வல்லினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பாஸ்கர் துரை
No edit summary
 
imported>Lingam
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''வல்லினம்''' என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள [[மெய்யெழுத்து]]களின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. [[மெல்லினம்]], [[இடையினம்]] என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். [[தொல்காப்பியம்|தொல்காப்பியமும்]], அதற்குப் பின்னர் எழுந்த [[நன்னூல்]] முதலிய தமிழ் இலக்கண நூல்களும், '''க், ச், ட், த், ப், ற்''' எனும் ஆறு எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் என்கின்றன. இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை ''வலி'', ''வன்மை'', ''வன்கணம்'' என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.<ref>இளவரசு, சோம., 2009, பக். 43.</ref> "வல்லென்று இசைப்பதாலும் வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய [[இளம்பூரணர்|இளம்பூரணரின்]] விளக்கம்.<ref>தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 2006, பக். 16.</ref>
 
==<h1>மொழியியலும், வல்லினமும்==</h1>
===ஒலிப்பிறப்பு===
தற்கால மொழியியலின்படி தமிழின் வல்லின எழுத்துகளில் "'''ற'''" தவிர்ந்த ஏனையவை எல்லா இடங்களிலும் [[வெடிப்பொலி]]கள் அல்லது அடைப்பொலிகள் என்ற வகைக்குள் அடங்குகின்றன. வாயறையின் ஓரிடத்தில் மூச்சுக்காற்று முழுவதும் தடை செய்யப்பட்டுப் பின்னர் திடீரென்று வெடிப்போடு வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே வெடிப்பொலிகள்.<ref>கருணாகரன், கி., ஜெயா, வ., 2007. பக். 23.</ref>[[ஒற்றெழுத்து|ஒற்றெழுத்தாக]] வரும்பொழுது "றகரம்" வெடிப்பொலியாக அமையும். [[இலங்கைத் தமிழ்|இலங்கைத் தமிழிலும்]], தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இரட்டிக்கும்போதும் "றகரம்" வெடிப்பொலியாக வருகின்றது. வல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு:
{| class="wikitable"
வரிசை 23:
|}
 
===வல்லொலி மெல்லொலி மாற்றம்===
வல்லின எழுத்துகளில் "றகரம்" தவிர்ந்தவை தமிழில் எல்லா இடங்களிலும் [[வல்லொலி]]யாக ஒலிக்கப்படுவது இல்லை. க், த், ப் என்பன, சொல்லுக்கு முதலில் வரும்போதும் (எகா: '''க'''டல், '''த'''ட்டு, '''ப'''த்து) [[இரட்டித்தல் (எழுத்திலக்கணம்)|இரட்டிக்கும்]] போதும் (எகா: பக்'''க'''ம், முத்'''த'''ம், அப்'''ப'''ம்) மட்டுமே இவை, வல்லொலிகளாக ஒலிக்கின்றன. "சகரம்" தற்காலத்தில் சொல்லுக்கு முதலில் வரும்போது பெரும்பாலும் [[மெல்லொலி]]யாகவே (எகா: சட்டி (satti), செக்கு (sekku)) ஒலிக்கப்படுகின்றது. ஆனாலும், சில பகுதிகளில் [[பேச்சு வழக்கு|பேச்சு வழக்கில்]] சொல்லின் முதலில் வரும் "சகரம்" வல்லொலியாகவே (எகா: சட்டி (chatti), செக்கு (chekku)) ஒலிக்கப்படுகின்றது. இரட்டித்து வரும்போது சகரம் எப்போதும் வல்லொலியாகவே (எகா: பச்'''சை''', அச்'''ச'''ம்) ஒலிக்கப்படும். "டகர"மும், "றகர"மும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இரட்டிக்கும்போது வல்லொலிகளையே தருகின்றன. "றகரம்" எல்லா இடங்களிலும் வல்லொலியே. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த பிற இடங்களில் வரும் க, ச, ட, த, ப என்னும் வல்லெழுத்துகளைத் தமிழில் மெல்லொலிகளாக (எகா: அ'''க'''ம், தங்'''க'''ம், பா'''ச'''ம், கொஞ்'''ச'''ம், பா'''ட'''ல், ஆண்'''ட'''வன், கா'''த'''ல், சொந்'''த'''ம், கோ'''ப'''ம், இன்'''ப'''ம்) ஒலிப்பது வழக்கம்.
 
"https://tamilar.wiki/w/வல்லினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது