ஏரெழுபது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shanmugamp7
Shanmugamp7 பக்கம் ஏரெழுபதுஏர் எழுபது க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
 
imported>Sukanthi
"{{விக்கிமூலம் | ஏரெழுபது}} '''ஏரெழுபது''' என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{விக்கிமூலம் | ஏரெழுபது}}
#வழிமாற்று [[ஏர் எழுபது]]
'''ஏரெழுபது''' என்பது, [[வேளாண்மை | வேளாண்]] தொழிலின் சிறப்புப் பற்றிக் [[கம்பர்]] எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளின் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், [[சோழர்|சோழ மண்ணின்]] சிறப்பு, வேளாளர்கள் சிறப்பு என்று பல்வேறு வகையான செய்திகளை இந்த நூல் கூறுகிறது.
 
== நூலின் சிறப்புகள் ==
இந்நூல் [[வேளாண்மை|வேளாண்மையின்]] அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றிக் கூறுகிறது.
 
# உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு
# ஏர்விழாச் சிறப்பு
# அலப்படைவாள் சிறப்பு
# மேழிச் சிறப்பு
# ஊற்றாணிச் சிறப்பு
# நுகத்தின் சிறப்பு
# நுகத்துளைச் சிறப்பு
# நுகத்தாணியின் சிறப்பு
# பூட்டு கயிற்றின் சிறப்பு
# கயிற்றின் தொடைச் சிறப்பு
# கொழுவின் சிறப்பு
# கொழு ஆணியின் சிறப்பு
# நாற்றுமுடி, தாற்றுக்கோல் சிறப்பு
# உழும் எருதின் சிறப்பு
# எருதின் கழுத்துக்கறை சிறப்பு
# எருது பூட்டுதற் சிறப்பு
# ஏர் பூட்டலின் சிறப்பு
# ஏர் ஓட்டுதலின் சிறப்பு
# உழுவோனின் சிறப்பு
# உழவின் சிறப்பு
# உழுத சாலின் சிறப்பு
# மண்வெட்டியின் சிறப்பு
# வரப்பின் சிறப்பு
# எருவிடுதலின் சிறப்பு
# சேறாக்கலின் சிறப்பு
# பரம்படித்தலின் சிறப்பு
# வித்திடுதலின் சிறப்பு
# முளைத்திறனின் சிறப்பு
# நாற்றங்காலின் சிறப்பு
# நாற்று பறித்தலின் சிறப்பு
# முடி இடுதலின் சிறப்பு
# உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு
# நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு
# பாங்கான நடவின் சிறப்பு
# உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு
# சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு
# வேளாண்மை முதலாதலின் சிறப்பு
# பயிர் வளர்திறத்தின் சிறப்பு
# நாளும் நீரிறைத்தலின் சிறப்பு
# பாய்ச்சும் நீரின் சிறப்பு
# நிலம் திருத்தலின் சிறப்பு
# சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு
# பயிர் நட்டாரின் சிறப்பு
# நீர் பாய்ச்சுதலின் சிறப்பு
# களைநீக்கலின் சிறப்பு
# கருபிடித்தலின் சிறப்பு
# கதிர் முதிர்தலின் சிறப்பு
# கதிரின் பசிய நிறசிறப்பு
# கதிரின் தலைவளைவின் சிறப்பு
# விளைவு காத்தலின் சிறப்பு
# அறுவடை கொடையின் சிறப்பு
# அறு சூட்டின் சிறப்பு
# களம்செய்தலின் சிறப்பு
# போர் அடிவலியின் சிறப்பு
# அடிகோலின் சிறப்பு
# போர் சிறப்பு
# போர்க்களப் பாடலின் சிறப்பு
# இரப்பவரும் தோற்காச் சிறப்பு
# நாவலோ நாவல் என்பதன் சிறப்பு
# எருது மிதித்தலின் சிறப்பு
# நெற்பொலியின் சிறப்பு
# நெற்குவியலின் சிறப்பு
# நெற்கூடையின் சிறப்பு
# தூற்றுமுறத்தின் சிறப்பு
# பொலி கோலின் சிறப்பு
# நெற்கோட்டையின் சிறப்பு
# கல்மணிகளின் சிறப்பு
# வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு
# நன்மங்கல வாழ்த்து உள்ளிட்டவையாகும்.
 
#வழிமாற்று== [[ஏர் எழுபது]] ==
ஏர் எழுபது என்ற நூல் கம்பரால் எழுதப்பட்டது ஆகும். இதில் ஏர்த்தொழில் பற்றி 70 செய்யுட்கள் உள்ளது. இந்நூலுக்கு முன் `ஏர்த்தொழில்’ பற்றிய நூல் இல்லை. எனவே `ஏர்த்தொழில்’ குறித்து எழுந்த முதல் நூல் `ஏர் எழுபது’ ஆகும். இந்நூல் சடையப்ப வள்ளலின் முன்னிலையில் 12-ஆம் நூற்றாண்டில் கம்பரால் அரங்கேற்றப்பட்டது. உழவுத் தொழிலின் மேன்மை உழவர் பண்பாடு, உழவரின் சிறப்பு, உழவியல் முறைகள், உழவியல் குறிப்புகள், சமுதாய நிலை, கருவிகள் முதலியவற்றை விளக்கிக் கூறுவதால், இந்நூல் `பயன் இலக்கியத்தைச் சார்ந்தது ஆகும்.
 
செங்கோலை நடத்தும் கோல் ஏரடிக்கும் சிறுகோலே; ஏர் நடக்குமெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்; உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே; மன்னன், மக்கள், கலை, பண்பாடு போன்றவை உழவுத்தொழிலைச் சார்ந்துள்ளது; ஏரில்லையெனில் போரில்லை; உழவரின் நாற்றுமுடியே மன்னரின் மணிமுடி; போரில் வெற்றி தோல்விகள் உண்டு, உழவரின் களத்தில் தோல்வி என்பதே கிடையாது; சிவனது கழுத்து கறையினும், எருத்தின் கழுத்துத் தழும்பே பெருஞ்சிறப்புடையது; ஞாயிறு, திங்களின் கதிர்கள் உயிர்களை வளர்ப்பதில்லை ஆனால் நெற்கதிர்களோ உயிரை வளர்க்கிறது; உணவால் பசி ஒழிந்தால் மொழி, அறிவு வளரும்; நாடு சிறப்பெய்தும் போன்ற கருத்துகள் `ஏர் எழுபதில்’ உள்ளன.
<ref>கந்தசாமி, இவ.செ (1974). ஏர் எழுபது – ஒரு திறனாய்வு. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 106-111.</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[வேளாண்மை]]
* [[திருக்கை வழக்கம் (கம்பர்) | திருக்கை வழக்கம்]]
 
== உசாத்துணைகள் ==
* ஏர் எழுபது (2009). ''[[வாழ்வியற் களஞ்சியம்]]''.
 
[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:வேளாண்மையியல் தமிழ் நூல்கள்]]
"https://tamilar.wiki/w/ஏரெழுபது" இலிருந்து மீள்விக்கப்பட்டது