தெள்விளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ஜெ. ஜனனி உள்ளிணைப்பு |
imported>Sukanthi "'''தெள்விளி''' என்பது ஒருவகையான விளையாட்டு ஓசையும், தொழிலோசையும் ஆகும். குலவை, வீளை முதலான நாவோசைகள் இதன் வகைகள். == தெள்விளி ஓசை == :இணைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''தெள்விளி''' என்பது ஒருவகையான [[விளையாட்டு]] ஓசையும், தொழிலோசையும் ஆகும். [[குலவை]], [[வீளை]] முதலான நாவோசைகள் இதன் வகைகள்.
:இணைப்பறவைக்காக [[புறா]] <ref>அம் சினை வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தௌ விளி, (நற்றிணை 305)</ref>, [[பருந்து]] <ref>இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி (குறுந்தொகை 207)</ref> <ref>வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் கிளைத் தரு தௌ விளி கெழு முடைப் பயிரும் (அகநானூறு 363)</ref> ஆகியவை எழுப்பும் குரல் தெள்விளி எப்படிக் கேட்கும் என்பதை உணர்த்தும் உவமைகள். கொம்பு ஊதும் [[ஓசை]] <ref>வயிர் இடைப்பட்ட தௌ விளி இயம்ப, {அகநானூறு 269)</ref>, பறை முழக்கம் <ref>கோடைத் தௌ விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, (அகநானூறு 321)</ref> ஆகியனவும் தெள்விளிக்கு உவமை. கோவலர் ஊதும் குழலோசையில் வரும் தெறிப்பிசை <ref>கோவலர் ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற (குறிஞ்சிப்பாட்டு 222)</ref> <ref>பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தௌ விளி, (அகநானூறு 399)</ref> பார்வை வேட்டுவன் <ref>பார்வைக்குப் பெண்மானை வைத்து ஆண்மானைப் பிடிக்கும் வேட்டுவன்</ref> வலையில் பட்ட ஆண்மான் புலம்பும் குரல் <ref>பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி, சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் (நற்றிணை 212)</ref> ஆகியனவும் தெள்விளி ஓசைக்கு எடுத்துக்காட்டுகள்.
:வண்டியில் பூட்டிய எருதுகளை ஓட்டும்போது ஆடவர் நாக்கைத் தெழித்து ஓட்டும் 'நறுக்கு ஓசை' ஒருவகைத் தெள்விளி. <ref>பகடு தெழி தௌ விளி (அகநானூறு 17)</ref> நெல் அறுத்த அரிகால் நிலத்தை மீண்டும் நன்செய் ஆக்குவதற்காக எருதுகளை விட்டு மிதிக்கச் செய்யும்போது உழவர் நாவால் எழுப்பும் ஒசையும் தெள்விளி ஆகும். <ref>அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப (அகநானூறு 41)</ref>
தினைப்புனம் காக்கும் மகளிர் தெள்விளி எழுப்பிக் கிளிகளை ஓட்டுவர். <ref>புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின், வள்ளுயிர்த் தெள்விளி இடையிடைப் பயிற்றிக, கிள்ளை யோப்பியும் (குறிஞ்சிப்பாட்டு 100, )</ref>. எழுந்தெழுந்து தெள்விளி பயிற்றி ஓட்டுவர். <ref>எழுந்து எழுந்து, கிள்ளைத் தௌ விளி இடைஇடை பயிற்றி, ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், (அகநானூறு 28)</ref>. அந்தத் தெள்விளி கேட்டு மயில் ஆடுவதும் உண்டு. <ref>எல் வளை மகளிர் தெள்விளி இசைப்பின், பழனக் காவில் பசு மயில் ஆலும் (பதிற்றுப்பத்து 27)</ref>
| |||