பன்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''பன்கு''' (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20250219)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[File:Pangu.jpg|thumb| பன்குவின் உருவப்படம்]]
பன்கு அல்லது பான்கு (சீனம்: 盤古, PAN-koo) சீன தொன்மவியல் மற்றும் தாவோயிசத்தில் ஒரு ஆதி உயிரினமாகவும் படைப்புக் கதாபாத்திரமாகவும் விளங்குகிறார். புராணக்கதைகளின்படி, பான்கு வானத்தையும் பூமியையும் பிரித்தார். பின்னர், அவரது உடல் மலைகள், ஒலி எழுப்பும் நீரோடைகள் போன்ற புவியியல் அம்சங்களாக மாறியது என கூறப்படுகிறது.
== புராணக்கதை ==
பன்குவின் புராணக்கதையை முதன்முதலில் பதிவு செய்தவர் [[மூன்று இராசியங்கள்]] காலத்தின் [[Xu Zheng (Eastern Wu)|சூ செங்]] என்று நம்பப்படுகிறது. எனினும், மூன்று இராசியங்கள் காலத்திற்கு முன்பே ஒரு கல்லறையில் அவரது பெயர் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரமும் உள்ளது.<ref>{{cite web|url=http://news.cnr.cn/history/custom/201308/t20130802_513213171.shtml|script-title=zh:盘古探源:让你了解古老神秘的盘古|archive-url=https://web.archive.org/web/20131218114310/http://news.cnr.cn/history/custom/201308/t20130802_513213171.shtml|archive-date=2013-12-18}}</ref>
தொடக்கத்தில், எதுவும் தோன்றாத நிலையில் பிரபஞ்சம் ஒரு [[Wuji (philosophy)|அம்சமற்ற, வடிவமற்ற ஆதிநிலை]]யில் இருந்தது. இந்த ஆதிநிலை சுமார் 18,000 ஆண்டுகளுக்கு ஒரு [[World egg|பிரபஞ்ச முட்டை]]யாக ஒன்றிணைந்தது. அதற்குள், [[யின் மற்றும் யாங்]] என்ற இரு முற்றிலும் எதிர்மறையான தத்துவங்கள் சமநிலை பெற்றன, அந்நேரத்தில் பன்கு முட்டையிலிருந்து வெளிப்பட்டார் (அல்லது விழித்தெழுந்தார்). பிரபஞ்ச முட்டைக்குள் பன்குவின் இருப்பு [[Taiji (philosophy)|தைஜி]]யைக் குறிக்கிறது.<ref>I. Robinet, Paula A. Wissing : The Place and Meaning of the Notion of Taiji in Taoist Sources Prior to the Ming Dynasty, History of Religions Vol. 29, No. 4 (May 1990), pp. 373-411</ref> பன்கு பொதுவாக ஒரு பழமையான, முடிநிறைந்த [[ராட்சதன்|ராட்சதனாக]] தலையில் கொம்புகளுடன் சித்தரிக்கப்படுகிறார். பன்கு உலகை உருவாக்கத் தொடங்குகிறார் அப்பொழுது அவர் தனது பிரம்மாண்டமான [[கோடரி]]யால் யினை யாங்கிலிருந்து பிரிக்கிறார், இதனால் பூமி (மங்கலான ''யின்'') மற்றும் வானம் (தெளிவான ''யாங்'') ஆக உருவாகிறது. அவற்றைப் பிரித்து வைக்க, பன்கு அவற்றிற்கு இடையே நின்று வானத்தை மேலே தள்ள ஒவ்வொரு நாளும், [[வானம்]] பத்து அடி (3 மீட்டர்) உயரமாக வளர்ந்தது, பூமி பத்து அடி தடிமனாகிறது, மேலும் பன்கு பத்து அடி உயரமாகவும் வளர்ச்சி அடைகிறார். இந்த செயல்பாடானது மேலும் 18,000 ஆண்டுகள் நடந்திருக்கிறது.
சில கதைப் பதிப்புகளில், பன்குவுக்கு இந்தப் பணியில் [[நான்கு புனித மிருகங்கள்]] (四靈獸), [[கறுப்பு ஆமை]], [[கிலின்]], [[பீனிக்ஸ்]], மற்றும் [[சீன டிராகன்]] ஆகியவை உதவியதாகக் கூறப்படுகிறது. வேறு சில கதைகளில், பன்கு தனது கோடரியால் ஏற்கனவே ''யின்'' மற்றும் ''யாங்'' ஆக இருந்த வானத்தையும் பூமியையும் பிரித்ததாகவும் கூறப்படுகிறது .<ref name=":0">{{Cite book |last=Dell |first=Christopher |title=Mythology: The Complete Guide to our Imagined Worlds |url=https://archive.org/details/mythologycomplet0000dell |publisher=[[Thames & Hudson]] |year=2012 |isbn=978-0-500-51615-7 |location=New York |pages=[https://archive.org/details/mythologycomplet0000dell/page/n93 90]}}</ref>
18,000 ஆண்டுகள் கடந்த பிறகு, பன்கு இறந்தார். அவரது மூச்சு காற்று, மூடுபனி மற்றும் மேகங்களாக மாறியது; அவரது குரல் இடிமுழக்கமாக மாறியது; அவரது இடது கண் சூரியனாகவும், வலது கண் சந்திரனாகவும் மாறியது; அவரது தலை மலைகளாகவும், உலகின் தீவுகளாகவும் மாறியது; அவரது இரத்தம் நதிகளாக மாறியது; அவரது தசை வளமான நிலமாக மாறியது; அவரது முகத் தாடி நட்சத்திரங்களாகவும் பால்வெளியாகவும் மாறியது; அவரது முடி புதர்களாகவும் காடுகளாகவும் மாறியது; அவரது எலும்புகள் மதிப்புமிக்க கனிமங்களாக மாறியது; அவரது எலும்பு மஜ்ஜை விலைமதிப்பற்ற இரத்தினங்களாக மாறியது; அவரது வியர்வை மழையாக மாறியது; மேலும் அவரது முடியில் இருந்த பேன்கள் காற்றில் பறந்து விலங்குகளாக மாறின.
சில கதைப் பதிப்புகளில், அவரது உடல் மலைகளாக மாறியதாகவும் கூறப்படுகிறது.<ref name=":0" />
| |||