உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Thiagalingam "'''உரைநடை''' (''prose'') என்பது, ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஓர் எழுத்து வடிவம் ஆகும். கவிதை போல அணிகள் இன்றி, நேரடியாகவே சொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 3:
உரைநடைக்குக் குறிப்பான வடிவமோ, [[எதுகை]], [[மோனை]] போன்ற அணிகளோ இருப்பதில்லை எனினும், உரைநடைகளில், [[அடுக்கு மொழி]]கள் போன்ற கவிதைப் பாங்கு காணப்படுவது உண்டு. கவிதை, உரைநடை ஆகிய இரண்டு இலக்கிய வடிவங்களையும் கலந்து உருவான ஒன்று, [[வசன கவிதை]] என அழைக்கப்படுவது உண்டு. கவிதை, ஓரளவு செயற்கைத் தன்மை கொண்டது. உரைநடையோ, இயல்பான ஒழுங்கில் அமைவது.
தமிழ்நாட்டில் அச்சு இயந்திரங்களின் வருகை மற்றும் பயன்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டன. கி.பி.1577-இல் தமிழ்மொழியில் முதல் அச்சிடும் முயற்சி நடந்தது. கிருத்துவப் பாதிரிமார்கள், தம் சமய நூல்களை அச்சிட்டு வழங்க முற்பட்டனர். பதினேழு, பதினெட்டு நூற்றாண்டுகள் வரை [[அச்சு இயந்திரங்கள்]] கிருத்துவ பாதிரிமார்களிடத்தும் [[கிழக்கிந்தியக் கம்பெனி]]யினரிடத்தும் பயன்பாட்டில் இருந்து வந்தன. இக்கால கட்டத்தில், ஜெர்மன் நாட்டினரான [[சீகன் பால்கு]] என்பவர், நான்காம் பிரெடரிக் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, சமயப் பணியாற்ற தமிழ்நாட்டில் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] '''தரங்கம்பாடியில்''', '''1709-இல்''' முதலாவது அச்சுக் கூடத்தையும், அதற்குரிய [[காகிதத் தொழிற்சாலை]]யையும் நிறுவினார். இதன் மூலமாக [[சமயப் பரப்புரை]]யும், தமிழ் நூல்களை அச்சிட்டு வழங்கும் பணியும் தொடங்கியது. இவ்வாறாகத் தமிழில் மெல்ல [[உரைநடை வடிவம்]] வளர்ச்சியடைந்தது. தமிழ் உரைநடையின் முன்னோடியாக [[வீரமாமுனிவர்]] அறியப்படுகிறார். இவர் எழுதிய [[பரமார்த்த குரு கதை]], எளிய உரைநடையில் அமையப்பெற்று வழிகாட்டியாக விளங்கியது. 19-ஆம் நூற்றாண்டில்தான் அச்சு இயந்திரங்களைப் பொதுமக்கள் பயன்படுத்தும் உரிமை பெற்றனர்.
பழைய, புதிய செய்யுள் இலக்கியங்கள், புதிய உரைநடை நூல்கள், இதழ்கள் போன்றவற்றை அச்சிட்டுப் பரப்பிட அச்சுக்கருவிகள் நன்கு பயன்பட்டன. ஆங்கிலேயக் கல்வி முறையைப் பின்பற்றும் தமிழ்க் கல்வி நிலையங்களின் பாடநூல்கள் மூலமாகவும், தமிழில் உரைநடை வளர்ச்சியுற்றது. குறைந்த விலைக்குப் பெறப்பட்ட அச்சிட்ட நூல்களால் படிப்போரின் எண்ணிக்கை கூடியது. மேலைநாட்டாரின் அடியொற்றிப் பலரும் கதைகள், கட்டுரைகள், இதழ்கள், [[அகராதிகள்]], [[திறனாய்வுகள்]] முதலானவற்றில் ஈடுபாடு கொண்டு, உரைநடை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
{{main|இராபர்ட் தெ நோபிலி}}
இத்தாலியைச் சேர்ந்த [[இராபர்ட் தெ நோபிலி|இராபர்ட் டி நொபிலி]] (1577-1656) என்னும் கிருத்துவப் பாதிரியார், தம் பெயரைத் தத்துவப் போதகர் என்று மாற்றிக்கொண்டு தமிழ்ப்பணி ஆற்றினார். இவர் 40 இற்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
{{main|வீரமாமுனிவர்}}
இவரும் இத்தாலி நாட்டினர். இயற்பெயர் [கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி ஆகும். தைரியநாதர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் பரமார்த்த குரு கதை, வாமன் கதை உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.
எல்லீசு, மெக்கன்சி என்கிற இரு ஆங்கிலேய அதிகாரிகள், சென்னைக் கல்விச் சங்கத்தை நிறுவினர். தமிழ் நூல்கள் பலவற்றை அச்சிட்டு வெளியிடுவதை, இச்சங்கம் தலையாய பணியாகக் கொண்டிருந்தது. முத்துசாமிப் பிள்ளை, [[தாண்டவராய முதலியார்]], கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் முதலான தமிழ் ஆசிரியர்கள் இச்சங்கத்தில் தொண்டாற்றினர். வீரமாமுனிவரின் தமிழ் அகராதியையும், ஏனைய நூல்களையும், முத்துசாமிப் பிள்ளை அச்சிட்டு வழங்கினார். தாண்டவராய முதலியார் [[பஞ்சதந்திரம்|பஞ்சதந்திரக் கதை]]யை (1825) மொழிபெயர்த்தும், தமிழகத்தில் வழங்கிவந்த கதைகளைத் தொகுத்துக் கதாமஞ்சரி (1826) என்ற பெயரில் நூல்களாக வெளியிட்டார். இச்சங்கம் மூலமாகப் பல்வேறு உரைநடை நூல்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின.
''தமிழ் உரைநடையின் வரலாறு'' என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் [[வ. சு. செங்கல்வராய பிள்ளை]]யால் 1904-இல் வெளியிடப்பட்டது. இந்நூலானது, தொல்காப்பியக்கால உரைநடைக் குறிப்புகள் தொட்டு, மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] (1815-1876), [[இராமலிங்க சுவாமிகள்]] (1823-1874),[[மறைமலையடிகள்]] (1870-1950), [[பரிதிமாற்கலைஞர்]] (1879-1903) வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியினை, விரிவாக ஆராய்ந்து அளித்தது.
திருச்சிற்றம்பல தேசிகர் என்பார், [[கம்பராமாயணம்|கம்பராமாயண]]த்தையும், இராமாயண உத்தரகாண்டத்தையும் உரைநடையில் எழுதி வழங்கினார். அதுபோல்,வீராசாமி செட்டியார் என்பவர், ''விநோதரச மஞ்சரி'' என்னும் நகைச்சுவை நிரம்பிய கட்டுரைகள் கொண்ட உரைநடை நூல் ஒன்றை இயற்றி வெளியிட்டார். இவர் மேலும், [[காளிதாசர்]], [[கம்பர்]], [[ஒட்டக்கூத்தர்]], [[காளமேகப் புலவர்]], [[புகழேந்தி]] போன்ற புலவர்கள் குறித்து, உரைநடையில் நூல்கள் எழுதினார். நாகை தண்டபாணி தேசிகர் (1891-1922) என்பவர், சதாநந்தர், ஏகம்பஞ்சநதம், கலாசுந்தரி, மாயாவதி ஆகிய புதினங்களையும், கௌதம [[புத்தர்|புத்தரது]] வரலாற்றையும் எழுதியுள்ளார்.
ஐரோப்பியரின் வருகைக்குப் பின், வேகமாக வளர்ச்சியடைந்து வந்த உரைநடை இலக்கியத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தினவர்த்தமானி (1856), ஜனவிநோதினி (1870), [[விவேக சிந்தாமணி]], [[சுதேசமித்திரன்]] (1882), மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரின் '[[செந்தமிழ்]]' (1902) போன்ற இதழ்கள் மேலும் உரமூட்டின.
[[ஆறுமுக நாவலர்]] (1822-1888): இவர் யாழ்ப்பாணத்துத் தமிழறிஞராவார்.தமிழ்ப் பாடசாலைகளையும் அச்சுக்கூடத்தையும் நிறுவி,மாணவர்களுக்குரிய தொடக்க வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை, எளிய தமிழில் உரைநடையாக எழுதியளித்தார்.[[பெரிய புராணம்]], [[திருவிளையாடற்புராணம்]] ஆகியவற்றை உரைநடையில் எழுதிப் பயனுறச் செய்தார். பிழையற்ற, எளிய இவரது உரைநடைத் தமிழை, "நாவலர் நடை" என்றனர். இவர் 'தமிழ் உரைநடையின் தந்தை'<ref>மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு,ப.251.</ref> என்று அழைக்கப் பெறுகிறார்.
வரிசை 85:
[[ஞா.தேவநேயப் பாவாணர்]](1902-1981): மொழிஞாயிறு என்று போற்றப்பெறும் இவர், முதல் தமிழ்மொழி, ஒப்பியல் மொழிநூல், பழந்தமிழாட்சி, தமிழர் திருமணம், தமிழ் வரலாறு, மொழி வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு முதலான நூல்களை அளித்துள்ளார்.
பொதுவாக உரைநடையின் வகைகளை ஆறு பிரிவுகளாகக் கொள்ளலாம். அவை பின்வருமாறு அமையும்.
வரிசை 113:
எழுத்தாளர், தம் சொந்த ஆளுமை வெளிப்படும் படியாக எழுதப்படுவது சிந்தனை உரைநடையாகும். தன்னுணர்ச்சிப் பாங்குக் கட்டுரைகள், ஆன்மிக அனுபவக் கட்டுரைகள் போன்றவை இவ்வகையில் அமையும்.
பழைய உரைநடை எனப்படுவது, பேச்சு வழக்கில் காணப்படும் சொற்களை விடுத்து, பண்டை இலக்கியங்களில் வழங்கிவந்த சொற்களை மிகுதியாகக் கையாண்டும், செறிவாக அமைத்துக்கொண்டும் எதுகை மோனைகளைப் பயன்படுத்தி எழுதுவதாகும்.
வரிசை 121:
{{reflist}}
*மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி,புதுதில்லி-110001, பதினான்காம் பதிப்பு-2000.
*முனைவர் பாக்யமேரி,வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,சென்னை-98, முதற்பதிப்பு:ஜூலை,2008.
| |||