பொன்னீலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{unreferenced}} thumb|எழுத்தாளர் பொன்னீலன் '''பொன்னீலன்''' தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[File:எழுத்தாளர் பொன்னீலன்.JPG|thumb|எழுத்தாளர் பொன்னீலன்]]
'''ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன்''' எனும் இயற்பெயர் கொண்ட '''பொன்னீலன்''', ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்|எழுத்தாளர்]] மற்றும் ஓய்வுபெற்ற கல்வியாளர் ஆவார். தமிழ் முற்போக்குப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்கவராக அறியப்படுகிறார்.
'''பொன்னீலன்''' [[தமிழ்]] முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. [[குமரி மாவட்டம்]], [[நாகர்கோயில்]] அருகே [[மணிகட்டிபொட்டல்]] என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் [[இளங்கலை]] படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.▼
==இளமைக் காலம்==
▲
சிறுவயதிலேயே [[மார்க்ஸியம்|மார்க்சிய]] ஈடுபாடு கொண்டிருந்த பொன்னீலன் [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவ]] மதிப்பீடுகளைத் தன் வாழ்க்கையிலிருந்து களைவதை முக்கியமான செயல்பாடாகக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆசிரியர் சங்கம் மூலமாக [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]யுடன் கிடைத்த உறவு அவருக்கு உதவியது. ஆயினும் [[நெல்லை மாவட்டம்|நெல்லை மாவட்டத்தில்]] பணிபுரிந்த நாட்களில் மார்க்ஸிய ஆய்வாளர் [[நா. வானமாமலை|நா.வானமாமலையுடன்]] கொண்ட தொடர்பும் வானமாமலை நடத்திய '[[ஆராய்ச்சி]]' என்ற [[சிற்றிதழ்|சிற்றிதழுமே]] தன்னை உருவாக்கிய சக்திகள் என்று பொன்னீலன் குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் ஆராய்ச்சி இதழில் [[கட்டுரை]]கள் எழுதிவந்தார்.
== பணி ==
[[இளங்கலை]] படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/thehindu/lf/2002/12/19/stories/2002121902600200.htm|title=A writer with vision and mission|last=Saqaf|first=Syed Muthahar|date=19 December 2002|work=[[தி இந்து]]|archive-url=https://web.archive.org/web/20121106005111/http://www.hindu.com/thehindu/lf/2002/12/19/stories/2002121902600200.htm|archive-date=6 November 2012|accessdate=29 March 2010|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/03/24/stories/2010032459300200.htm|title=Buddha tried to develop social harmony, says Ponneelan|date=24 March 2010|work=[[தி இந்து]]|archive-url=https://web.archive.org/web/20100330130425/http://www.hindu.com/2010/03/24/stories/2010032459300200.htm|archive-date=30 March 2010|accessdate=29 March 2010|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2005/03/05/stories/2005030500820300.htm|title=Novel tips|last=Balaganessin|first=M|date=5 March 2005|work=The Hindu|archive-url=https://web.archive.org/web/20050411095901/http://www.hinduonnet.com/thehindu/mp/2005/03/05/stories/2005030500820300.htm|archive-date=11 April 2005|accessdate=29 March 2010|url-status=usurped}}</ref>
==இலக்கியத் துறையில்==
நெல்லையில் இருந்த நாட்களில் [[தி. க. சிவசங்கரன்]] இவருக்கு நெருக்கமானார். [[தாமரை]] இதழின் ஆசிரியப்பொறுப்பில் இருந்த அவர் பொன்னீலனை [[சிறுகதை]]கள் எழுதும்படி தூண்டினார். முதல் சிறுகதைத் தொகுதி 'ஊற்றில் மலர்ந்தது' 1978ல் வெளிவந்தது. ஆயினும் பொன்னீலனை இலக்கிய கவனத்துக்குக் கொண்டுவந்தது 1976ல் வெளிவந்த 'கரிசல்' என்ற [[புதினம்|நாவலே]]. இது பொன்னீலன் அப்போது பணியாற்றிவந்த [[கோவில்பட்டி|கோயில்பட்டி]] மக்களையும் நிலத்தையும் சித்தரிக்கும் '[[சோஷலிச யதார்த்தவாதம்|சோஷலிச யதார்த்தவாத]]' நாவலாகும்.
[[File:பொன்னீலன் (Ponneelan).jpg|thumb|250px|சாகித்திய அக்காதெமி விருது பெற்ற பொன்னீலன் கோவை செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்த போது எடுத்தபடம்]]
பொன்னீலனின் பெரும் படைப்பு 1992ல் வெளிவந்த 'புதிய தரிசனங்கள்' என்ற இரண்டு பாக நாவல். [[இந்திரா காந்தி]] அமுல்படுத்திய நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரிக்கும் இந்நாவல் ஜனநாயகத்தின் வேர்களைத் தேடும்படைப்பு. அக்காலத்தில் பொன்னீலனின் கட்சி எடுத்த நெருக்கடி நிலைத் தரவு நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விமரிசிக்கும் படைப்பும் கூட.
பொன்னீலன் 1994 ம் வருடத்திற்கான [[சாகித்ய அக்காதமி விருது|சாகித்ய அக்காதமி விருதை]]ப் புதிய தரிசனங்கள் நாவலுக்காகப் பெற்றார். பொன்னீலனின் 'உறவுகள்' என்ற சிறுகதை மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் [[திரைப்படம்|திரைப்படமாக]] வெளிவந்தது. [[தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்|தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்]] தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார்.
== படைப்புகள் ==
===புதினங்கள்===
* கரிசல்
* கொள்ளைக்காரர்கள்
* புதிய தரிசனங்கள்
* தேடல்
* மறுபக்கம்
* பிச்சிப் பூ
* புதிய மொட்டுகள்
* ஊற்றில் மலர்ந்தது
===சிறுகதைகள்===
* இடம் மாறிவந்த வேர்கள்
* திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
* உறவுகள்
* புல்லின் குழந்தைகள்
* அன்புள்ள
* நித்யமானது
* சக்தித்தாண்டவம் (தொகுப்பாளர் அழகு நீலா)
* பொட்டல் கதைகள்
* அத்தானிக் கதைகள்
===கட்டுரைகள்===
* புவி எங்கும் சாந்தி நிலவுக ( 10.09. 85 முதல் 02. 10.85 வரையிலான சமாதான யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு)
* தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும்
* முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
* சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள்
* சாதி மதங்களைப் பாரோம்
* தாய்மொழிக் கல்வி
* தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு
* தெற்கிலிருந்து ( வாழ்க்கை வரலாறு கட்டுரைகள்)
* தமிழ் நாவல்கள்
===வாழ்க்கை வரலாறுகள்===
* ஜீவா என்றொரு மானுடன்
* தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி
* வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி
* ஒரு ஜீவநதி
* தொ. மு. சி, ரகுநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
=== தொகுத்தவை ===
* ஜீவாவின் சிந்தனைகள்
* ப. ஜீவானந்தம் நூல் திரட்டு
==மேற்கோள்கள்==
{{reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [https://www.hindutamil.in/news/literature/101010-.html என் வீடு: பொன்னீலனின் உலகம்] - [[இந்து தமிழ் திசை]]
{{சாகித்திய அகாதமி விருது }}
[[பகுப்பு:முற்போக்கு எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
| |||