ஐசோபிரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Alhadis சி PNG -> SVG |
No edit summary |
||
வரிசை 44:
[[இறப்பர்|இறப்பரின்]] (பொலி ஐசோபிரீன்) ஒருபகுதியம் ஐசோபிரீனாகும். ஐசோபிரீன் பல தாவரங்களாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் 600 மில்லியன் தொன் ஐசோபிரீன் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றது. வளிமண்டலத்துக்குள் வெளியிடப்படும் ஐதரோகார்பன் அளவில் மூன்றிலொரு பகுதி ஐசோபிரீனிலிருந்து வருகின்றது. வளிமண்டலத்தில் ஐசோபிரீன் இலகுவாகப் பிரிகையடைந்து விடும். ஐசோபிரீன் வளியில் தாக்கமடையும் போது வளியில் புகைமூட்டமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. யூக்கலிப்டஸ் போன்ற தாவரங்களால் ஐசோபிரீன் அதிகம் உருவாக்கப்படுகின்றது. வளியில் ஓசோன் வாயுவின் செறிவை ஐசோபிரீன் பாதிக்கும் தன்மையுடையது. எனினும் இது படை மண்டல ஓசோனில் தாக்கம் செலுத்தாது. சாதாரண வளியில் ஐசோபிரீன் கலக்கப்பட்டால் ஓசோனின் அளவை இது குறைக்கின்றது. நைதரசனின் ஒக்சைட்டுகள் (NO<sub>x</sub>) வளியில் காணப்பட்டால் ஐசோபிரீன் அதனோடு தாக்கமடைந்து ஓசோனை விடுவிக்கின்றது. எனினும் ஐசோபிரீன் இயற்கையான பொருளாகையால் அது ஒரு வளி மாசாகக் கருதப்படுவதில்லை. எனினும் NO<sub>x</sub> ஒரு வளி மாசாகும்.
தாவரங்கள் தமது [[பசுங்கனிகம்|பச்சையுருமணிகள்]] மூலம் ஐசோபிரீனை உற்பத்தி செய்கின்றன. இது MEP வழிமுறை மூலம் உற்பத்தியாக்கப்படுகின்றன. பச்சையுருமணியில் ஐசோபிரீன் தொகுப்பி மூலம் இது உருவாக்கப்படுவதுடன் ஃபொஸிமிடோமைசின் மூலம் இவ்வுற்பத்தி நிறுத்தப்படுகின்றது. ஐசோபிரீன் 40 °C வெப்பநிலையிலேயே வினைத்திறனுடன் உற்பத்தி செய்யப்படுகின்றது. இத்தொழிற்பாடே ஐசோபிரீன் தாவரங்களை அதிக வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கின்றது என்ற அனுமானத்துக்குக் காரணமாகும்.
அதிக வெப்பநிலையிலிருந்து தம்மைப் பாதுகாக்கத் தாவரங்கள் ஐசோபிரீனை உருவாக்குகின்றன. எனினும் 40 °Cக்கு மேற்பட்ட வெப்பநிலையிலிருந்து ஐசோபிரீனால் வினைத்திறனாக தாவரங்களினைப் பாதுகாக்க இயலாது. தாவரத்தினுள் அதிக வெப்பநிலை வீச்சை ஐசோபிரீன் தடுக்கின்றது. அணு ஒக்சிசன், ஓசோன் போன்ற அதிக தாக்குதிறனுடைய ஒக்சிசன் வகைகளிலிருந்து இது தாவரங்களைப் இரசாயன ரீதியில் பாதுகாப்பதாக அறியப்பட்டுள்ளது.
| |||