அதானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி சான்றுகள்: clean up using AWB
 
No edit summary
 
வரிசை 9:
அதானி மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 69% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 79% வீதமாவும் காணப்படுகின்றது. மக்கட் தொகையில் 14% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.<ref>{{Cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|title=Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archive-date=2004-06-16|url-status=unfit|access-date=}}</ref>
 
== பொருளாதாரம் - விவசாயம் ==
 
=== விவசாயம் ===
அதானியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மொத்த மக்கட் தொகையில் 60% வீதமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோதுமை , சூரியகாந்தி, கரும்பு , திராட்சை , நிலக்கடலை என்பன முக்கிய பயிர்களாகும். தக்காளி, கத்திரிக்காய், வெண்டிக்காய், கீரைகள், மிளகாய் போன்ற காய்கறிகளும் வளர்க்கப்படுகின்றன. மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் கிடைக்கக்கூடிய நீர் விநியோகத்திற்கு பம்ப்செட்டுகள் நடைமுறையில் உள்ளன. மேலும் முக்கிய வணிக பயிர் கரும்பாகும். அதானி கர்நாடகாவின் மிகப்பெரிய கரும்பு சாகுபடி தாலுகாக்களில் ஒன்றாகும். இப்பகுதியின் 70% வீதமான நிலம் வளமானதாகும். கிருஷ்ணா நதி மற்றும் அக்ரானி நதிக்கு அருகில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பு தாலுகாவில் 1,50,000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்படுகிறது. அதானியில் உள்ள உயர் கிருஷ்ணா திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கால்வாய்கள் கட்டப்பட்டன. இது கரும்பு மற்றும் திராட்சை சாகுபடிக்கு உதவியாக இருக்கின்றது.
 
=== தொழிற்சாலைகள் ===
அதானி தாலுகாவில் சர்க்கரை தொழில், காலணி தொழிற்சாலைகள், இன்னும் பல தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
==== காலணி தொழிற்சாலைகள் ====
அதானியில் தோற் காலணிகள் உற்பத்தி நடைபெறுகின்றது. பாரம்பரிய தோல் உற்பத்தி தொழிலாளர்கள் இதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். கிராம தொழில்துறை ஆணையம் "லிட்கர்" என்ற பெயரில் ஒரு காலணி உற்பத்தி மையத்தை நிறுவியது. இதனால் பாதணிகளின் உற்பத்தி அதிகரித்தது. நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் அதானியிடமிருந்து தோல் பொருட்களை தங்கள் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வாங்குகிறார்கள். ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலம் இங்கு உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
==== சர்க்கரை தொழிற்சாலை ====
முன்பு அதானி தாலுகாவில் சர்க்கரை தொழிற்சாலை காணப்படவில்லை. அதனால் விவசாயிகள் கரும்பை மகாராஷ்டிராவுக்கு கொண்டு சென்றனர். அதானி தாலுகாவில் தொழிலை நிறுவ விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். பின்னர் இந்த தாலுகாவில் பல சர்க்கரை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
 
"https://tamilar.wiki/w/அதானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது