சின்னூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle நேமிநாதம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Sukanthi "'''நேமிநாதம்''' என்பது தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் <ref>திரிபுவன தேவன் என்னும் மூன்றாம் குலோத்துங்கன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''நேமிநாதம்''' என்பது தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் <ref>திரிபுவன தேவன் என்னும் [[மூன்றாம் குலோத்துங்கன்]] காலத்தில் தோன்றிய நூல்</ref> பழைய இலக்கண நூல்களைப் போலன்றிச் சுருக்கமாக எழுதப்பட்டது. [[குணவீர பண்டிதர்]] என்பார் இந்நூலை இயற்றினார். [[சமண சமயம்|சமண]] சமயத்தவர் முதன்மையாகக் கருத்தும் 24 தீர்த்தங்கரர்களில் இவர், 22-ஆவது [[நேமிநாதர்]] எனும் தீர்த்தங்கரர் மீது பக்தி கொண்டவர் இதனால் தனது நூலுக்கு ''நேமிநாதம்'' எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. சுருக்கமான நூல் ஆதலால் '''சின்னூல்''' என்ற பெயரும் இதற்கு வழங்குகிறது.( நன்னூல் என்ற நூலுக்கும் சின்னூல் என்ற பெயர் அமைந்திருப்பது நினைவுகூரத்தக்கது.) <ref>இளங்குமரன், இரா., 2009. பக். 268</ref> <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=90}}</ref>
இன்று கிடைக்கக்கூடியதாகவுள்ள மிகப் பழைய இலக்கண நூலான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கும்]] பிற்காலத்தில் எழுதப்பட்ட விரிவான இலக்கண நூலான [[நன்னூல்|நன்னூலுக்கும்]] இடைப்பட்ட காலத்தில் இந்நூல் எழுதப்பட்டதால் அக்காலப்பகுதியில் தமிழ் இலக்கண நிலையைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது. இந்நூல் [[மகடூஉ முன்னிலை]]யாக எழுதப்பட்டுள்ளது.
==அமைப்பு==
இஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரம் மேலும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆனால், சொல்லதிகாரத்தின் உட்பிரிவுகளாக ஒன்பது இயல்கள் உள்ளன. அவை:
# மொழியாக்க மரபு
# வேற்றுமை மரபு
# உருபி மயங்கியல்
# விளிமரபு
# பெயர் மரபு
# வினை மரபு
# இடைச்சொல் மரபு
# உரிச்சொல் மரபு
# எச்ச மரபு
சொல்லதிகாரம் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றி அமைந்துள்ளது. உட்பிரிவுகளின் எண்ணிக்கை, அவற்றின் பெயர் என்பன உட்படப் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
இந்நூல் [[வெண்பா]]க்களால் அமைந்தது. '''வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல்''' இதுவாகும். இந்நூல் 99 (பாயிரம் 4+24+1+70) வெண்பாக்களால் ஆனது.
எழுத்ததிகாரத்திற்கு முன் அமையும் - '''4 வெண்பாக்கள்'''
# [[சிறப்புப் பாயிரம்]] - 2 வெண்பாக்கள்
# [[தற்சிறப்புப் பாயிரம்]] -1 வெண்பா
# [[அவையடக்கம்]] - 1 வெண்பா
# [[எழுத்ததிகாரம்]] - '''24''' '''வெண்பாக்கள்'''
# தற்சிறப்புப் பாயிரம் -'''1 வெண்பா''' (சொல் அதிகாரத்தின் இருக்கும் தற்சிறப்புப் பாயிரம்)
# [[சொல்லதிகாரம்]] - '''70''' '''வெண்பாக்கள்'''
என இந்நூல் அமைந்துள்ளது.
==உரை==
நூலாசிரியரே இதற்கு [[உரை]]யும் எழுதியதாகவும், அவ்வாறு நூலாசிரியரே உரையையும் எழுதுவது இது முதல் முறை ஆகும் என்றும் சிலர் கருதுவர். ஆனால் [[உரையாசிரியர்]] யாரென அறிந்துகொள்ளத்தக்க வகையில் உரையில் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இது பிற்காலத்தில் 14-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுந்த உரை என்ற கருத்தும் நிலவுகிறது<ref>இளங்குமரன், இரா., 2009. பக். 273</ref>. விளக்கவுரை, எடுத்துக்காட்டுகள் என்பவற்றை உள்ளடக்கி ஒரு விரிவான உரையாக இஃது அமைந்துள்ளது.
==குறிப்புகள்==
<References/>
==உசாத்துணைகள்==
* இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]
==வெளியிணைப்புகள்==
* [http://store.tamillexicon.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/ நேமிநாதம்]
[[பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள்]]
[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
| |||