வஞ்சகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Orphan|date=ஏப்ரல் 2019}} {{தகவற்சட்டம் திரைப்படம்|name=வஞ்சகன்|image=|image_size=|caption=|director=ஏ. எம். பாஸ்கர்|producer=எஸ். வி. ஜெயப்ரகாஷ் ராதை|writer=ஏ. எம். பாஸ்கர்|starring={{ubl|சுஜிபாலா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி கதைச்சுருக்கம்: clean up, replaced: கூறுகிறார்கள் → கூறுகின்றனர் using AWB
 
வரிசை 9:
நிருபராகப் பணிபுரியும் ஜீவா (சுஜிபாலா) மூன்று பேரால் துரத்தப்படும் ஒருவன் அவள் வீட்டருகே ஒரு பெட்டியை வீசுவதைக் காண்கிறாள். அந்தப் பெட்டியை எடுத்து திறந்து பார்க்கிறாள். அதிலுள்ள நாட்குறிப்பேடு ஒன்றில் நகரத்தின் நான்கு முக்கியமான நபர்கள் கொல்லப்படுவார்கள் என்று எழுதியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் தெரிவிக்கிறாள். காவல் துறையினர் அதை அலட்சியப்படுத்துவதால் தன் நண்பனும் தனியார் புலனாய்வு நிறுவனம் நடத்துபவனுமான சிவாவின் (பிரதாப்) உதவியை நாடுகிறாள்.
 
அந்த நாட்குறிப்பில் உள்ளவாறு அருணாச்சலம் ([[தேவன் (நடிகர்)|தேவன்]]) மற்றும் பன்னீர்செல்வம் (சேது விநாயகம்) இருவரும் கொல்லப்பட, காவல்துறை ஜீவா மற்றும் சிவாவின் உதவியை நாடுகிறது. ஜீவா இந்த நிகழ்வுகள் குறித்து பத்திரிகையில் ஒரு புலனாய்வுக் கட்டுரை எழுதுகிறாள். இதைக் காணும் முதல் காட்சியில் வந்த மூன்று பேரும் ஜீவாவைக் கடத்த முயற்சிக்கின்றனர். அங்குவரும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஜீவாவைக் காப்பாற்றுகிறார். அந்த மூவரையும் காவல்துறை கைது செய்கிறது. பெட்டியில் பணம் வைத்திருந்ததாகக் கருதியே கட்டிங் பாஸ்கர் என்பவனைத் தாங்கள் துரத்திச் சென்றதாகவும், அதில் பணம் இல்லாததால் அவனைக் கொன்றதாகவும் கூறுகிறார்கள்கூறுகின்றனர்.
 
அருணாச்சலம் மற்றும் பன்னீர்செல்வம் கொலையில் ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்டறிகிறான் சிவா. அவர்கள் கொல்லப்படுவதற்கு முன் ஒரே தொலைபேசி எண்ணிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த எண்ணின் முகவரியில் சென்று பார்க்கும்போது அங்கு வசித்தவர் கொல்லப்பட்டு கிடக்கிறார். இந்தக் கொலைகளைச் செய்வது யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பது மீதிக்கதை.
"https://tamilar.wiki/w/வஞ்சகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது