இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO சி Abdunnafiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 113:
இசுலாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை [[இசுலாத்தின் ஐந்து தூண்கள்]] என அழைக்கப்படுகின்றன.
“''இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது அவனது தூதர்''.” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது ''கலிமா சகாதா'' என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.
வரிசை 137:
}}
பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத [[குழந்தை]]கள், [[மாதவிலக்கு]] நேரங்களில் [[பெண்]]கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. [[மெக்கா]]வில் உள்ள [[புனித காபா]]வை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன.
வரிசை 150:
நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்யுங்கள். வானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண்பகலிலும் இருக்கும் போதும் (துதி செய்யுங்கள்) (அல்குர்ஆன் 30:17, 18).}}
ஒவ்வொரு வருடமும் [[இசுலாமிய நாட்காட்டி]]யின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் [[நீர்]] ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
வரிசை 168:
சூரா:2 வசனம்: 185 }}
''ஸக்காத்'' எனப்படும் கட்டாய பொருள் தானம் இசுலாமின் நான்காவது கட்டாய கடமையாகும். இதன்படி, ஒவ்வொரு இசுலாமியரும் ஆண்டுக்கு ஒருமுறை தனக்குச் சொந்தமான [[தங்கம்|தங்க]], [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]] நகைகள் மற்றும் வியாபார பொருள்கள் ஆகிய செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (100க்கு 2.5%) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 87.5 கிராம் தங்கத்திற்கும் அல்லது 612.5 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.
வரிசை 182:
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)}}
[[படிமம்:Hajj.ogg|thumb|புனித பயண நேரத்தில் காபா]]
வரிசை 199:
இசுலாமியர்கள் பொதுவாக [[சன்னி இஸ்லாம்|சுன்னி]] மற்றும் [[சியா இசுலாம்|சியா]] என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர [[சூபிசம்]] போன்ற சில பிரிவுகளும் உள்ளன.
{{Main|சன்னி இஸ்லாம்}}
வரிசை 205:
சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்ற சொல் ''சுன்னத்'' என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். [[இராக்]], [[ஈரான்]], மற்றும் [[ஓமன்]] ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை ''மத்கபு'' என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டு. இவற்றோடு சேர்த்து சலபி மற்றும் வஃகாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன.
{{Main|சியா இசுலாம்}}
[[சியா இசுலாம்]], இசுலாமிய உட்பிரிவுகளில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. [[இராக்]], [[ஈரான்]] மற்றும் [[ஓமன்]] ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.
{{Main|சூபிசம்}}
[[சூபிசம்]] என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும்.
* [[அகுமதிய்யா முசுலிம் சமூகம்|அகுமதிய்யா]] - இசுலாத்தின் பல கோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள், [[முகமது நபி]]க்கு பிறகு வந்த [[மிர்சா குலாம் அஹ்மத்]] என்பவரை மற்றொரு இறைதூதராக நம்புகின்றனர். இது இசுலாத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி இவர்களை முசுலிம்களாக ஏனைய முசுலிம்கள் ஏற்பதில்லை.
| |||