ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
 
No edit summary
 
வரிசை 36:
ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால், [[முகலாயப் பேரரசு]], அவரது வாரிசுகளின் திறமையின்மையால், [[அரசியல்]] குழப்பத்திற்கு உள்ளாகி, பலவீனம் அடைந்தது. அதனால், ஒளரங்கசீபால் நியமிக்கப்பட்ட [[நவாபு]]களும், [[நிசாம்]]களும், தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் தான், [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]], வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் ஆளுமைக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
 
===படைவீரனாதல்===
இச்சூழலில், மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு [[மைசூர் அரசு|மைசூர் அரசை]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழும், [[பாமினி சுல்தான்கள்|பாமினி சுல்தான்களின்]] ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணராச உடையார்]] என்ற 20 வயது இளைய அரசனிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.
 
===பதவி உயர்தல்===
தேவனஹள்ளிப் போருக்கு பரிசாக, குதிரைப் படைக்குத் '''தளபதி''' ஆனார்.[[1750]]-ல் [[ஆங்கிலேயர்]]களுக்கும், பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் [[கர்நாடகப் போர்]] நடைபெற்றது. மைசூர் அரசு [[பிரெஞ்சுக்காரர்]]களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போரில், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.[[ஐரோப்பியர்]]களின் [[இராணுவம்|ராணுவ]] நுட்பங்களையும், நவீன [[ஆயுதம்|ஆயுதங்களைக்]] கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.அமைச்சர் நஞ்ஞராஜர், மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த [[திண்டுக்கல்]]லை '''நிர்வகி'''க்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார்<ref>{{cite book|last=Bowring|first=Lewin|title=Haidar Alí and Tipú Sultán, and the Struggle with the Musalmán Powers of the South|publisher=Clarendon Press|year=1899|location=Oxford|oclc=11827326|url=https://books.google.com/books?id=v80NAAAAIAAJ}}</ref>. அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி, ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் [[பீரங்கி]] படையையும் அமைத்தார்.
 
===அரசரும், அரசுப்படையும்===
மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. [[சம்பளம்|சம்பள]] உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் [[1758]]ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.
 
வரிசை 59:
'''அலியின் ஏவுகணைகள்:''' அட்டைக்கு பதிலாக [[உலோகம்|உலோகக்]] குழாய்களைக் கொண்டு, [[அடி|10அடி]] உயரமுள்ள [[மூங்கில்]]களை பயன்படுத்தி ஏறத்தாழ[[கிலோ|6கிலோ]] எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார். இதன் செயலாக்கத்தைக் கண்டு, ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.
 
===முதலாம் மைசூர் போர்===
1767-1769 என இரண்டுஆண்டுகள், அலிக்கும் ஆங்கிலேய மேற்தளபதி யோசப் சுமித்துக்கும் முதலாம் மைசூர் போர் நடந்தது. [[ஈரோடு|ஈரோட்டில்]] ஆங்கிலப்படையை, அலியின் படை வென்றது. இப்போரில், தனது தோல்வியை, தளபதி நிக்சன் ஒப்புக்கொண்டார்.மேற்கே [[மராத்தி|மராத்தியரை]] வென்று [[மங்களூர்|மங்களூரை]] வென்றார். கிழக்கே வெள்ளையரை தனியே எதிர்த்தார். இப்போரினைக் கண்ட அயிதராபாத்தின் அரசர்<small>([[ஹைதராபாத் நிஜாம்]])</small> அச்சத்தால், 23.2.[[1768]]-இல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆங்கிலேயரோ, அயிதர்அலியுடன் [[ஒப்பந்தம்]] செய்து கொண்டனர். அதன்படி, அவரவர் பிடித்த [[நிலம்|நில]]ப்பகுதிகளை, அவரவரிடமே விட்டுக் கொடுத்தனர்.மேலும், [[மைசூர் அரசு|மைசூருக்கு]] ஆபத்தெனில், ஆங்கிலப்படை உதவிக்கு வருமென்றும் ஒப்பந்தத்தில் எழுதி கையொப்பமிட்டனர்.இப்போரை, ''முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்'' என சில [[வரலாறு|வரலாற்று]] ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
 
வரிசை 66:
''நொறுக்கப்பட்ட [[பீரங்கி]]களின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் [[கால்|காலடியில்]] மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் [[மூக்கு|மூக்கைப்]] பிடித்து உலுக்குகிறான் அயிதர் அலி. [[வாய்|வாயிலிருந்து]] தங்க [[நாணயம்|நாணயங்களைக்]] கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் [[பதக்கம்]] அணிந்த ஒரு [[நாய்]] அயிதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.''
 
===இரண்டாம் மைசூர் போர்===
முன்பு தோற்ற மராத்தியர், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். முதலாம் மைசூர் போரின் ஒப்பந்தப்படி, ஆங்கிலப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் வெகுண்ட அயிதர் அலி, இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். [[1780]] முதல் [[1784]] வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது.
100 [[பீரங்கி]]கள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். [[ஆற்காடு]], [[பரங்கிப்பேட்டை]], வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் [[போர்]] தீவிரமாக நடந்தது. [[பேரம்பாக்கம்]] என்னுமிடத்தில் இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு, இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப் பட்டனர்.
வரிசை 74:
''ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் ([[ஆப்கானித்தான்|ஆப்கான்]]) மற்றும் பாரசீக([[ஈரான்]]) மன்னர்களை [[வங்காளம்|வங்காளத்தின்]] மீதும், [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்]]களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். [[பிரெஞ்சுகாரர்]]களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.''
 
===இறப்பு===
இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, அயிதரின் உடல்நிலை, முதுகுத் [[தண்டுவடம்|தண்டுவடப்]] [[புற்றுநோய்|புற்றுநோயால்]] பாதிக்கப்பட்டது. அதனால், அவரது உடல், இயங்க முடியாமல் முடங்கியது. அப்போது அவருக்கு வயது 60. [[கண்]]களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் 1782 திசம்பர் 6-இல் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலம்]] [[சித்தூர்]] அருகே அவரது உயிர் பிரிந்தது. மகன் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] வேண்டுகோளை ஏற்று, ஐதர் அலியின் உடல், [[சிறீரங்கப்பட்டினம்]] எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
 
"https://tamilar.wiki/w/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது