நரசய்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சான்றில்லை}} '''காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா''' ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 22: வரிசை 22:
இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.
இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.


#''"சொல்லொணாப் பேறு"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004|2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுகதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#''"சொல்லொணாப் பேறு"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004|2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] சிறுகதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#''"கடல்வழி வணிகம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#''"கடல்வழி வணிகம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#''"மதராசப்பட்டினம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (''மதராசப்பட்டினம்'' என்னும் நூல் பின்னர் ஆங்கிலத்திலும் ''மட்ராஸ்'' என்னும் பெயரில் வெளியானது.)
#''"மதராசப்பட்டினம்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (''மதராசப்பட்டினம்'' என்னும் நூல் பின்னர் ஆங்கிலத்திலும் ''மட்ராஸ்'' என்னும் பெயரில் வெளியானது.)
# ''"கம்போடியா நினைவுகள்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
# ''"கம்போடியா நினைவுகள்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2009|2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.


==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
வரிசை 40: வரிசை 40:
[[பகுப்பு:தமிழர் கப்பற்கலை ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:தமிழர் கப்பற்கலை ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]

22:12, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர் வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

எழுதிய நூல்கள்

  • நரசய்யா சிறுகதைகள் (1997)
  • கடல்வழி வணிகம் (2005)
  • தீர்க்க ரேகைகள் (2003)
  • சொல்லொணாப்பேறு (2004)
  • ஆலவாய் (2009)
  • கடலோடி (2004)
  • மதராசபட்டினம் (2006)
  • துறைமுக வெற்றிச் சாதனை (2007)
  • கடலோடியின் கம்போடியா நினைவுகள் (2009)

விருதுகள்

இவரது நூற்றுக்கும் மேலான சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இரண்டாம் சிறுகதைத் தொகுதி திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது

இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது.

  1. "சொல்லொணாப் பேறு" எனும் நூல் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  2. "கடல்வழி வணிகம்" எனும் நூல் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  3. "மதராசப்பட்டினம்" எனும் நூல் 2006 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (மதராசப்பட்டினம் என்னும் நூல் பின்னர் ஆங்கிலத்திலும் மட்ராஸ் என்னும் பெயரில் வெளியானது.)
  4. "கம்போடியா நினைவுகள்" எனும் நூல் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

அடிக்குறிப்புகள்


மேலும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நரசய்யா&oldid=411413" இலிருந்து மீள்விக்கப்பட்டது