வருண் கமல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = வருண் | image = | imagesize = | birth_name = வருண் ஐசரி கமலக்கண்ணன் | birth_date = {{Birth date and age|1992|12|22|df=y}} | birth_place = இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை | othername = | occupation = நடிகர் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 11:
| height = 183cm
}}
'''வருண்''' என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[ஆண்டோனி]]யின் ''[[ஒரு நாள் இரவில்]]'' (2015) என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் [[ஏ. எல். விஜய்]] மற்றும் [[பிரபுதேவா]] சம்பந்தப்பட்ட படங்களில் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். <ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Isari-Velans-grandson-in-Victors-debut-film/articleshow/48375462.cms|title=Isari Velan's grandson in Victor's debut film - Times of India|website=indiatimes.com|access-date=8 February 2017}}</ref>
 
== தொழில் ==
இவர் நடிகர் [[ஐசரி வேலன்|ஐசரி வேலனின்]] பேரனும், தொழிலதிபர் [[ஐசரி கணேஷ்|ஐசரி கணேசின்]], மருமகனுமாவார். 2011 ஆம் ஆண்டில் [[சிறீமன்|ஸ்ரீமானின்]] தயாரிப்பு நிறுவனத்தின் படமான பரிமளா திரையரங்கம் என்ற படத்தில் விகாஷ் என்ற மேடை பெயரில் கதாநாயகனாக முதன்முதலில் நடித்தார். அப்படத்தில் [[கிஷோர் (நடிகர்)|கிஷோர்]], [[விவேக் (நடிகர்)|விவேக்]], [[சனுஷா]], [[ஆர்யா]] உள்ளிட்டோர் விருந்தினர் தோற்றத்தில் நடித்தனர். ஆனால் அப்படம் தயாரிப்பு சிக்கல்களில் சிக்கியதால் திரையரங்குகளில் வெளிவரவில்லை. <ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/cinema/carving-a-unique-niche/article2600840.ece|title=Carving a unique niche|last=RANGARAJAN|first=MALATHI|website=thehindu.com|access-date=8 February 2017}}</ref> பின்னர் வருண் [[ஏ. எல். விஜய்|ஏ. எல். விஜய்யின்]] மேற்பார்வையில் உதவி இயக்குநராக பயிற்சி பெற்றார். மேலும் ''[[தலைவா]]'' (2013) படத்தின் உருவாக்கத்தில் பணியாற்றினார். தான் தயாரிக்கும் தனது அடுத்த படத்தில் நடிக்குமாறு வருணை விஜய் கேட்டுக்கொண்டார், ''[[ஒரு நாள் இரவில்]]'' (2015) என்ற பரபரப்பூட்டும் அப்படத்தை பிரபல திரைப்பட தொகுப்பாளரான [[ஆண்டோனி]] இயக்க வருண் நடித்தார். <ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/151121/entertainment-kollywood/article/sathyaraj-sir-treated-me-his-son-sets-varun-kamal|title=Sathyaraj sir treated me like his son on sets: Varun Kamal|date=22 November 2015|website=deccanchronicle.com|access-date=8 February 2017}}</ref> அப்படத்தில் முப்பது வயது தானி ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிக்க வருண் தன் எடையை பதினைந்து கிலோகிராம் வரை கூட்டினார். மேலும் இப்படத்தில் [[சத்யராஜ்]], [[அனுமோள்]], [[யூகி சேது]] ஆகியோர் நடித்தனர். <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/newcomer-varun-talks-about-working-in-oru-naal-iravil.html|title=Newcomer Varun talks about working in Oru Naal Iravil|date=18 November 2015|website=behindwoods.com|access-date=8 February 2017}}</ref> இந்த படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை. ஆனால் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. <ref name="behindwoods.com">{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movies/oru-naal-iravil/oru-naal-iravil-review.html|title=Oru Naal Iravil (aka) Night Show review|website=behindwoods.com|access-date=8 February 2017}}</ref> <ref>{{Cite web|url=http://www.sify.com/movies/oru-naal-iravil-review-tamil-pluthhaiddjeh.html|title=Review : Oru Naal Iravil|website=sify.com|access-date=8 February 2017|archive-date=22 நவம்பர் 2015|archive-url=https://web.archive.org/web/20151122014342/http://www.sify.com/movies/oru-naal-iravil-review-Tamil-pluthhaiddjeh.html|url-status=}}</ref>
 
கற்பனை பரபரப்பூட்டும் திரைப்படமான ''[[போகன்|போகனில்]]'' [[ஜெயம் ரவி]], [[அரவிந்த்சாமி]] ஆகியோருடன் இணைந்து நடித்த வருண் அதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்தார், அதற்காக இவர் உடல் எடையைக் கூட்டினார். <ref name="behindwoods.com"/> வருண் பிரபு தேவா தயாரிக்கும் படமான ''[[சம் டைம்ஸ் (தமிழ்த் திரைப்படம்)|சம் டைம்சில்]]'' படத்தின் வழியாக மீண்டும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். இரண்டாவது முன்னணி நடிகராக ''[[நெருப்புடா]]'' படத்திலும், [[விக்ரம் பிரபு]]வுடன் இணைந்து நடித்தார். மேலும் [[ஏ. எல். விஜய்]] இயக்கிய ''[[வனமகன் (திரைப்படம்‌)|வனமகன்]]'' படத்தில் ஜெயம் ரவி மற்றும் [[சாயிஷா]] ஆகியோருடன் இணைந்து நடித்தார். <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/varun-on-his-next-film-with-director-vijay-and-jayam-ravi.html|title=Varun on his next film with director Vijay and Jayam Ravi|date=7 September 2016|website=behindwoods.com|access-date=8 February 2017}}</ref>
 
சம்யுக்தா ஹெக்டேவுடன் 2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை நாடக திரைப்படமான ''[[பப்பி]]'' படத்தில் வருண் நாயகனாக அறிமுகமானார். பிரபு தேவா தயாரிக்கும் வினோதன் படத்தில் வருண் இரண்டாவதாக முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் இவருடன் இணைந்து [[வேதிகா குமார்|வேதிகா]] மற்றும் சலோனி லுத்ரா ஆகியோர் நடிக்கவிருக்கிறனர்.
 
== திரைப்படவியல் ==
வரிசை 89:
|}
 
=== தொலைக்கட்சி ===
{| class="wikitable sortable" style="background:#f5f5f5;"
|- style="background:#B0C4DE;"
வரிசை 103:
== குறிப்புகள் ==
 {{Reflist}}
 
[[பகுப்பு:1992 பிறப்புகள்]]
[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள்]]
"https://tamilar.wiki/w/வருண்_கமல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது