சாக்கலேட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 60:
== உடற்செயலியல் விளைவுகள் ==
[[குதிரை]]கள், [[நாய்]]கள், [[கிளி]]கள், [[சிற்றெலி]]கள், [[பூனை]]கள் (குறிப்பாக பூனைக்குட்டிகள்), [[பறவை]]கள் மற்றும் சிறு விலங்குகளுக்கு அதிகமான அளவு சாக்கொலேட் உயிர் நீக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டதாகும். இவற்றால் சாக்கொலேட்டில் காணப்படும் தியொப்ரொமின் எனப்படும் வேதிப்பொருளை நன்றாக வளர்சிதைமாற்றம் செய்ய இயலா. இவற்றின் இரத்தத்தில் தியொப்ரொமின் 20 மணிநேரம் வரை தங்குவதால் இவ்விலங்குகளுக்கு வலிப்பு, இதயச் செயலிழப்பு, உட்புற இரத்த இழப்பு ஆகியவற்றால் மரணம் நிகழலாம்.
வரிசை 68:
நாய்களைப் பொறுத்த வரை தியொப்ரொமினின் எல்.டி 50 மதிப்பு ஒரு கிலோ உடல் எடைக்கு 250-500 மி.கி ஆகும். இருப்பினும் 115 மி.கி அளவிலேயே மரணம் நிகழ்ந்தது அறியப்பட்டுள்ளது. 20 கிலோ எடையுள்ள நாய் ஒன்று சுமார் 240 கிராம் பால் சாக்கொலேட் சாப்பிட்டால் குடல் உபாதைகள் தொடங்கி விடும். 500 கிராமுக்கு மேல் உட்கொண்டால் சீரற்ற இதயத்துடிப்போ குறைவான இதயத்துடிப்போ இருக்கும். 5 கிலோ பால் சாக்கொலேட் சாப்பிட்ட நாய் அதிலுள்ள அதிக கொழுப்பு மற்றும் சர்கரையால் அதனை வாந்தி எடுக்காவிடில் அது உயிர் பிழைக்கும் வாய்ப்பு 50% தான். கரும் சாக்கொலேட்டில் சுமார் 50% அதிக தியொப்ரொமின் உள்ளதால் அது நாய்களுக்கு மிக ஆபத்தானதாகும்.
அண்மைய ஆய்வுகளின்படி கொக்கோ அல்லது கரும் சாக்கொலேட்டினால் மனிதர்களுக்கு நன்மை மிக்க உடல்நல பலன்கள் விளையக்கூடும் என்று தெரிகிறது. கரும் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் போன்ற ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன. மேலும் சாக்கொலேட் உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு நிறைந்த உணவுகளான சிகப்பு ஒயின், பசும் மற்றும் கரும் தேனீர், நீலபெர்ரி ஆகியவற்றை விட அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்-கள் சாக்கொலேட்டில் உள்ளன. ஓர் அறிவியல் ஆதாரமற்ற உடல் நல உணவுமுறை கூட மாத்திரை வடிவில் சாக்கொலேட் மற்றும் கொக்கோ தூளை உண்ண பரிந்துரை செய்கிறது. இருப்பினும் பால் சாக்கொலேட்டையோ வெள்ளை சாக்கொலேட்டையோ உண்பது பெரும்பாலும் உடல் நல விளைவுகளை ஏற்படுத்தாது. சாக்கொலேட் ஒரு உடற்சக்திப்பொருளும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவாதலால் நாள்தோறும் சாக்கொலேட் சாப்பிடுவது உகந்ததல்ல.
அண்மைய ஆய்வுகளின்படி, சாக்கொலேட் தியொப்ரொமின் கொண்டுள்ளதால் ஒரு மிதமான தூண்டும் பொருளாக இருக்கக்கூடும். இருப்பினும், சாக்கொலேட்டிலுள்ள தியொப்ரொமின் அளவு மனிதர்களில் எவ்வித பெரும் விளைவையும் ஏற்படுத்துமளவு அதிகமில்லை; ஒரு காஃபி குடித்த விளைவையே ஏற்படுத்தும். மருந்தியலாளர் ரையன் ஜே ஹக்ஸ்டேபிளின் கூற்றுப்படி "[சாக்கொலேட்] உணவை விட அதிகமாகவும் காஃபியை விட குறைவாகவும் [விளைவேற்படுத்தும்]". இருப்பினும் முன்கூறியவாறு நாய்களிலும், குதிரைகளிலும், சாக்கொலேட் அதிக தூண்டும் விளைவுகளேற்படுத்தும். இதனாலேயே குதிரை ஓட்டத்தில் சாக்கொலேட் தடை செய்யப்பட்டுள்ளது. சில சாக்கொலேட் பொருட்கள் செயற்கையாக சேர்க்கப்பட்ட கஃபீன் கொண்டவை.
வரிசை 78:
சாக்கொலேட்டில் சிறிதளவு இயற்கையான ஆனந்தமீன் எனப்படும் கானபினாய்ட் பொருளும், கானபினாய்ட் சிதைமாற்றத்தை தடுக்கும் N-ஓலியோல்-எத்தனாலமீன் (''N-oleolethanolamine'') மற்றும் N-லினோலியோல்-எத்தனாலமீன் (''N-linoleolethanolamine'') எனப்படும் பொருளும் உள்ளன. ஆனந்தமீன்கள் நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றின் செயல் நேரம் மற்றும் செயல்படும் இடம் தெளிவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. பரிசோதனைகளின் மூலம், N-ஓலியோல்-எத்தனாலமீன் மற்றும் N-லினோலியோல்-எத்தனாலமீன் ஆகியவை நம் உடலின் கானபினாய்ட் சிதைமாற்றத்தை தடுப்பதால் கானபினாய்டுகள் அதிக நேரம் செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் சாக்கொலேடின் நேரடித்தாக்கம் இன்னும் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சாக்கொலேட்டின் [[உருகுநிலை]] நமது உடல் [[வெப்பநிலை|வெப்பநிலையை]] விட குறைவாக இருப்பதால், அது நம் வாயில் உருகுகிறது. இத்தன்மை சாக்கொலேட்டின் சுவையை மேலும் கூட்டுவதாகக் கருதப்படுகிறது. மேலும், சாக்கொலேட் நம் மூளையில் [[செரோடோனின்|செரோடோனினைச்]] சுரக்கச் செய்கிறது. செரோடோனின் மிதமான வெயிலைப்போல ஓர் இனிய உணர்வு தரும் பொருளாகும். இருப்பினும், முன்கூறியவாறு சாக்கொலேட் நம் செயல்பாடுகளை மோசமாக பாதிப்பதில்லை.
காதல் உணர்வு கொண்டோர் பொதுவாக சாக்கொலேட்டை ஒரு கிளர்ச்சியூட்டும் பொருளாகக் குறிப்பிடுகின்றனர். சாக்கொலேட்டின் இத்தன்மை அதன் இனிய சுவை உணர்வால் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சாக்கொலேட்டின் செரொட்டொனின் அல்லது ஃபினைல்-இத்தைலமீன் (phenylethylamine)ஆகியவை கூட கிளர்ச்சியைத் தூண்டக்கூடியவை தான். ஆதாரம் உள்ளதோ இல்லையோ தம் காதலர் அல்லது காதலிக்கு சாக்கொலேட் பரிசளிப்பது மரபாகும் (குறைந்தது மேலை நாடுகளில்).
சாக்கொலேட் உண்பது முகப்பருக்களை (''acne'') உண்டாக்கும் என பரவலாகக் கருதப்படுகிறது. இது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படாத ஒரு கருத்தாகும்.
சாக்கொலேட் ஈயம் அதிகம் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். [[நைஜீரியா]] போன்ற வளரும் நாடுகளில் வளர்க்கப்படும் கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ கொட்டைகள் அதிக அளவு ஈயத்தைக் கொண்டுள்ளன. இந்நாடுகளில் ஈயம் சேர்த்த பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் இங்கு காற்றில் ஈய மாசுக்கலப்பு அதிகம் உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆளுநரகம் (FDA), சாக்கோலேட்டில் உள்ள ஈய அளவு, பெரும் விளைவுகளேற்படுத்தாது என்றே தெரிவிக்கிறது.
== தயாரிப்பு ==
மூன்று முக்கியமான கொக்கோ இரகங்கள் சாக்கோலேட் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகின்றன. இவற்றில் மிக விலையுயர்ந்ததும், அரிதானதுமானது கிரியொல்லோ எனப்படும் வட மத்திய அமெரிக்க இரகமாகும். கிரியொல்லோ கொட்டைகள் குறைவான கசப்புத்தன்மை கொண்டதோடல்லாமல் சிறிதளவு வறுத்தாலே நல்ல மணம் தரவல்லது. ஃபொரெஸ்டிரோ என்ற இரகம் இயற்கையாகவும், பயிரிடும் இடங்களிலும் அதிகமாக காணப்படுவதாகும். ட்ரினிடாரியோ என்ற இரகம் மேற்கூறிய இரு இரகங்களின் இயற்கையான கலப்பினமாகும். இது ட்ரினிடாட் நாட்டில் கிரியொல்லோ பயிரில் ஃபொரெஸ்டிரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது உண்டானது. கடந்த 50 ஆன்டுகளாக பெரும்பாலும் ஃபொரெஸ்டிரோ அல்லது குறைந்த தரமுள்ள ட்ரினிடாரியோ இரக கொக்கோ விளைவிக்கப்படுகிறது. நல்ல தரமுள்ள சுவைமணக் கொக்கோ வெறும் 5 சதவீதமே விளைவிக்கப்படுகிறது.
முதலில் கொக்கோ கொட்டைகளைக் கொண்டுள்ள கொக்கோ காய்கள் பறிக்கப்படுகின்றன. பின்னர், அவை நசுக்கப்பட்டு, சுமார் ஆறு நாட்கள் வரை நுண்ணுயிர்ப் பகுப்படைய விடப்படுகின்றன. பின்னர், அவற்றிலிருந்து கொட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. சுமார் ஏழு நாட்கள் உலர்த்துவதன் மூலம் தரமான சாக்கொலேட் தயாரிக்க முடியும். விரைவுபடுத்தப்பட்டோ செயற்கையாகவோ உலர்த்துவதன் மூலம் தயாரிக்கப்படும் சாக்கொலேட் தரம் குறைந்ததாய் இருக்கும். உலர்ந்த கொட்டைகள் வறுத்து, தரம் பிரித்து, அரைக்கப்படுகின்றன. இந்தக் கலவையிலிருந்து அழுத்தத்தின் மூலமோ புரோமோ முறை மூலமோ கொக்கோ வெண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. கொக்கோ வெண்ணெய் பிரித்த பின் கிடைக்கும் தூளே கொக்கோ தூளாகும்.
பல தரப்பட்ட சாக்கொலேட்டுகளோ கூவெர்சர்களோ தயாரிக்க சாக்கொலேட் கூழ் பல்வேறு அளவுகளில் கொக்கோ வெண்ணெயுடன் கலக்கப்படுகிறது. அமெரிக்க சாக்கொலேட் தயாரிப்பில் ஒவ்வொரு வகை சாக்கொலேட்டிற்கும் கலக்கப்படும் இடுபொருட்கள் பின்வருமாறு (சேர்க்கப்படும் அளவைப் பொருத்து இடு பொருட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன):
வரிசை 116:
ஒவ்வொரு தயரிப்பாளரும் தமக்கேயுரிய வகையில் மேற்கூறிய இடுபொருட்களின் கலப்பு விகிதத்தை உருவாக்குகின்றனர். சிறந்த கரும் சாக்கொலேட்டுகள் குறைந்தது 70% கொக்கோ கொண்டிருக்கும். பால் சாக்கொலேட்டுகளில் சுமார் 50% வரை கொக்கோ உள்ளது. உயர்தர வெள்ளை சாக்கொலேட்டில் வெறும் 33% கொக்கோவே உள்ளது. தரம் குறைந்த மிக அதிக அளவில் தயாராகும் சாக்கொலேட்டுகளில் மிகக்குறைவான கொக்கோவே (பலநேரம் 7%) உள்ளது. இவ்வாறு குறைந்த கொக்கோ உள்ள சாக்கொலேட்டுகளை சாக்கொலேட் என்றே கருத இயலாது என சில சாக்கொலேட் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.
தேவையான இடுபொருட்கள் கலக்கப்பட்டதும் இக்கலவை "கொன்ச்" எனப்படும் சங்கு வடிவ, உலோக மணிகள் நிறைந்த கொள்கலனில் இட்டு கலந்து அரைக்கப்படுகின்றது. இதன் மூலம் கொக்கோவும் சர்க்கரையும் நாவால் இனம் பிரிக்க முடியாத அளவு சிறு துகள்களாக அரைக்கபடுகின்றன. எவ்வளவுகெவ்வளவு இம்முறை மூலம் அரைக்கப்படுகிறதோ அவ்வளவு தரமிகுந்த சாக்கொலேட் கிடைக்கும். உயர்தர சாக்கொலேட்டுகள் சுமார் 72 மணி நேரமும், குறைந்த தரமுள்ள சாக்கொலேட்டுகள் சுமார் 4-6 மணி நேரமும் அரைக்கப்படுகின்றன. பின்னர், இக்கலவை 45-50 டிகிரி C வெப்பநிலையுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கப்படுகிறது.
கொக்கோ வெண்ணெய் பல்வெறு உருவிலான படிகங்களை கொண்டதால், மேற்கூறிய கலவை மிக கவனமாக குளிர்விக்கப்பட வேண்டும். அப்போது தான் மென்மையாக கடிபடும், மிருதுவாக உருகும், பளபளப்பான வடிவுள்ள சாக்கொலேட் கிடைக்கும். முதலில் கலவை 45 டிகிரி C இலிருந்து சுமார் 27 டிகிரி C க்கு குளிர்விக்கப்படுகிறது. பின் மீண்டும் 37 டிகிரி C க்கு சூடு செய்யப்பட்டு மீண்டும் திடமாகும் வரை குளிர்விக்கப்படுகிறது. இந்த சாக்கொலேட் பின்னர் வார்ப்புருக்கியோ அல்லது பிற வகைகளிலோ விற்பனைக்குத் தயாராகிறது.
இருப்பு வைத்திருக்கும் வெப்பநிலையும், ஈரப்பதமும் சாக்கொலேட்டின் தரத்தை பாதிக்கும்; 15-17 டிகிரி C வெப்பநிலையில், 50% க்கும் குறைவான ஈரப்பதமே சிறந்ததாகும். சாக்கோலேட் உடன் வைக்கப்படும் பொருட்களின் மணத்தை தன்பால் சிறிது ஈர்த்துக்கொள்ளுமாகையால், அதனை தனியாகவோ நன்றாக உறையில் சுற்றியோ வைத்திருப்பது நல்லது.
வேகன் எனப்படும் விலங்கு சாரா உணவு முறையை பின் பற்றுவோர் தகுந்த சாக்கொலேட்டை காண்பது அரிது. பல்வேறு கரும் சாக்கொலேட்டுகளிலும் சிறிதளவு பால் அல்லது பால் பொருட்கள் உள்ளன. குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, அதனை வேகன் சாக்கொலேட் என்று கொள்ள முடியாது. மேலும் சாக்கொலேட்டில் கலக்கும் சர்க்கரை, விலங்கு எலும்புச்சாம்பல் மூலம் பதன் செய்யப்பட்டதாக இருக்கலாம்.
| |||