மகாவம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{மகாவம்சம்}} '''மகாவம்சம்''' (''Mahawamsa'' அல்லது ''Mahawansa'') (பாளி மொழி: மஹாவம்ச அல்லது மஹாவங்ச) சுருக்கமாக. Mhv.<ref>Malalasekera, ''Dictionary of Pali Proper Names: Pali-English,'' p. xvi, retrieved Sept. 19, 2010, from "Google Bo..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 9:
[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 247–207 வரை இலங்கையை ஆட்சி செய்த [[தேவநம்பிய தீசன்]] [[அனுராதபுரம்|அனுராதபுரத்தை]] தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு [[மகாவிகாரை]] நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேணியும் வந்துள்ளனர். அவற்றையே [[அட்டகத்தா]] என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை [[அட்டகத்தா மகாவம்சம்]] என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே பொ.ஊ. 4ம் நூற்றாண்டளவில் [[தீபவம்சம்|தீபவம்சமும்]], பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப்பட்டுள்ளன.
 
=== தீபவம்சம் ===
[[மகாவம்சம் அட்டகத்தா]]க்களை மூலமாகக்கொண்டு ஒருங்கிணைத்தே [[தீபவம்சம்]] 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம், அது 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் "விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்" தீபவம்சத்தில் இல்லை என்பதை [[க. குணராசா|கலாநிதி க. குணராசா]] தனது [[மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்]] நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
=== மகாநாம தேரரின் மகாவம்சம் ===
இந்த தீபவம்சத்தை தழுவியே [[மகாநாம தேரர்]] எனும் பௌத்த பிக்குவினால் மகாவம்சம் தொகுக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை மகாவம்சம் நூல் தீபவம்சம் நூலையும் விட எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் காலவரிசைப்படி செய்யுள்களாக தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாவம்சம் 6ம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.
 
=== ஆங்கில மொழிப்பெயர்ப்பு ===
இதனையே வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிப்பெயக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டதாகும்.
 
=== பௌத்தம் போற்றல் ===
மகாவம்சம் நூலை வரலாற்று நூலாக ஏற்க முடியாமைக்கான காரணங்களை பல மேற்கத்தைய, சிங்கள, தமிழ் வரலாற்றாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் மகாவம்சம் நூலை தொகுத்தவரான [[மகாநாம தேரர்]] எந்தவொரு இடத்திலும் தன்னை வரலாற்று ஒரு ஆசிரியராகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் ஒரு பௌத்தப் பிக்குவாக பௌத்த மதத்தை ஆதரிக்கும் நோக்குடனேயே தொகுத்துள்ளாகவும் கூறப்படுகின்றது.<ref>http://www.youtube.com/watch?v=K2F_YqAqqtw&feature=related</ref>
 
"https://tamilar.wiki/w/மகாவம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது