தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>K.Ambikavathy சி அகம் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 15:
தமிழர் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும் ஒரு சில இடங்களிலேயே செறிந்து வாழ்கின்றனர். அத்தகைய இடங்களாகப் பின்வருவன உள்ளன.
பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் [[இந்தியா]]வின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றிலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் கருநாடக மாநிலத்தின் [[மாண்டியா]], எப்பார் பகுதிகளிலும், [[கேரளம்|கேரள மாநிலத்தின்]] [[பாலக்காடு|பாலக்காட்டிலும்]] மற்றும் மகாராட்டிரா மாநிலம் [[புனே]], [[மும்பை]]யின் தாராவி பகுதிகளிலும் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.
{{Main|இலங்கைத் தமிழர்}}
[[இலங்கை]]யில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்கள் [[இலங்கைத் தமிழர்]], [[இலங்கைத் தமிழ் முசுலீம்கள்]] மற்றும் [[மலையகத் தமிழர்]] என மூன்று வகையினராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இசுலாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முசுலீம்கள் ([[இலங்கைச் சோனகர்|சோனகர்]]) ஆவர். 1800-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனத் தமிழகத்திலிருந்து குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் என்றழைக்கப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களது மனித உரிமைகளையும் சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே [[ஈழப் போர்|ஈழப்போராட்டம்]] வெடித்தது.
தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்குப் பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாகச், சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் [[கூலி]]களாகக் குடியமர்த்தப்பட்டனர். குறிப்பாக [[மலேசியா]], [[கடாரம்|(கடாரம்]]), [[சிங்கப்பூர்]], [[மியான்மர்|மியன்மார்]] (அருமணதேயம்), [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]] (சாவா (சாவகம்), சுமத்திரா), [[கம்போடியா]] ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்திற்கும் மேலாகத் தனது மக்கள் தொகையில் 10 விழுக்காடுக்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட [[சிங்கப்பூர்]], தமிழைத் தனது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.
{{Main|ஆபிரிக்காவில் தமிழர்}}
[[ஆபிரிக்கா|ஆப்பிரிக்காவில்]] தமிழர்கள் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850-ஆம் ஆண்டில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் [[தென்னாபிரிக்கத் தமிழர்|தென்னாப்பிரிக்கா]], [[மொரிசியசு]], [[மடகாசுகர்]], [[ரீயூனியன்|இரீயூனியன்]] ஆகிய நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்குத் தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வுகளும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரீசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 20-ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவின் [[நைஜீரியா|நைசீரியா]], [[கென்யா]], [[சிம்பாப்வே|சிம்பாப்புவே]] நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர்.
{{Main|ஐரோப்பியத் தமிழர்}}
இந்தியா மற்றும் இலங்கை தமிழர்கள், 1950-ஆம் ஆண்டின் பின்னரே தொழில் துறை வல்லுநர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர்த் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக [[ஐரோப்பா]]வுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் என்றழைக்கப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். [[பிரித்தானியா]], [[பிரான்சு]], [[ஜெர்மனி|செருமனி]], [[இத்தாலி]], [[சுவிற்சர்லாந்து|சுவிட்சலாந்து]], [[நோர்டிக் நாடுகள்|நோடிக்கு நாடுகள்]], ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 4 முதல் 5 நூறாயிரம் தமிழர்கள் ஐரோப்பாவில் வசிக்கின்றனர்.
{{Main|ஓசியானியாவில் தமிழர்}}
[[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[பிசி]] ஆகிய [[ஓசானியா|ஓசானிய]] நாடுகளிலும் கணிசமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிசித் தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் [[கரும்பு]]த் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை அங்கு அதிகமாக வாழும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார வாய்ப்புகள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள்.
{{Main|வட அமெரிக்காவில் தமிழர்}}
வரிசை 57:
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான [[தமிழ்|தமிழை]]த் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் மொழி சமசுகிருதத்திற்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2004-ஆம் ஆண்டு தமிழ் மொழியே முதலாவது [[செம்மொழி|செம்மொழியாக]] அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மொழி அந்நாடுகளின் அரசால் அலுவல் மொழியாக உள்ளது.
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் [[தொல்காப்பியம்]]. இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 300 தொடக்கம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் [[சங்க இலக்கியம்]] எனப்படுகிறது. பழந்தமிழரின் [[அகம்|அகப்பொருள்]] மற்றும் [[புறப்பொருள்]] பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் [[செடி]]கள், [[பறவை]]கள், [[விலங்கு]]கள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் [[எட்டுத்தொகை]], [[பத்துப்பாட்டு]], [[பதினெண் கீழ்க்கணக்கு]] என மூன்று தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் [[திருக்குறள்]], இந்நூல் உலகில் அதிகம் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. [[திருவள்ளுவர் ஆண்டு]] முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறையாகும்.
பொ.ஊ. 300-இலிருந்து பொ.ஊ. 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]], [[பௌத்தம்|பெளத்த]] தமிழ்க் காப்பியங்களான [[மணிமேகலை (காப்பியம்)|மணிமேகலை]], [[குண்டலகேசி]] ஆகியவையும், [[சைனம்|சைன]] தமிழ் காப்பியங்களான [[சீவக சிந்தாமணி]], [[வளையாபதி]], மற்றும் [[ஐஞ்சிறு காப்பியங்கள்|ஐஞ்சிறுகாப்பியங்களும்]] தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான [[நீலகேசி]] தமிழில் எழுந்த முதல் [[தர்க்கம்|தர்க்க]] நூலாகக் கருதப்படுகிறது.
பொ.ஊ. 700-இலிருந்து பொ.ஊ. 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வலுப்பெற்றதது.[[சைவ சமயம்|சைவமும்]][[வைணவம்|, வைணவமும்]] ஆதரவு பெற்றன. சைவ [[நாயன்மார்]]கள் பல ஆயிரம் [[தேவாரம்|தேவாரங்களைப்]] பாடினர். வைணவ [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களால்]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்]] பாடப்பெற்றன. இக்காலத்தில் [[திருமந்திரம்]] [[சிவஞானபோதம்]] உட்பட பதினான்கு [[சைவ சித்தாந்தம்|சைவ சிந்தாந்த]] நூல்களும் இயற்றப்பட்டன. [[கலிங்கத்துப்பரணி]], [[கம்ப இராமாயணம்]] ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. பொ. ஊ. 850-ஆம் ஆண்டில் இருந்து பொ.ஊ. 1250-ஆம் ஆண்டு வரை [[சோழர்|சோழப் பேரரசு]] சிறப்புற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பொ.ஊ. 1200-இலிருந்து பொ.ஊ. 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலத்திலேயே தமிழ் இசுலாமிய இலக்கியம் மற்றும் தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவை தோன்றின. முதல் தமிழ் அகரமுதலி, [[சதுரகராதி]] என்ற பெயரில், [[இத்தாலி]] நாட்டைச் சேர்ந்தவரான [[வீரமாமுனிவர்]] என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் பொ.ஊ. 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான [[நிகண்டு]]கள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.
18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. [[உ. வே. சாமிநாதையர்|உ.வே.சாமிநாதையர்]], [[சி. வை. தாமோதரம்பிள்ளை|சி.வை.தாமோதரம்பிள்ளை]], [[ஆறுமுக நாவலர்]] உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் புதுப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட [[சமற்கிருதம்|சமற்கிருத]] சொற்களையும் [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள]] நடையையும் தடுக்க [[தனித் தமிழ் இயக்கம்]] தொடங்கப்பட்டது. [[தேவநேயப் பாவாணர்]], [[மறைமலை அடிகள்]], [[பாரதிதாசன்]], [[பெருஞ்சித்திரனார்]] ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
வரிசை 79:
[[படிமம்:Bharata Natyam Performance DS.jpg|thumb|right|210px|[[பரதநாட்டியம்|பரதநாட்டிய]] நடனப் பெண்]]
தமிழர் பண்பாடு [[தமிழ்]] மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
{{Main|தமிழர் கட்டிடக்கலை}}
வரிசை 86:
ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை [[கோயில்]]களே. இவை [[கட்டிடக்கலை]]யின் உயர் மரபைச் சார்ந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே [[திராவிடக் கட்டடக்கலை]] எனப்படுகின்ற கட்டடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
{{Main|தமிழர் சிற்பக்கலை}}
வரிசை 92:
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் [[மண்]], [[மரம்]], [[தந்தம்]], [[கல்]] ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்குக் கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
{{Main|தமிழர் ஓவியம்}}
வரிசை 99:
சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது.<ref>மாத்தளை சோமு. (2005). ''வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்''. திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 113</ref> இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்".<ref>[http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm ''தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்''! – வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்]</ref> தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. [[வரைகதை]], வரைகலை, [[தமிழ் இயங்குபடம்|இயங்குபடங்கள்]] என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும்.
{{Main|தமிழர் நாடகக்கலை}}
இயல், இசை, நாடகம் என்று [[முத்தமிழ்]]களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தித் தொன்று தொட்டு தமிழர், நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. தமிழர் நாடகங்கள் தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
{{Main|தமிழிசை}}
[[படிமம்:Raga du soir au Collège des Bernardins (4730079050).jpg|thumb|right|200px|[[கருநாடக இசை]]]]
தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாகச் செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. [[தொல்காப்பியர்]] இயற்றிய "[[தொல்காப்பியம்]]" என்னும் நூலில் [[இசை]]யைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம்.
{{Main|தமிழர் ஆடற்கலை}}
[[படிமம்:Dancers,Karakattam,Tamil Nadu358.jpg|thumb|right|200px|[[கரகாட்டம்]]]]
வரிசை 116:
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய [[நடனம்|நடனமா]]கும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – [[பாவம்]], ர – [[இராகம்|ராகம்]], த – [[தாளம் (இசை)|தாளம்]] என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
{{Main|தமிழர் தற்காப்புக் கலைகள்}}
நடனம், [[இசை]], [[மொழி]] போன்றே ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபைக் கொண்டிருக்கின்றது. [[தென்னிந்தியா]]வில் இருந்த [[நாடு]]கள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டுப் போர் [[சாதி]]களின் மரபில் தோன்றிய சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது. [[சிலம்பம்]], [[வர்மக்கலை]], [[குத்துவரிசை]], அடிதடி, [[மல்லாடல்]] ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும்.
இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் [[தமிழ்]] நூலான [[திருமந்திரம்]] மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் [[தமிழ்நாடு]] அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது<ref>[http://www.hindu.com/thehindu/holnus/004200803311655.htm தமிழ்நாட்டுப் பள்ளிகளில் யோகக்கலை கட்டாயப் பாடமாக்கப்பட்டது]{{Dead link|date=செப்டம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. [[சிவானந்தர்|சுவாமி சிவானந்தா]], [[யாழ்ப்பாணம்]] [[சிவயோக சுவாமி|யோகர் சுவாமி]]யின் சீடரான [[சிவாய சுப்ரமணியசுவாமி|சத்யகுரு சிவாய சுப்ரமணியசுவாமி]], சுவாமி சச்சிதானந்தா, [[வேதாத்திரி மகரிசி]] போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்கள்.
{{Main|தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை}}
தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும். தமிழ்ச் சினிமாவே இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழித் திரைப்பட செல்வாக்கை தமிழர் மத்தியில் தவிர்த்தது. நாடகம், இசை, ஆடல், சிலம்பம் எனப் பல்வேறு மரபுக் கலைகளையும் தமிழ்த் திரைக்கலை பயன்படுத்திக்கொண்டது. [[சிவாஜி கணேசன்|சிவாஜி]], [[எம். ஜி. ஆர்]], [[ரஜினிகாந்த்]], [[கமல்ஹாசன்|கமல்காசன்]], [[கே. பி. சுந்தராம்பாள்]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]] ஆகிய நடிகர்களும் [[கே. பாலச்சந்தர்]], [[மணிரத்னம்]], [[பாரதிராஜா]] ஆகிய இயக்குநர்களும் தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ் மிக்க சிலர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் [[இளையராசா]], [[ஏ.ஆர்.ரகுமான்]] ஆகியோர் புகழ்பெற்ற சிலர். தமிழ்த் திரைப்படங்கள் "வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதி பலிக்கின்றது. பொய்மைகளைத் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன"<ref>இன்குலாப். (2004). ''ஆனால்''. தஞ்சாவூர்: அகரம்.</ref> போன்ற பல விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். [[வில்லுப்பாட்டு]], [[பட்டிமன்றம்]], இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. [[என். எஸ். கிருஷ்ணன்]], [[சந்திரபாபு]], [[கே. ஏ. தங்கவேலு]], [[நாகேஷ்]] ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். [[வடிவழகன்]], [[திண்டுக்கல் ஐ. லியோனி]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[வடிவேலு]], [[சந்தானம்]] ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, [[அசத்தப் போவது யாரு?]] போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட [[மேடைச் சிரிப்புரை]] பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. [[ஈரோடு மகேசு|ஈரோடு மகேஸ்]], [[மதுரை முத்து (நகைச்சுவையாளர்)|மதுரை முத்து]] ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.
அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில், நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், எனப் பல துறைகளில் தமிழில் பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]], [[அண்ணாதுரை]], [[பெரியார்]], [[ம. பொ. சிவஞானம்]], [[கிருபானந்த வாரியார்]] போன்றோர் சிறந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் [[சிவாஜி கணேசன்]] புகழ் பெற்றவர். இன்று [[மு. கருணாநிதி|கருணாநிதி]], [[வைகோ]], [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]], [[சுகிசிவம்]] ஆகியோர் சிறந்த பேச்சாளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கன நடாத்தப்பட்ட [[தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு]] நிகழ்ச்சியில் விசயன் வெற்றி பெற்றார். ஈழத்து பேச்சுப்பாரம்பரியம் [[ஆறுமுகநாவலர்]] போன்ற சமயப்பிரசங்கிகள் முதல் அரசியல் பேச்சாளர்கள் ஈறாகப் பலவகையில் வளர்ச்சிபெற்று உள்ளது. போராட்ட காலங்களில் பல போராளிகளின் பேச்சுக்கள் மக்களுக்கு விடுதலை வேட்கை தூண்டுவதில் முன்னின்றன. இலக்கிய சொற்பொழிவுகளில் கம்பன் கழகத்து ஜெயராஜ் போன்றவர்கள் பரவலாக அறியப்பெற்றாவர்கள்.
வரிசை 187:
== வாழ்வியல் ==
{{Main|தமிழர் சமையல்}}
'''தமிழர் சமையல்''', பல நூற்றாண்டுகளாகத் [[தென்னிந்தியா|தென் இந்தியா]], [[இலங்கை]] மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க, விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
வரிசை 193:
பல்வகை [[மரக்கறி]]கள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. [[சோறு]]ம் [[குழம்பு]]ம் [[கறி]]யும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, [[மரக்கறி]]க் குழம்பு, [[பருப்பு]], [[கீரை]]வகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, [[மீன்]]கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. [[தேங்காய்]], [[மிளகாய்]], [[கறிவேப்பிலை]], [[வெங்காயம்]], [[பூண்டு]], [[இஞ்சி]] உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.
{{Main|தமிழர் உடை}}
தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்துத் தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. எனினும், [[வேட்டி]], [[சேலை]], [[தாவணி]], [[பாவாடை]] போன்றவை தமிழரின் மரபார்ந்த உடைகளாகக் கருதப்படுகின்றன. நகர்ப்புறங்களில் சல்வார் கமீசு, சுரிதார், முழுக்காற்சட்டை, [[நீலக்கால் சட்டை]] போன்ற உடைகள் அணியும் போக்கு கூடி வருகிறது.
[[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]], தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். [[தைப்பூசம்|தைப்பூசமும்]] [[தீபாவளி]]யும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும்.
{{Main|பொறியியல்|தமிழர் கப்பற்கலை}}
தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடற் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். [[கப்பல்]] கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர் ஈடுபட்டனர். இத்துறை வல்லுநர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பயன்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற ''கடலோடி'' நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
வரிசை 216:
தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் எனப் பல நோக்கங்களை மையமாக வைத்துத் தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. சங்கம், [[கோயில்]], இயக்கம் ([[தமிழீழ விடுதலைப் புலிகள்]], [[திராவிடர் கழகம்]], தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் ([[புகலிட ஊர் ஒன்றியங்கள்]]), இணைய அமைப்புகள், கட்சி, அறக்கட்டளை, அவை, பேரவை, கூட்டுறவுகள், சமூகக் கூடங்கள், நூலகங்கள், ஊராட்சி, ஊரவை ஆகியவை தமிழ்ச் சூழலில் காணப்படும் அமைப்புகள் ஆகும்.
[[பெரியார்|பெரியாரால்]] தோற்றுவிக்கப்பட்ட [[திராவிட இயக்கம்]], தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் [[சாதி]]களுக்கு எதிராகப் போராடவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது.
வரிசை 232:
== உசாத்துணைகள் ==
* [[அ. தட்சிணாமூர்த்தி]], [[1994]]. ''தமிழர் நாகரிகமும் பண்பாடும்'', சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.
* [[ஆ. வேலுப்பிள்ளை]], 1985. ''தமிழர் சமய வரலாறு''. சென்னை: பாரி புத்தகப்பண்ணை.
வரிசை 248:
* சி. மெளனகுரு, 2005. ''தமிழர் வரலாறும் பண்பாடும்''. இலங்கை: குமரன் புத்தக இல்லம். [http://noolaham.net/project/04/355/355.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20090628233223/http://www.noolaham.net/project/04/355/355.htm |date=2009-06-28 }}
* Hart, G.L. (1979). "The Nature of Tamil Devotion." In M.M. Deshpande and P.E. Hook (eds.), ''Aryan and Non-Aryan in India'', pp. 11–33. Michigan: Ann Arbor. {{ISBN|0-89148-014-5}}
* Hart, G.L. (1987). "Early Evidence for Caste in South India." In P. Hockings (ed.), ''Dimesions of Social Life: Essays in honor of David B. Mandelbaum''. Berlin: Mouton Gruyter.
| |||