இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 67:
[[இயற்கை]]யின் அடிப்படை உண்மையைக் கண்டறிய முற்படும் இயற்பியல், பல பிரிவுகளைக் கொண்டுள்ளபோதும், முதன்மையான ஐந்து ''கோட்பாடுகளாக'' இவற்றைக் குறிப்பிடலாம்: பேரியலளவிலான நகர்வுகளைக்குறித்த [[மரபார்ந்த விசையியல்]]; [[ஒளி]] முதலிய மின்காந்த நிகழ்வுகளை விவரிக்கும் [[மின்காந்தவியல்]]; [[வெளிநேரம்]] மற்றும் [[நியூட்டனின் ஈர்ப்பு விதி]]களை விவரிக்கும் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு]]; மூலக்கூற்று நிகழ்வுகளையும் [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பப்]] பரிமாற்றத்தையும் விவரிக்கும் [[வெப்ப இயக்கவியல்]] மற்றும்[[அணு| அணு உலகின்]] நடத்தைகளை ஆராயும் [[குவாண்டம் விசையியல்]] ஆகும் .
 
=== மரபார்ந்த விசையியல் ===
{{Main|மரபார்ந்த விசையியல்}}
[[படிமம்:Gyroscope operation.gif| thumb |ஒரு விசைக் கருவியான [[சுழல் காட்டி]].]]
மரபார்ந்த விசையியல் ஒளியின் வேகத்தை விட மிகக் குறைவான விரைவோட்டத்துடன் நகரும் பெரிய அளவிலுள்ள பொருட்களை விவரிக்கிறது. [[விசை]]களால் பாதிப்படைவதையும் பொருட்களின் நகர்வுகளையும் குறித்து ஆராய்கிறது. இதனை பொருட்கள் நிலையாக இருக்கும்போது, அவற்றின் மீதான விசைகளின் தாக்கம் குறித்த [[நிலையியல்]] என்றும் காரணங்களைக் குறித்து இல்லாது நகர்வுகளை மட்டுமே ஆராயும் [[அசைவு விபரியல்]] என்றும் நகர்வுகளையும் அவற்றை பாதிக்கும் விசைகள் குறித்தும் ஆராயும் [[இயக்க விசையியல்]] உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். [[பொருண்ம விசையியல்]] மற்றும் [[பாய்ம இயந்திரவியல்]] எனவும் வகைப்படுத்தலாம். பாய்ம இயந்திரவியலில் [[பாய்ம நிலையியல்]], [[பாய்ம இயக்கவியல்]], [[காற்றியக்கவியல்]] மற்றும் [[காற்றழுத்தவியல்]] உட்பிரிவுகளாகும். காற்று அல்லது பிற ஊடகங்களில் உள்ள துகள்களின் அசைவுகளினாலேயே ஒலி கடத்தப்படுவதால் [[ஒலி]]யைக் குறித்த ஒலியியல் விசையியலின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. மனிதர்களால் கேட்கவியலாத அதியுயர் அதிர்வெண் உடைய ஒலி அலைகள் [[மீயொலி]] எனப்படுகின்றன.
 
=== மின்காந்தவியல் ===
{{Main|மின்காந்தவியல்}}
[[படிமம்:Magnetosphere rendition.jpg|thumb|307x307px| காந்தக் கோளப் பரப்பு.]]
வரிசை 83:
[[படிமம்:EM Spectrum Properties ta.svg|thumb|center | 500px |மின்காந்த அலைக்கற்றை.]]
 
=== சார்புக் கோட்பாடு ===
{{Main|சார்புக் கோட்பாடு}}
[[20ம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டின்]] துவக்கத்தில் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] அறிமுகப்படுத்திய சார்புக் கோட்பாடு இரு ஆய்வுப் பிரிவுகளாக பிரிந்துள்ளது:[[சிறப்புச் சார்புக் கோட்பாடு]] மற்றும் [[பொதுச் சார்புக் கோட்பாடு]].
வரிசை 91:
மேலும், [[பொதுச் சார்புக் கோட்பாடு]] [[வெளிநேரம்|வெளிநேரத்தின்]] வடிவியல் உருக்குலைவாக [[நியூட்டனின் ஈர்ப்பு விதி]]யை ஆராய்கிறது. [[திணிவு]]களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்ட முந்தைய கோட்பாடுகளைப் போலன்றி இந்தக் கோட்பாடு [[ஆற்றல்|ஆற்றலையும்]] வெளிநேர வளைவுகள் மூலம் கணக்கில் கொள்கிறது. இதற்கென தனியான கணிதப் பிரிவாக [[பல்திசையன் நுண்கணிதம்]] உருவாகியுள்ளது. ஈர்ப்புவிசையால் ஒளி வளைக்கப்படுதல், [[புதன் (கோள்)|புதனின்]] சுற்றுப்பாதையினால் மாற்றம் போன்ற நிகழ்வுகளை இக்கோட்பாட்டால் விளக்க முடிகிறது. பொதுச் சார்புக் கோட்பாட்டினால் [[வானியற்பியல்|வானியற்பியலில்]] பயன்படும் ஓர் புதிய ஆய்வுத்துறையாக [[அண்டவியல்]] உருவாகியுள்ளது.
 
=== வெப்ப இயக்கவியல் ===
{{Main|வெப்ப இயக்கவியல்}}
[[படிமம்:Convection.gif| thumb |[[மேற்காவுகை]] மூலம் [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பத்தின்]] இடப்பெயர்வு.|276x276px]]
வரிசை 101:
வெப்ப இயக்கவியல் [[விசைப்பொறிகள்]], நிலை மாறிகள், [[வேதியியற் தாக்கம்]], போக்குவரத்து நிகழ்வுகள், [[கருங்குழி]] போன்ற பல்வேறு [[அறிவியல்]] மற்றும் [[பொறியியல்]] துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெப்பவியக்கவியல் தீர்வுகள் மற்ற இயற்பியல் பிரிவுகளிலும் [[வேதியியல்]], [[வேதிப் பொறியியல்]], [[வான்வெளிப் பொறியியல்]], [[பொருளியல்]], [[இயந்திரவியல் பொறியியல்]], [[உயிரணு உயிரியல்]], [[உயிர்மருத்துவப் பொறியியல்]], மற்றும் [[பொருளறிவியல்]] போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{cite book | author=Smith, J.M. | coauthors=Van Ness, H.C., Abbott, M.M. | title=Introduction to Chemical Engineering Thermodynamics | publisher=McGraw Hill | year=2005 | isbn=0-07-310445-0 | oclc=56491111}}</ref><ref>{{cite book | author=Haynie, Donald, T. | title=Biological Thermodynamics | publisher=Cambridge University Press | year=2001 | isbn=0-521-79549-4 | oclc=43993556}}</ref>
 
=== குவாண்டம் விசையியல் ===
{{Main|குவாண்டம் விசையியல்}}
[[அணு]] அமைப்புகள் மற்றும் அணு உட்கூறமைவுகள் குறித்தும் மின்காந்த அலைகளுடன் இவற்றின் இடைவினைகள் குறித்தும் கண்காணிக்கக்கூடிய அளவுகளால் விவரிக்கின்ற இயற்பியலின் பிரிவே குவாண்டம் விசையியல் ஆகும். இது அனைத்து [[ஆற்றல்|சக்தி]]யும் தனித்தனி துணுக்கங்கள் அல்லது பொதிகள் அல்லது ''[[குவாண்டம்|குவாண்டங்களாக]]'' வெளிப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.
வரிசை 119:
இயற்பியலாளர்கள், இயற்பியல் கோட்பாடுகளை நிறுவ அறிவியல் முறையை பயன்படுத்துகின்றனர். ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையை பயன்படுத்தி கோட்பாட்டின் உள்ளார்ந்த கேள்விக்கு சோதனைகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளையும் சோதனையை அவதானித்ததின் மூலம் பெறப்பட்ட முடிவையும் தொடர்புபடுத்தி விடையை கண்டறிகிறார்கள். சோதனையையும் அதை அவதானிப்பதின் மூலமும் பெறப்படும் முடிவுகளையும் சேகரித்து அவற்றை கோட்பாட்டின் கருதுகோளுடனும் ஊகங்களுடனும் ஒப்பிட்டுவதன் மூலம் கோட்பாட்டின் ஏற்புத்தன்மையை முடிவு செய்கிறார்கள்.
 
=== கோட்பாடு சோதனை ===
இயற்பியலாளர்கள் சோதனைகளால் எதிர்பார்கப்பட்ட பண்புகளை கண்டறியும் கருவிகளையும் புதிய நிகழ்வுகளையும் கண்டறிய முயலும் அதே சமயத்தில் கோட்பாடுகளை விளங்கிக்கொள்ள இயற்பியலாளர்கள் சோதனைகளையும் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட பண்புகளையும் கண்டறிய உதவ கோட்பாட்டாளர்கள் [[கணித மாதிரி]]யை உருவாக்க முயல்கிறார்கள். கோட்பாடும் சோதனையும் தனித்தனியாக உருவானாலும் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று அதிகளவில் சார்ந்துள்ளன. கோட்பாடுகளை இயற்பியலாளர்கள் நிறுபிக்க முடியாத போதும் புதிய கோட்பாடுகள் இயற்பியலாளர்கள் எதிர்பார்த்த முடிவுகளை தரும் போதும்கூட இயற்பியல் முன்னேற்றம் காண்கிறது.
 
வரிசை 159:
நேரடியாகவோ பிற வழிமுறைகளின் மூலமாகவோ அளவிடப்படும் [[இயற்பியல் அளவுகள்]] இரு வகைப்படும். ஒரு பொருள் ஒன்றின் நீளம், அகலம், உயரம், நிறை ஆகியவை பொருத்தமான அளக்கும் கருவிகளினால் அளக்கப்படக்கூடியவை. எனவே இவை [[அடிப்படை அளவுகள்]] என அழைக்கப்படும். அப்பொருளின் பரப்பளவு, கன அளவு, அடர்த்தி போன்றவற்றை கணித்தல் சமன்பாடுகள் மூலம் பெறக்கூடியவையாகும். இவை [[வழி அளவுகள்]] எனவும் அழைக்கப்படும். அடிப்படை அளவுகள் [[நீளம்]], [[காலம்]], [[நிறை]], [[மின்னோட்டம்]], [[வெப்பநிலை]], [[ஒளிச்செறிவு]], [[பொருளின் அளவு]] ஆகிய ஏழு ஆகும். வழி அளவுகள் [[வேகம்]], [[முடுக்கம்]], [[விசை]], [[வேலை]], [[ஆற்றல்]], [[பரப்பளவு]] மற்றும் பல.
 
=== முதன்மை இயற்பியல் அளவுகள் ===
* [[நீளம்]]: இதன் அலகு [[மீட்டர்]]
* [[நேரம்]]: இதன் அலகு [[நொடி (கால அளவு)|நொடி]]
வரிசை 214:
* [http://www.spsnational.org/ SPS National] – ''இயற்பியல் மாணாக்கர்களின் சமூக''த்தின் வலைத்தளம்
 
 
{{Wiktionary|physics}}
{{Wikibooks|Physics|இயற்பியல்}}
{{Wikibooks|Physics Study Guide|இயற்பியல் பாடத் துணைவன்}}
{{Wikibooks|FHSST Physics}}
{{Wikisource|Category:Physics|இயற்பியல்}}
{{Wikiversity|Category:Physics|இயற்பியல்}}
{{Authority control}}
 
"https://tamilar.wiki/w/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது