதராக மதிக்கப்பட்ட கலைஞர் நாவண்ணன் |access-date=2016-04-28 |archive-date=2016-04-21 |archive-url=https://web.archive.org/web/20160421143202/http://www.asrilanka.com/2016/04/15/31868 |url-status=dead }}</ref>
==பரிசுகள்==
லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயமிடம் இருந்து பரிசு பெற்றார்.<ref>[http://www.pathivu.com/app/uploads/2016/04/naavannan.jpg லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவரிகளிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite news |title=Malathy Memorial opened in Kilinochchi|url=https://tamilnet.com/art.html?catid=13&artid=13106|publisher=TamilNet |date=October 10, 2004}}</ref>
==இவர் எழுதிய ஈழப்போராட்டப் பாடல்களில் சில==
# [[என்னினமே என் சனமே|என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா]]...<ref>{{Cite book|title='தமிழீழ எழுச்சிப் பாடல்கள் - பாகம் 01' நூல் (1991)}}</ref><ref>{{Cite book|title=முரசொலி-1991.08.09 - பக். 02}}</ref>
# [[ஒட்டி ஓரா மீன்பிடிக்க ஓடத்தில் போற மச்சான்|கட்டுமரம் மேலே ஏறி கடலில் போற மச்சான்]]..<ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 107}}</ref>
# வீரக்குழந்தைகளே எங்கள் வெற்றித்திலகங்களே...<ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு இதழ் 93 (ஆகஸ்டு 2001)}}</ref><ref>{{Cite book|title='தமிழீழ எழுச்சி கானங்கள்' (2003) நூல் பக். 11}}</ref><ref>{{Cite book|title=சிறீகுகனின் இசையில் ஜெயா சுகுமாரும் சீலன் (திருமாறன்) சேர்ந்து பாடிய பாடல்}}</ref>
# கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும்...<ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு இதழ் டிசம்பர் 1997}}</ref><ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு இதழ் ஏப்ரல் 2000}}</ref>
# எத்தனை நூறு வித்துக்கள் விழுந்தன...
# சோலைக்கிளிகள் சொல்லும் கதைகள் சொந்தக் கதைகள்
# சின்னச்சின்ன ரோஜாக்கள் செஞ்சோலை வளர்பூக்கள்
# விடியும் என்று காத்திருந்தோம் இருள் கவிந்தது
# செஞ்சோலைத் தங்கங்களே செந்தமிழின் செல்வங்களே
# மலரத் துடிக்கும் மொட்டுக்கள் பறக்கத் துடிக்கும் சிட்டுக்கள்
# கடலோரக்கரை மேலே காதல் என்ன தோணிக்காரா
# எட்டி எட்டி வைத்தடிகள்<ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 79 - மே 2000}}</ref>
# வித்தொன்று விழுந்தாலே முளைதோன்றுமா
# சங்கம் முழங்கிய திருவாயெங்கே
# வட்டமதிமுகப் பெண்ணே<ref>{{Cite book|title=ஈழநாதம் 2005.05.21 பக். 9}}</ref>
# குருதி எழுதும் கவிதை<ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 104 (ஜனவரி-பெப்ரவரி 2004)}}</ref>
# வாழ்க வாழ்க வாழ்க ஒளிவீச்சு<ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 69 - மே 1999}}</ref>
# அன்னை ஈழம் ஈன்றெடுத்த பிள்ளையிவள்<ref>{{Cite book|title="முகங்கள்" திரைப்படத்திலிருந்து}}</ref><ref>{{Cite book|title=ஈழநாடு-1995.06.19 - பக். 6}}</ref><ref>{{Cite book|title=ஈழநாடு-1995.06.20 - பக். 2}}</ref><ref>{{Cite book|title='வெளிச்சம்' இதழ் புரட்டாதி 1995 - பக். 68-69}}</ref>
# கிட்டு படைப் பீரங்கிக்கு கிட்ட நிற்க யாருமில்லை<ref>{{Cite book|title=நிதர்சனம் ஒளிவீச்சு கதிர் 104 (ஜனவரி-பெப்ரவரி 2004)}}</ref>
# வசந்தம் இன்னும் வரவில்லையே குயிலே<ref>{{Cite book|title=மேஜர் சிட்டுவின் நினைவாக முரளியின் இசையில் குமரதாஸ் மணிமொழி ஆகியோர் சேர்ந்து பாடியவர்கள்}}</ref>
# கண்ணின் முத்துக்கள்<ref>{{Cite book|title=செங்கதிர் பாடியது}}</ref>
# ஒளிநிலவாய் கரியபுலி நிலவாய் ஈழச்சுடர்களிலும் முதற்சுடராய்<ref>{{Cite book|title=கரும்புலி மேஜர் நிலவனின் நினைவாக சிறீகுகனின் இசையில் சீலன் (திருமாறன்) பாடிய பாடல்}}</ref>
# தாய் பூபதித்தாய் அறப்போர் தொடுத்தாய்
# என்ன அதிசயமோ<ref>{{Cite book|title=மாலிகாவின் நினைவாக சாந்தன் பாடியது}}</ref>
# கிட்டுமாமா கிட்டுமாமா எங்கே போனீங்க<ref>{{Cite book|title=குட்டிக்கண்ணன் பாடியது. புலிகளின் குரல் வெளியீடு.}}</ref>
# கீதம் இசைக்குது காதினிலே
# நெற்றியிலே திலகமிடும் ரத்தம் வெற்றியிலே முடியுமித்த யுத்தம்
# ஆழக்கடல் நிலைபெறும் அலை இருக்காது<ref>{{Cite book|title=கேணல் ராஜூவின் நினைவாக சந்திரமோகன் பாடிய பாடல்}}</ref>
இவற்றுள் சில.
==இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்==
*1972 இறுதி மூச்சு
*1976 தமிழன் சிந்திய இரத்தம்-(1958 இனக்கலவரம் பற்றியது)
வரி 42 ⟶ 97:
*1995 எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன
*2002 கரும்புலி காவியம் -பாகம் 1
*2005 சுனாமிச் சுவடுகள்<ref name="காப்பகப்படுத்தப்பட்ட நகல்">{{Cite web |url=http://eelamalar.com/12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-15-04-2018-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-01-22 |archive-date=2021-01-28 |archive-url=https://web.archive.org/web/20210128112003/http://eelamalar.com/12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-15-04-2018-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE/ |url-status= }}</ref>
==எழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்==
*வலிகாமம் இருந்து வன்னி வரை
*குருதியில் நனைந்த திருவடிகள்
*வித்தான காவியம்
*முல்லை அலை விடு தூது (தூதுப் பிரபந்தம்)<ref name="காப்பகப்படுத்தப்பட்ட நகல்"/>
==எழுதும் முயற்சியில் இருந்தது==
*புலம்பெயர்ந்த ஈழத்து உறவுகளின் வரலாறு<ref name="காப்பகப்படுத்தப்பட்ட நகல்"/>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88 கதை கண்ணீர் கவிதை - கவிதைத்தொகுப்பு] நூலகத்தில்
வரி 56 ⟶ 116:
* [http://thesakkatru.com/archives/album/flames-of-fire இறுவெட்டு - அக்கினிச் சுடர்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160621072231/http://thesakkatru.com/archives/album/flames-of-fire |date=2016-06-21 }}
[[பகுப்பு:மாமனிதர் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழீழ விடுதலைப் போராட்டக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துப் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துச் சிற்பக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து ஓவியர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் ஊடகத்துறைப் போராளிகள்]]
| |||