பொலிவியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
 
No edit summary
 
வரிசை 96:
 
==வரலாறு==
===காலனியாதிக்கத்துக்கு முந்தைய வரலாறு===
 
தற்போது பொலிவியா என அறியப்படும் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஐமாரா இனத்தவர்கள் குடியேறியிருந்தனர். தற்போதைய ஐமாரா இனத்தவர்கள் மேற்கு பொலிவியாவிலுள்ள தியாகுனாக்குவில் உள்ள முன்னேற்றமடைந்த நாகரிகத்தில் இருந்து வந்ததாக தங்களை அடையாளப்படுத்துகின்றனர். கிமு 1500 இல் சிறு கிராமமாக இருந்த தியாகுனாக்கு '''தியாகுனாக்கு பேரரசின்''' தலைநகரமாகவும் இருந்தது.<ref>{{Harvnb|Fagan|2001|date=July 2013}}</ref>
வரிசை 111:
[[File:Inca-expansion.png|thumb|இன்கா பேரரசின் விரிவு (1438–1527).]]
 
===காலனியாதிக்க காலம்===
எசுப்பானியர்கள் [[இன்கா பேரரசு|இன்கா பேரரசை]] 1524இல் கைப்பற்ற தொடங்கி 1533இல் முழுவதும் கைப்பற்றினார்கள். தற்போது பொலிவியா என்றழைக்கப்படும் பகுதி மேல் பெரு என்றழைக்கபட்டது. [[லிமா]]விலுள்ள வைசிராயின் கீழ் இப்பகுதி இருந்தது. உள்ளூர் நிருவாகம் சுகியுசா பகுதியிலிருந்த ஆடின்சியா டே சார்கசு கீழ் இருந்தது. 1545இல் உருவாக்கப்பட்ட பொட்டோசி என்ற நகரம் தன் பகுதியிலுள்ள சுரங்கத்தின் மூலம் ஏராளமான செல்வத்தை கொடுத்தது. புதிதாக ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தென் அமெரிக்காவில் விரைவில் இது பெரும் நகராக 150,000 மக்களுடன் உருவெடுத்தது.<ref>{{cite web |url=http://www.common-place.org/vol-03/no-04/potosi/ |title=The High Place: Potosi |author=Demos, John |publisher=Common-place.org |accessdate=14 July 2013 |archive-date=26 டிசம்பர் 2012 |archive-url=https://www.webcitation.org/6DCjAsiyH?url=http://www.common-place.org/vol-03/no-04/potosi/ |url-status=dead }}</ref>
 
16ஆம் நூற்றாண்டின் இறுதியில் [[எசுப்பானியப் பேரரசு]]க்கு பொலிவியா சுரங்கங்களில் கிடைத்த [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]] முதன்மையான வருமானமாக இருந்தது.<ref>{{cite web |url=http://encarta.msn.com/encyclopedia_761575057_13/Spain.html |title=Conquest in the Americas |publisher=MSN Encarta |date=28 October 2009 |accessdate=14 July 2013 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20091028035130/http://encarta.msn.com/encyclopedia_761575057_13/Spain.html |archivedate=28 அக்டோபர் 2009 }}</ref> தென் அமெரிக்காவின் தொல்குடிகள் மிக மோசமான சூழலில் அடிமைகளாக சுரங்கங்களில் வேலை வாங்கப்பட்டனர். மிடா என்றழைக்கப்பட்ட [[முன்-கொலம்பியக் காலம்|முன்-கொலம்பியக் கால]] இன்காக்களிடம் இருந்த அடிமை பண்பாட்டை எசுப்பானியர்கள் மாற்றி தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தினர்.<ref>{{cite web|url=http://countrystudies.us/bolivia/29.htm |title=Bolivia – Ethnic Groups |publisher=Countrystudies.us |accessdate=30 August 2010}}</ref> இன்கா முறையிலிருந்து எசுப்பானிய முறையை வேறுபடுத்தி காட்ட இதை என்கோமிஎன்டா என்பர். 1776இல் மேல் பெரு ரியோ டா லா பிலாடா வைசிராய் நிருவாகத்தின் கீழ் வந்தது. 1781 மார்ச்சு மாதம் தொல்குடிகள் எசுப்பானிய அரசுக்கெதிராக புரட்சியில் ஈடுபட்டு, டுபேக் கட்டரி என்ன தொல்குடியினத்தவர் தலைமையில் [[லா பாஸ்|லா பாச்]] நகரை முற்றுகையிட்டனர்.<ref>{{cite book|author1=Robins, Nicholas A. |author2=Jones, Adam |title=Genocides by the Oppressed: Subaltern Genocide in Theory and Practice|url=https://books.google.com/books?id=AX3UCk_PdEwC|year=2009|publisher=Indiana University Press|isbn=978-0-253-22077-6|pages=1–2}}</ref> இதில் 20,000 பேர் பலியாயினர்.<ref>{{cite web |url=http://www.duke.edu/~ems19/rebellions/rebellions.html |title=Rebellions |publisher=History Department, Duke University |date=22 February 1999 |accessdate=14 July 2013 |archive-date=31 ஜனவரி 2012 |archive-url=https://web.archive.org/web/20120131062804/http://www.duke.edu/~ems19/rebellions/rebellions.html |url-status=dead }}</ref> எசுப்பானிய பேரரசு [[நெப்போலியப் போர்கள்|நெப்போலியன் போர்]]களால் வலுகுறைந்து இருந்தது. இந்நிலையால் காலணியாதிக்கத்துக்கு எதிர்ப்பு அதிகமாக வளர்ந்தது.
 
===விடுதலையும் தொடர்ச்சியான போர்களும்===
[[சுக்ரே]] நகரிலிருந்து 1809 மே 25 அன்று தென் அமெரிக்காவின் விடுதலை என்று முதலில் விடுதலை போராட்டம் தொடங்கிற்று. இது உள்ளூர் ஆட்சியாளர்களால் தூண்டப்பட்டது. இதற்கு அடுத்து [[லா பாஸ்|லா பாச்]] புரட்சி ஏற்பட்டது. அதன்போது பொலிவியா விடுதலையானதாக அறிவித்துக்கொண்டது. இப்புரட்சிகள் சிறிது காலமே நீடித்தது இவையிரண்டும் எசுப்பானிய ஆட்சியாளர்களால் அடக்கப்பட்டது. ஆனால் அதன் பின் எசுப்பானியர்களிடம் இருந்து விடுதலை கேட்கும் [[எசுப்பானிய அமெரிக்க விடுதலைப் போர்கள்]] தென்னமெரிக்கா முழுவதும் பரவியது.
 
வரிசை 127:
விடுதலை பெற்றதில் இருந்து பொலிவியா தன் நிலப்பகுதியில் பாதியை அருகாமை நாடுகளிடம் இழந்துவிட்டது.<ref>{{cite book |last=McGurn Centellas |first=Katherine |date=June 2008 |title=For Love of Land and Laboratory: Nation-building and Bioscience in Bolivia |url=https://books.google.com/books?id=VXD4SlJQYDgC&pg=PA97 |location=Chicago }}{{Dead link|date=ஜனவரி 2023 |bot=InternetArchiveBot }}</ref> தற்போது பிரேசிலிடம் உள்ள [[ஆக்ரி (மாநிலம்)]] பொலிவியாவின் பகுதியா இருந்தது.
 
===இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம்===
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நாட்டின் பொருளாதார வளம் வெள்ளியியில் இருந்து வெள்ளீயத்துக்கு மாறியது.தொடர்ந்து வந்த அரசுகள் பொருளாதாரத்தாலும் மேட்டிமைவாதிகளாகளும் கட்டுப்படுத்தப்பட்டனர். முதலாளித்துவ கொள்கைகளில் ஒன்றான கட்டுப்பாடற்ற தனியார் மயம் (லேசிப்பியர் (Laissez-faire)) இங்கு நடைமுறையில் இருந்தது தனியார் நிறுவனங்கள் மேட்டிமைவாதிகளிடம் இருந்தது.<ref>{{cite web|author=Rabanus, David |url=http://www.bolivien-liest.de/en/country_en.html |title=Background note: Bolivia. |publisher=Bolivien-liest.de |accessdate=14 July 2013}}</ref> 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளுக்கு இந்நிலை நீடித்தது.
 
வரிசை 134:
புரட்சிகர தேசிய இயக்கம் என்ற அரசியல் கட்சி பலதரப்பட்ட மக்களின் ஆதரவுடன் தோன்றியது. 1951ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போதும் இதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனுடை தொடர் போராட்டத்தின் காரணமாக 1952ஆம் ஆண்டு ஏஞ்சல் விக்டோர் எசுடைன்சுரோ தலைமையில் ஆட்சி அமைத்தது. இக்கட்சி பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் நாட்டின் அனைத்து குடிகளுக்கும் வாக்குரிமையும் உள்ளூரில் இருப்பவர்களுக்கு கல்வியும் கிடைத்தது. நிலச்சீர்திருத்த சட்டத்துடன் பெரிய வெள்ளீய சுரங்கங்களை நாட்டுடமை ஆக்கியது.
 
===இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய காலம்===
12 ஆண்டு ஆட்சிக்குப்பின் புரட்சிகர தேசிய இயக்கம் பிளவுண்டது. 1964இல் ராணுவ அதிகாரிகள் அதிபர் ஏஞ்சல் விக்டோர் எசுடைன்சுரோ ஆட்சியை கவிழ்த்து அவர் மூன்றாம் முறை ஆட்சிக்கு வருவதை தடுத்தது. 1966இல் ஆட்சிக்கு வந்த இராணுவ அதிகாரி ரினே பாரின்டோசு ஓர்டுனோ (René Barrientos Ortuño) 1969இல் இறந்த பின்பு தொடர்ந்து வந்த அரசுகள் பலவீனமாகவே இருந்தன. மக்களின் அவையும் (Popular assembly) அதிபர் நுவான் ஓசு டோர்ரசும் (Juan José Torres) புகழ்பெறுவதைக் கண்டு கலவரமடைந்த இராணுவம், புரட்சிகர தேசிய இயக்கம் ஆகியவையும் மற்றவர்களும் சேர்ந்து கூகோ பன்சார் சுஅர் (Hugo Banzer Suárez) அவர்களை 1971இல் அதிபர் ஆக்கினர்.
 
வரிசை 142:
1979, 1981 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல் மோசடி மிகுந்ததாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆட்சி கவிழ்ப்புகளும் ஆட்சி கவிழ்ப்புமூலம் அதிகாரம் பெற்றவர்களை எதிர்த்து எதிர் ஆட்சி கவிழ்ப்புகளும் தற்காலிக அரசுகளும் அக்காலத்தில் ஏற்பட்டன. 1980இல் லூயிசு கார்சியா மேசா (Luis García Meza Tejada) கடுமை நிறைந்த ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவருக்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு வேண்டி தான் ஒரு ஆண்டு மட்டுமே ஆட்சியில் இருக்கப்போவதாக கூறி ஆதரவு திரட்டினார். ஆண்டு இறுதியில் தொலைக்காட்சியில் தோன்றி தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி தான் ஆட்சியில் நீடிக்கப்போவதாக கூறினார். இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அவர் 1981ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். அடுத்த 14 மாதங்களில் மூன்று இராணுவ அரசுகள் ஏற்பட்டும் அவைகளால் பொலிவியாவின் சிக்கலை தீர்க்கமுடியவில்லை. மக்களிடம் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இராணுவம் நாட்டின் அவையை கூட்டியது. அந்த அவை 1980இல் புதிய தலைவரை தேர்ந்தெடுத்தது நாட்டு குழப்பங்களை தீர்க்க பணித்தது. 1982 அக்டோபர் மாதம் 1956-60இல் அதிபராக இருந்த எர்னன் சிலாசு யுவாயோ (Hernán Siles Zuazo) 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிபர் ஆனார்.
 
===மக்களாட்சியை நோக்கி===
1993இல் அதிபர் கான்சாலோ சென்சசு (Gonzalo Sánchez de Lozada) டுபக் கடரி புரட்சிகர விடுதலை இயக்கத்துடன் உடன்பாடு கண்டிருந்தார், அது தொல்குடிகளின் உணர்ச்சிக்கும் பல் இன விழிப்புணர்ச்சி கொள்கைக்கும் ஊக்கமூட்டியது. அவர் நடுவண் அரசிடம் இருந்த அதிகாரங்களை பல அமைப்புகளுக்கு பரவலாக்கி அதிகார குவியல் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பல் இன மக்களுக்கு இருமொழிக் கொள்கையை நடைமுறைபடுத்தினார் வேளாண் சட்டத்தை அறிமுக்படுத்தினார், சுரங்கம் தவிர மற்ற அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கினார். புதிய தனியார் மயகொள்கைப்படி அரசு குறைந்தபட்சம் 51% நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும். இதன் மூலம் நிறுவனங்கள் மீது அரசின் கட்டுப்பாடு முழுவதும் போகாமல் இருக்கும். இந்த புது தாராளமயக் கொள்கை பொலிவியாவில் பலவகைப்பட்ட மக்கள் இருப்பதை ஒத்துக்கொள்கிறது. சட்டமானது கல்வி, வேளாண் கட்டமைப்பு, நலத்துறை, உள் கட்டமைப்பு போன்றவற்றை மைய அரசிடம் இருந்து பிரித்து நகராட்சிகள் நிருவகிக்க வேண்டுமென்கிறது.
 
"https://tamilar.wiki/w/பொலிவியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது