டொலுய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சுப. இராஜசேகர் |
No edit summary |
||
வரிசை 26:
== வாழ்க்கை ==
[[செங்கிஸ் கான்]] வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த போது, போரில் ஈடுபட இயலாத அளவிற்கு டொலுய் மிகவும் இளையவராக இருந்தார். இவருக்கு ஐந்து வயதாகிய பொழுது ஒரு [[தாதர்கள்|தாதரால்]] இவர் கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். இவரை இவரது சகோதரி அல்டனி மற்றும் செங்கிஸ் கானின் இரண்டு கூட்டாளிகள் காப்பாற்றினர்.<ref>''The secret history of the Mongols''</ref> 1203இல் இவரது தந்தை இவருக்கு சோர்காக்டனியை மணம் முடித்து வைத்தார். சோர்காக்டனி [[தொகுருல்|ஓங் கானின்]] (டொலுயின் தாத்தா எசுகெயின் நண்பர்) சகோதரரின் மகளாவார். 1209இல் இவர்களின் முதல் மகன் [[மோங்கே கான்|மோங்கே]] பிறந்தார்.
இவர் முதன்முதலில் 1213இல் [[சின் வம்சம் (1115–1234)|சின் அரசமரபுக்கு]] எதிரான யுத்தத்தில் களமிறங்கினார். டெக்சிங் கோட்டை மதில் சுவரில் தனது மைத்துனன் சிகுவுடன் இணைந்து ஏறினர்.
1221இல் செங்கிஸ் கான் இவரை [[ஈரான்|ஈரானின்]] [[குராசான்]] பகுதிக்கு அனுப்பினார். அப்பகுதியில் இருந்த நகரங்கள் பல முறை கிளர்ச்சியில் ஈடுபட்டன. நவம்பர் 1220இல் [[நிசாபூர்|நிசாபூரின்]] படைவீரர்கள் டொலுயின் மைத்துனன் தோகுசரைக் கொன்றனர். டொலுயின் இராணுவம் நிசாபூர் மக்களை சமவெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. நிசாபூர் மற்றும் மெர்வ் நகர மக்களை மொத்தமாக படுகொலை செய்ய இவர் ஆணையிட்டார்.<ref>William Bayne Fisher, John Andrew Boyle, Ilya Gershevitch, Ehsan Yar ''The Cambridge History of Iran'', p.313</ref>
தனக்குப் பிறகு அடுத்த கான் யாரென செங்கிஸ் கான் முடிவு செய்ய நினைத்தபோது தனது நான்கு மகன்களில் ஒருவரைத் தேர்வு செய்வதில் அவருக்குப் பிரச்சினை இருந்தது. டொலுய்க்குச் சிறந்த இராணுவத் திறமைகள் இருந்தன. ஒரு தளபதியாகவும் அவர் பல வெற்றிகளைப் பெற்றிருந்தார். ஆனால் செங்கிஸ் கான் [[ஒகோடி கான்|ஒக்தாயியைத்]] தேர்ந்தெடுத்தார். ஒக்தாயி அரசியல் ரீதியாகத் திறமைசாலியாக இருந்தார். ஒரு திறமையான தலைவனாக இருப்பதில் டொலுய் தேவையற்ற அளவுக்கு அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவார் என செங்கிஸ் கான் நினைத்தார். 1227இல் [[மேற்கு சியா|மேற்கு சியாவிற்கு]] எதிரான படையெடுப்பில் டொலுய் தனது தந்தையுடன் கலந்து கொண்டார்.
வரிசை 41:
டொலுய், ஒக்தாயியுடன் வடக்கு சீனாவில் படையெடுப்பை நடத்தினர். 1231–32இல் உத்தியியலாளர் மற்றும் களத் தளபதியாக டொலுய் பணியாற்றினார். சின் தலைநகரான [[மங்கோலியர்களின் கைஃபெங் முற்றுகை|கைபேங்கை முற்றுகையிட]] இரண்டு இராணுவங்கள் அனுப்பப்பட்டன. சின் அரசின் பெரும்பாலான பாதுகாப்புகளைத் தகர்த்த பின்னர் அவர்கள் வடக்குப் பகுதிக்குத் திரும்பினர்.<ref>Mote, Frederick W. ''Imperial China 900-1800'', p.447</ref>
[[மங்கோலியர்களின் இரகசிய வரலாறு|மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின்]] படி சீனாவில் நடந்த ஒரு படையெடுப்பின்போது ஒக்தாயியை ஒரு மிக கடினமான உடல் நலக்குறைவில் இருந்து குணப்படுத்த டொலுய் தன்னைத் தியாகம் செய்தார். ஒக்தாயியின் உடல்நலக் குறைவுக்குக் காரணம், சீனாவின் பூமி மற்றும் நீர் ஆவிகள் என ஷாமன்கள் கூறினர். தங்களது மக்கள் விரட்டப்படுவதாலும், நிலப்பகுதி அழிக்கப்படுவதாலும் அந்த ஆவிகள் வருத்தம் அடைந்திருந்தன என அவர்கள் கூறினர். நிலம், விலங்குகள் மற்றும் மக்களைக் காணிக்கையாக அளித்த பொழுது ஒக்தாயியின் உடல்நலக்குறைவு மீண்டும் அதிகமானது. ஆனால் ஒரு குடும்ப உறுப்பினரை அவர்கள் தியாகம் செய்த போது ஒக்தாயி உடல்நலக் குறைவில் இருந்து உடனடியாக மீண்டார். டொலுய் தானாக ஒப்புக்கொண்டு ஒரு சபிக்கப்பட்ட பானத்தை நேரடியாக குடித்த பிறகு இறந்தார். ஆனால் [[அடா-மாலிக் ஜுவய்னி]], [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] டொலுய் இறந்தார் என கூறுகிறார்.<ref>Kahn, Paul; Cleaves, Francis Woodman. ''The Secret History of the Mongols'', p.xxvi</ref>
| |||