கோகாஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 13:
== புராணக்கதைகள் ==
 
=== குடும்பம் ===
கோகா ( {{Lang-hi|गोगा}} ) ( [[இராச்சசுத்தானி|ராஜஸ்தானி]] : (Gugo) गुग्गो) [[அனோ டொமினி|ராஜஸ்தானின்]] [[சூரூ மாவட்டம்|சுரு மாவட்டத்தில்]] [[இராசத்தான்|உள்ள]] [[அரியானா|சௌஹான்]] குலத்தைச் சேர்ந்த [[சௌகான்|தாத்ருவாவில்]] உள்ள அரசி பாச்சல் ( கி.பி. 1173 இல் [[சிர்சா மாவட்டம்|சிர்சாவை]] ஆட்சி செய்த கன்வர்பாலா என்ற ராஜபுத்திர ஆட்சியாளரின் மகள்,) மற்றும் மன்னர் சேவார் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கோகா [[இராசத்தான்|ராஜஸ்தானின்]] [[சூரூ மாவட்டம்|சுரு மாவட்டத்தின்]] சாதுல்பூர் தாலுகாவில் [[ஹிசார்|ஹிஸ்ஸார்]] - [[பிகானேர்]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தாத்ருவா கிராமத்திலே தனது இளமை பருவத்தை பல்வேறு திறமைகளை கற்றுக்கொன்று வாழ்ந்தார். மற்றொரு இதிகாச கதைகளின் படி, சட்லஜ் முதல் ஹரியானா வரை பரவியிருந்த ஜங்கல் தேசத்தின் ராஜாவான வச்சா சௌஹான் இவருடைய தந்தை ஆவார்.<ref>[https://books.google.co.uk/books?id=L9gcAQAAMAAJ&q=bachhal++gugga+haryana&dq=bachhal++gugga+haryana&hl=en&sa=X&ved=0CDgQ6AEwA2oVChMI07uCmuPpxwIVyG0UCh2sVwOl Census of India, 1961: India, Volume 1, Issue 4; Volume 1, Issue 19]</ref>
 
=== பிறப்பு ===
பாச்சல் மற்றும் அவளது இரட்டை சகோதரி இருவரும் கோரக்நாத்தை வழிபட்டு அவரது ஆசிர்வாதத்தை பெற முயற்சித்தபோது , அவளது இரட்டை சகோதரி கோரக்நாத்தின் ஆசீர்வாதத்தை குறுக்கு வழியில் பெற முடிவு செய்தார். அதன்படி நள்ளிரவில் தன் சகோதரியான பாச்சலின் ஆடைகளை அணிந்து கொண்டு, கோரக்நாத்தை ஏமாற்றி, ஆசிர்வாதப் பலனைக் பெற்றுக்கொண்டாள் . பாச்சல் அதை உணர்ந்ததும், கோரக்நாத்திடம் விரைந்து சென்று, தான் அவரிடம் ஆசீர்வாதமாக எதையும் பெறவில்லை என்று கூறினாள். இதற்கு பதிலளித்த கோரக்நாத், தான் ஏற்கனவே ஆசிர்வாதம் அளித்துவிட்டதாகவும், இனி ஆசிர்வதிக்க இயலாது என்றும் கூறினார். தனது சகோதரி தன்னை ஏமாற்றியதைக் கூறி வேண்டிக்கொண்ட பாச்சலின் கோரிக்கைகளுக்குப் பிறகு, கோரக்நாத் மனமிரங்கி இரண்டு குகல் பழங்களைக் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட பாச்சல்  குழந்தை இல்லாத பெண்களுக்கு அந்த பழங்களை பகிர்ந்தளித்தார். குரு பாச்சலுக்கு இந்த பழங்களை கொடுத்து ஆசி வழங்கியபோது, அவளுக்கு பிறக்கும் மகன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருப்பான் என்றும், பாச்சலின் சகோதரியான காச்சலின் இரண்டு மகன்களையும் ஆள்வான் என்றும் அவர் முன்னறிவித்தார்.
 
=== திருமணம் ===
கோகா தந்துல் நகரியின் மன்னரான சிந்தா சிங்கின் மகளான ஷ்ரேயல் ராஸ் என்பவரை  மணந்தார்.
 
=== மற்ற கதைகள் ===
மற்றொரு கதை என்னவென்றால், டெல்லியின் மன்னர் அனங்பால் தோமருடன் இணைந்து அர்ஜனும் சர்ஜனும் கோகாவுக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை தீட்டினர். மூவரும் இணைந்து கோகாவிற்கு எதிராக பகாட் பகுதியை தாக்கினார். ஆனால் அவ்விருவரும் கோகாவால் கொல்லப்பட்டனர். மேலும் கோகா தனது துன்பத்திற்கு காரணமான டெல்லியின் மன்னரை மட்டும் உயிரோடு மன்னித்து விட்டார். நிலம் தொடர்பான தகராறில், அவர் தனது இரண்டு சகோதரர்களைக் கொன்றதன் காரணமாக அவர் தனது தாயின் கோபத்தை தன் மீது வரவழைத்துக்கொண்டார் என்பதாக ஒரு கதை உள்ளது
 
வரிசை 34:
[[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[அரியானா|ஹரியானா]], [[இமாச்சலப் பிரதேசம்]] மற்றும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] வடமேற்கு மாவட்டங்கள் உட்பட [[இராசத்தான்|ராஜஸ்தான்]] மற்றும் வட இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த கோகாஜியை வழிபடும் வழிபாட்டு முறை பரவலாக உள்ளது. [[குசராத்து|குஜராத்]] மற்றும் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்திலும்]] அவரைப் பின்பற்றுபவர்கள் பலர் உண்டு.பெரும்பாலான வட இந்தியர்கள் அவரை வழிபடுகின்றர்.
 
=== ராஜஸ்தான் ===
அவரது ஆலயம், [[சமாதி (பதஞ்சலி)|மெடி]] ( [[சமாதி (பதஞ்சலி)|சமாதியின்]] சுருக்கமான பேச்சு வார்த்தை) என குறிப்பிடப்படுகிறது, ஒவ்வொரு மூலையிலும் ஒரு மினாரட் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்து கல்லறையுடன் உள்ள ஒரு அறை கட்டிடமே கோவிலாக உள்ளது, இது நீண்ட மூங்கில் மயில் தோகைகள், ஒரு தேங்காய், சில வண்ண நூல்கள் மற்றும் சில கைபங்கங்கள் மற்றும் மேலே ஒரு நீல கொடியுடன் கூடிய ஒரு நிஷானால் (ஒரு சின்னம் அல்லது அடையாளம்) குறிக்கப்படும்,
 
வரிசை 41:
ராஜஸ்தானின் [[செய்ப்பூர்|ஜெய்ப்பூரில்]] இருந்து 359&nbsp; கி.மீ. தொலைவில் உள்ள  [[அனுமான்காட்|ஹனுமன்கர்]] மாவட்டத்தில் உள்ள கோகமேடியில் கோகா [[சமாதி (பதஞ்சலி)|சமாதி]] அடைந்ததாக நம்பப்படுகிறது. [[சமாதி (பதஞ்சலி)|சமாதி]] சாதல் கோகமேடியில் பிரமாண்டமான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் [[புரட்டாசி|பாத்ரபத]] மாதத்தில் மூன்று நாட்கள் கோகா திருவிழா நடைபெறும் . அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூடுவார்கள். பத்ரபாதத்தின் (கோக நவமி) இருண்ட பாதியின் ஒன்பதாம் நாளிலிருந்து அதே மாதத்தின் இருண்ட பாதியின் பதினொன்றாம் நாள் வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கைகளில் ''நிஷான்ஸ்'' என்று அழைக்கப்படும் நீல வண்ணக் கொடிகளுடன் மத்தளங்களின் தாளங்களுக்கு ஏற்ப ஆடுகிறார்கள். கோகாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய பாடல்கள் மற்றும் [[பஜனைகள்]] டமாரம், [[சிம்தா]] போன்ற பாரம்பரிய கருவிகளுடன் இசைக்கப்படும் இசையுடன் வாசிக்கப்படுகின்றன. அவரது பிறந்த இடமான தாத்ருவாவில், ஒரு மாதத்திற்கும் மேலாக கண்காட்சி நடைபெறுகிறது. [[புரட்டாசி|பத்ரா]] மாதத்தின் தொடக்கத்திலிருந்தே தாத்ருவாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்து பக்தர்கள் வரத் தொடங்குகிறார்கள். இந்த பக்தர்கள் பொதுவாக பர்பியா (கிழக்கை சேர்ந்தவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் கழுத்துகளில் பாம்பு உருவத்தை மாட்டிக்கொண்டு வருவார்கள். அவரது பிறந்த இடமான தாத்ருவா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, யாராவது ஜோஹ்ராவிலிருந்து ( தாத்ருவாவில் ஒரு புனித குளம் உள்ள தரிசு நிலம்) ஒரு குச்சியை எடுத்தால் அது பாம்பாக மாறும் என்று நம்பப்படுகிறது. கோகாஜியின் பக்தர்கள் பாம்பு கடித்தால் அவரை வணங்கி, கடிபட்ட இடத்தில் உடனடி பரிகாரமாக புனித சாம்பலை ( [[திருநீறு|பாபூத்]] ) தடவுகிறார்கள்.
 
=== இமாச்சல பிரதேசம் ===
[[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேசத்தில்]] உள்ள தனீக் புராவில், கோகா நவமி அன்று மிகப் பெரிய அளவிலான திருவிழா மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோகாஜியின் கதையானது, அவரை பின்பற்றுபவர்களால் ரக்ஷா பந்தன் முதல் கோகா நௌமி வரை, இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று  வாசிக்கப்படுகிறது. அவரது சீடர்கள் கோகாஜியின் கதைகளைப் பாடும்போது ஒரு சாட் (ஒரு மரக் குடை) எடுத்துச் செல்கிறார்கள், மேலும் மக்கள் அவர்களுக்கு தானியங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குகிறார்கள். சேகரிக்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் மொத்தமாக கோவிலுக்கு கொண்டு வருகிறார்கள், பின்னர் கோகா நவமி பெருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல்வேறு பூஜைகள் மற்றும் சடங்குகள் தவிர, மல்யுத்தப் போட்டி ( மால் அல்லது தங்கல் ) மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அங்கு பிரதேசம்  முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அலங்கார பொருட்கள், கைவினைப்பொருட்கள், உடைகள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொம்மைகளை கொண்ட வருடாந்த மூன்று நாள் கண்காட்சி இந்த விழாக்களில் ஒரு பகுதியாகும், அவரது கதையை கேட்டுக்கொண்டே சிறந்த உணவுகளை சாப்பிட்டு கொண்டும், பொருட்களை வாங்கியும் அவரை நினைவு கூறுகிறார்கள்.
 
=== பஞ்சாப் ===
கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்ட கோகா பஞ்சாபில் குக்கா என்று அழைக்கப்படுகிறார். பல பஞ்சாபி கிராமங்களில் குக்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. சாப்பர் கிராமத்தில் ஆண்டுதோறும் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது, இது [[சாப்பர் மேளா|சப்பர் மேளா]] என்று அழைக்கப்படுகிறது. &nbsp;[[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபில்]] [[மானசா, பஞ்சாப்|மான்சாவிலிருந்து]] 51 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பரேட்டா மண்டி போன்ற நகரங்களில் குக்காவின் பாரம்பரியத்தை காணலாம். "இந்த நகரத்தில் முக்கியமாக சௌஹான்கள் வசிக்கின்றனர், அவர்கள் 'பாம்புகளின் இறைவன்' குக்காவிலிருந்து தங்கள் தோற்றத்தைக் கண்டறிந்துள்ளனர். குக்காயின் அருளால் இங்கு யாரும் பாம்புக்கடியால் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது." <ref>{{Cite web|url=http://punjabrevenue.nic.in/Ga/MANSA-19.htm|title=Punjab Revenue|date=1992-04-13|publisher=Punjabrevenue.nic.in|access-date=2014-02-04|archive-date=2016-03-04|archive-url=https://web.archive.org/web/20160304063746/http://punjabrevenue.nic.in/Ga/MANSA-19.htm|url-status=}}</ref>
 
"https://tamilar.wiki/w/கோகாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது