அம்னோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
 
No edit summary
 
வரிசை 45:
மலாயா ஒன்றியத்தின் மூலமாக மலாய் மாநிலங்கள் பிரித்தானிய முடியாட்சிக்குள் கொண்டு வரப்படுவதாக மலாய்க்காரர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் மலாய்க்காரர்களின் அரசுரிமையைப் பாதிக்கக்கூடிய அம்சங்களும் அந்தச் சட்டக் கட்டமைப்புகளில் இருந்தன. அவையே எதிர்ப்புகளுக்கு முக்கிய காரணங்களாகும்.<ref>{{Cite web |url=http://utusan.com.my/utusan/specialcoverage/umno2000/index.asp?lang=en&Sec=Fakta&Pg=sejarah_umno_ing.htm |title=The Malays and the Malay Association voiced their protest and refused to acknowledge the Malayan Union. |access-date=2013-04-30 |archive-date=2005-05-07 |archive-url=https://web.archive.org/web/20050507173126/http://www.utusan.com.my/utusan/specialcoverage/umno2000/index.asp?lang=en&Sec=Fakta&Pg=sejarah_umno_ing.htm |url-status=dead }}</ref> மலாய்க்காரர்கள் அல்லாதவர்களும் அம்னோவில் உறுப்பியம் பெற வேண்டும் எனும் கருத்தை [[டத்தோ]] [[ஓன் ஜாபார்]] வலியுறுத்தி வந்தார்.
 
=== மலாயா ஒன்றியம் ===
 
தவிர, [[மலாயா ஒன்றியம்|மலாயா ஒன்றியத்தில்]] மலாய்க்காரர்கள் அல்லாத சீனர்களும், இந்தியர்களும் இடம் பெற வேண்டும் என்றும் பிரித்தானியர்கள் தீவிரம் காட்டினர். அதுதான் மலாயா ஒன்றியத்தை பிரித்தானியர்கள் உருவாக்கியதற்குத் தலையாய காரணம் ஆகும்.<ref>{{Cite web |url=http://www.malaysian-explorer.com/muziumNegaraD08.html |title=The anger and opposition of the Malays to the Malayan Union further intensified when the underhanded methods used by Sir Harold MacMichael to get the Malay Sultans to sign and transfer their power to the British Crown became known. |access-date=2013-04-30 |archive-date=2011-02-23 |archive-url=https://web.archive.org/web/20110223051550/http://www.malaysian-explorer.com/muziumNegaraD08.html |url-status=dead }}</ref>
வரிசை 51:
[[மலாயா ஒன்றியம்|மலாயா ஒன்றியத்தின்]] மூலமாக மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு கட்டுப்பாடற்ற குடியுரிமை வழங்கப்படுவதைப் பல மலாய்க்காரர் அமைப்புகள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்தன. அதன் பிறகு பல மலாய்க்காரர்கள் மாநாடுகள் நடைபெற்றன. அதன் நீட்சியாக [[1946]] [[மே 10]] இல், வேறு ஒரு தேசியக் கட்சி, அம்னோ எனும் பெயரில் தோற்றம் கண்டது.<ref>{{Cite web |url=http://utusan.com.my/utusan/specialcoverage/umno2000/index.asp?lang=en&Sec=Fakta&Pg=sejarah_umno_ing.htm |title=On May 11, 1946 at the Istana Besar, Johor Bahru, the third Malayan Malay Congress and the first UMNO General Assembly took place where the UMNO constitution was accepted and passed by the members. |access-date=ஏப்ரல் 30, 2013 |archive-date=மே 7, 2005 |archive-url=https://web.archive.org/web/20050507173126/http://www.utusan.com.my/utusan/specialcoverage/umno2000/index.asp?lang=en&Sec=Fakta&Pg=sejarah_umno_ing.htm |url-status=dead }}</ref> அம்னோவின் தலைவராக [[டத்தோ]] [[ஓன் ஜாபார்]] பொறுப்பேற்றார்.<ref>{{Cite web |url=http://www.malaysianbar.org.my/index2.php?option=com_content&do_pdf=1&id=9922 |title=The congress decided to form a national organisation to protect Malay interests, and elected Onn as its first president. |access-date=2013-04-30 |archive-date=2012-03-21 |archive-url=https://web.archive.org/web/20120321044256/http://www.malaysianbar.org.my/index2.php?option=com_content&do_pdf=1&id=9922 |url-status=dead }}</ref>
 
=== மலாய்க்காரர்கள் எதிர்ப்பு ===
 
[[மலாயா ஒன்றியம்]] என்பது, மலாயாவில் இருந்த அனைத்து சுல்தான்களின் ஆளுமைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, மத்திய அரசாங்கத்தைப் பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுக்குள் பிரித்தானிய ஆளுமையைக் கொண்டு வருவது. இந்த மலாயா ஒன்றியம் அமைக்கப்படுவதில் மலாய்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு வேறு பல காரணங்களும் இருந்தன.
வரிசை 63:
மலாய்க்காரர்களுக்கு அப்போதைய இந்தியர்கள் ஒரு மருட்டலாகத் தெரியவில்லை. சமயக் கோட்பாடுகளைத் தவிர, கலை, கலாசாரங்களின்படி இரு இனங்களும் சமரசமாய் ஒத்துப் போகக்கூடியதாய் இருந்தன. ஆனால், சீனர்களின் பொருளாதார ஆதிக்கத் தன்மைதான் மலாய்க்காரர்களை அச்சமடையச் செய்தது. சீனர்களின் தனிப்பட்ட பொருளாதார ஆதிக்கம் மட்டுமே மலாய்க்காரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.<ref>[http://www.scribd.com/doc/19973448/Malayan-Union The opposition was mainly due to the way Sir Harold MacMichael acquired the Sultans’ signatures, the erosion of the Sultans’ powers and the offering of citizenship to recent immigrants mainly the ethnic Chinese because their economic dominance.]</ref>
 
=== தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு ===
 
[[1946]] [[மார்ச் 1]] இல், [[மலாயா]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] இருந்த மலாய் அமைப்புகள் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] ஒன்று கூடி ஒரு மாநாட்டை நடத்தின. அந்த மாநாட்டிற்கு அகில மலாயா மலாய் மாநாடு என்று பெயர். அதற்கு [[டத்தோ]] [[ஓன் ஜாபார்]] தலைமை தாங்கினார். ஒரு மாதம் கழித்து 1946 [[ஏப்ரல் 1]] இல், பிரித்தானியர்களால் மலாயா ஒன்றியம் தொடக்கி வைக்கப்பட்டது.
வரிசை 71:
[[1945]] [[மே 11]] இல் [[ஜொகூர் பாரு]]வில் மற்றோர் அகில மலாயா மலாய் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மலாய்க்காரர்களுக்காக ஓர் அரசியல் கட்சி தேவை என்பதால் '''அம்னோ''' எனும் ''தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு'' தோற்றுவிக்கப்பட்டது. [[டத்தோ]] [[ஓன் ஜாபார்]] தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
 
=== மலாயா சுதந்திரக் கட்சி ===
 
அம்னோ தோற்றுவிக்கப்பட்டாலும், [[மலாயா ஒன்றியம்|மலாயா ஒன்றியத்தை]] [[டத்தோ]] [[ஓன் ஜாபார்]] ஆதரித்து வந்தார். ஆனால், அவருடைய நோக்கங்களை மலாய் அமைப்புகள் புறக்கணித்து வந்தன. தன்னுடைய நோக்கங்களுக்கு தொடர்ந்தால் போல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விரக்தி அடைந்த [[டத்தோ]] [[ஓன் ஜாபார்]] அம்னோவில் இருந்து வெளியேறி [[மலாயா சுதந்திரக் கட்சி]]யைத் தோற்றுவித்தார்.
வரிசை 77:
[[டத்தோ]] [[ஓன் ஜாபார்]] வெளியேறியதும், அம்னோவின் தலைமைப் பொறுப்பிற்கு [[துங்கு அப்துல் ரகுமான்]] மாற்றுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அதே ஆண்டு 1946 இல், [[மலாயா]]வில் முதல்முறையாக [[பினாங்கு]] [[ஜார்ஜ் டவுன் (பினாங்கு)]] நகராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் [[மலாயா தீவிரக் கட்சி]] ஒன்பது இடங்களில் ஆறு இடங்களைக் கைப்பற்றியது.
 
=== மலாயா தீவிரக் கட்சி ===
 
[[மலாயா தீவிரக் கட்சி]] என்பது பெரும்பாலும் சீனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியாகும். [[பினாங்கு]]த் தீவில் அதிகமாக [[சீனர்]]கள் இருந்ததால் [[மலாயா தீவிரக் கட்சி]] எளிதாக வெற்றி பெற முடிந்தது அதன் பின்னர், [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கத்துடன்]] ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒரே இடத்தில் இரு கட்சிகளும் போட்டியிடுவது இல்லை என அம்னோவும் [[மலேசிய சீனர் சங்கம்|மலேசிய சீனர் சங்கமும்]] பரஸ்பரம் இணக்கம் தெரிவித்தன.
வரிசை 85:
அடுத்து அடுத்து வந்த தேர்தல்களில் அம்னோ, மலேசிய சீனர் சங்கம், [[மலேசிய இந்திய காங்கிரசு]] இணைந்து செயல்பட்டன. அதுவே, பின்னாளில் [[மலேசிய கூட்டணி கட்சி]] எனும் அரசியல் கூட்டணி உருவாவதற்கு காரணமாக அமைந்தது. அந்தக் கூட்டணிதான் [[மலேசியா]]வில் முதல் அரசியல் கூட்டணியாகும்.
 
=== மலாயா சுதந்திரப் பேச்சு வார்த்தைகள் ===
 
[[1954]] ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில், 268 இடங்களில் கூட்டணி போட்டியிட்டது. அதில் 226 இடங்களில் வெற்றி பெற்றது. அதே ஆண்டு 100 இடங்களைக் கொண்ட மத்திய சட்டப் பேரவை தோற்றுவிக்கப்பட்டது. மத்திய சட்டப் பேரவையின் 52 இடங்களுக்குத் தேர்தலும் எஞ்சியுள்ள 46 இடங்களுக்கு நியமனங்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
"https://tamilar.wiki/w/அம்னோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது