ஒலிப்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags ஒலியியல் (மொழியியல்)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Sukanthi "{{மொழியியல்}} மொழியியலில் '''ஒலியியல்''' ''(Phonetics)'' என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
[[மொழியியல்|மொழியியலில்]] '''ஒலியியல்''' ''(Phonetics)'' என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் [[ஒலி]]களைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் [[அறிவியல்]] துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் [[இயற்பியல்]] இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் [[உடலியங்கியல்]] சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் [[நரம்பு]]சார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன.
ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான [[ஒலி]]கள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். [[எழுத்து மொழி]]களும் [[எழுத்து]]க்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது [[குறியியல்]]) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.
== பிரிவுகள் ==
பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது:
* [[ஒலிப் பிறப்பியல்]] (articulatory phonetics), பேச்சொலியை உருவாக்குவதில் [[உதடு]]கள், [[நாக்கு]], மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது;
* [[அலை ஒலியியல்]] (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், [[கணிதம்]], [[இயற்பியல்]] ஆகியன பயன்படுகின்றன; மற்றும்
* [[கேட்பொலியியல்]] (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தலை அடிப்படையாகக் கொண்டு [[மொழி]]யை ஆய்வு செய்வது.
== மொழிகளில் பேச்சொலிகள் ==
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக ஒலியியல் கழகம்]] (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய [[அனைத்துலக ஒலியியல் எழுத்து]] (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
மனித [[குரல்வளை]]யில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட [[அப்காசு மொழி]] தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட [[செடாங் மொழி]] வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட [[ரொடோகாசு மொழி]] தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட [[க்சூ மொழி]] வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக [[பிராஹா மொழி|பிராகா மொழி]]யில் 10 ஒலியன்களும், [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாசு மொழி|ரோடோகாசு மொழியில்]] 11 ஒலியன்களும், [[அவாய் மொழி|அவாயன் மொழியில்]] 12 ஒலியன்களும், [[சேர்பிய மொழி]]யில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் [[தென்னாப்பிரிக்கா|தெற்கு ஆபிரிக்காவின்]] கலகாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: [[கிளிக் மெய்|கிளிக் ஒலி]], [[குரல்வளைச் செயல்]] (phonation), [[காற்றோட்டப் பொறிமுறை]] (airstream mechanism)).
[[ஆங்கில மொழி]] 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் [[ஒலியன்]]களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல [[மாற்றொலி]]களைக் (allophone) கொண்டுள்ளன. இது இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).
ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே [[இந்தியா]]வில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஒலியியல் (மொழியியல்) தலைப்புக்களின் பட்டியல்|ஒலியியல் தலைப்புக்களின் பட்டியல்]]
* [[Speech processing]]
* [[ஒலியியல்]]
* [[biometric word list]]
* [[பல்கலைக்கழகங்களின் ஒலியியல் பிரிவுகள்]]
* [[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து|ஐபிஏ]] மற்றும் [[SAMPA]].
== வெளி இணைப்புகளும் உசாத்துணையும் ==
* [http://www2.unil.ch/ling/english/phonetique/table-eng.html இணைய ஒலிப்பியல் பாடத்திட்டம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20050410075841/http://www2.unil.ch/ling/english/phonetique/table-eng.html |date=2005-04-10 }}
[[பகுப்பு:ஒலிப்பியல்|*]]
| |||