முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>A.Muthamizhrajan
No edit summary
 
No edit summary
 
வரிசை 81:
முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே மதிப்பு அதிகம். தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.
 
=== இயற்கை முத்துகள் ===
அவிகுலிடி சிப்பிகளிலும் யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும்.
 
=== வளர்ப்பு முத்துகள் <ref> Cultured pearls</ref> ===
சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர். அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள். அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்திவிடுவார்கள். நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
 
வரிசை 104:
# அளவு
 
=== முத்துக்களின் வகைகள் ===
முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன. முத்துக்களில் பின்வரும் வகைகள் உள்ளன:
 
வரிசை 114:
சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன இதனால் அவற்றின் மதிப்பும் அதிகம்.
 
=== நேக்கரின் தடிப்பு ===
சிப்பியின் உட்புறம் முத்துப்போல் காணப்படும் அழகான மெல்லிய பொருள் நேக்கர் ஆகும். எனவே நேக்கரின் நிறம், ஒளிர்வு என்பனவே முத்தின் இயல்புகளாகவும் வெளிப்படுகின்றன. நேக்கரின் தடிப்பு அதிகரிக்கும்போது முத்தின் மதிப்பும் கூடுகின்றது.
 
=== ஒளிர்வுத் தன்மை ===
ஒளிர்வுத் தன்மை என்பது முத்தின் ஒளிர்வினதும் அதன் ஒளிதெறிக்கும் தன்மையினதும் அளவீடு ஆகும். நல்ல ஒளிர்வும், முகம் தெரியக்கூடிய அளவு பளபளப்பும் கொண்டது முதல் மங்கலான சொரசொரப்பானது வரையான தன்மைகளைக் கொண்ட முத்துக்கள் உள்ளன. கூடிய ஒளிர்வும், பளபளப்பும் கொண்ட முத்துக்கள் தரம் கூடியவை.
 
"https://tamilar.wiki/w/முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது