தோணியாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Info-farmer
 
No edit summary
 
வரிசை 100:
வெப்ப, மிதவெப்ப (25-35℃) நீர்நிலைகளில் பரந்து காணப்படுகிறது. ஆழமற்ற (25மீ) பகுதிகளிலும் அதிகமாகவும் குளிர்ச்சியான தீவுகளில் குறைந்த அளவிலும் காணப்படும். இந்தியப் பெருங்கடல், அந்தமான் நிக்கோபார், லக்காவீல், மினிகாய் தீவுகள் கேரளத்தில் கொல்லம், தமிழ்நாட்டில் தென்கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடாவில் மிகுந்து காணப்படுகிறது.
 
=== இனப்பெருக்கம் ===
முட்டையிடும் காலத்திற்கு முன்பே புணர்கின்றன. புணரும் போது சேமித்து வைக்கப்படும் விந்து எதிர்காலத்தில் கருத்தரிக்கப் பயன்படுகிறது.ஒவ்வோர் ஆண்டும் புணரும் போது படிப்படியாக கருத்தரிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இனப்பெருக்க இடைவெளி பொதுவாக இரண்டு ஆண்டுகளாகும். சில சமயங்களில் ஒன்று, மூன்று, நான்கு ஆண்டுச் சுழற்சிகளும் காணப்படும். புணர்ச்சிக்கு நேரம் வந்துவிட்டால் தன் செயலை நிறுத்திவிட்டு ஆண், பெண் உறவைக் கொண்டாடும் இயல்புடையது. எதிர்உயிரை கவர்வதற்காக மணச் சுரப்பிகள் உள்ளன.
 
=== முட்டையிடுதல் ===
இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டையிடும். இளவேனிற் காலத்திலும், கோடைக் காலத்திலும் முட்டையிடத் தொடங்குகிறது. பொதுவாக ஆமை எப்போதும் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கும். கடலிலிருந்து முட்டையிடுவதற்காகக் கடற்கரையை நோக்கி இரவில் வரும். கரைக்கு வந்த அரை மணி நேரத்தில் முட்டையிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்.
 
வரிசை 112:
முட்டை 48 முதல் 70 நாள்கள் வரை கரைகளில் காணப்படுகிறது. சூரிய ஒளியின் உதவியால் ஆமைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவரும். குஞ்சுகளின் நீளம் 2.5-10 செ.மீ. பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் வெளிவருகிறது. மணற்பரப்பு சூடாக இருக்கும் போது வெளிவருவது கிடையாது. முட்டையிலிருந்து வெளிப்பட்டவுடன் கடலை நோக்கி நீந்த தொடங்கி விடுகின்றன. பிறக்கும்போது கடினமான மேற்புற உடலமைப்பையும், வெளுத்த அடிப்புறத்தையும் பெற்றிருப்பதால் பெரிய மீன்கள், பறவைகளிடத்தில் தப்பித்துக் கொள்கிறது. குஞ்சுகளின் வளர்ச்சி மழைக் காலத்தை விடக் கோடைக் காலத்தில் விரைவாக நடைபெறுகிறது. மழைக்காலத்தில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவர சராசரியாக 91 நாளாகும். கோடைக் காலத்தில் 56 நாள்களே போதும்.
 
==== எதிரிகள் ====
முட்டைகள் பறவைகளாலும், பாலூட்டிகளாலும் அழிக்கப்படுகிறது. கீரி, முள்ளம்பன்றி, நாய், நரி போன்ற விலங்குகள் ஆமை முட்டையிடும் இடங்களைக் கண்டுபிடித்து உணவாக உட்கொள்கின்றன. எஞ்சியிருக்கும் முட்டைகளைப் பருந்துகள் உணவாக உட்கொள்கின்றன. நீரில் வாழும் நண்டுகள் குட்டி ஆமைகளை உண்கின்றன. இவ்வெதிரிகளிடமிருந்து தப்பிக்கும் குஞ்சுகள் கடல் நீருக்குள் சென்ற பின் சுறா மீன்களால் உட்கொள்ளப்பட்டு விடுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த முதிர்ந்த ஆமைகளை திமிங்கலங்கள் உட்கொள்கின்றன.
 
==== பிடிக்கும் முறை ====
ஈட்டி, தூண்டில் மிதவை வலை, இறால் போன்றவற்றின் மூலம் பிடிக்கலாம். ஆமையைக் களைப்படையச் செய்யும் வரையில் விரட்டிச் சென்று பிடிக்கும் வழக்கமும் உண்டு. ஈட்டி எய்து பிடிக்கும் முறையும் சில இடங்களில் கையாளப்படுகிறது.
 
==== பயன்கள் ====
பெரும்பாலும் இறைச்சிக்காக பிடிக்கப்பட்டு உணவாகப் பயன்படுகிறது. இறைச்சியில் புரதச்சத்து மிகுந்துள்ளமையால் முழு உணவாகும். தோல் மிகுந்த மதிப்புள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆமையின் தோல் பன்னாட்டுச் சந்தையில் முதன்மைப் பொருளாகத் திகழ்கிறது. மேலோடு, கீழோடு ஆகியவற்றின் ஓரங்களிலிருந்து எடுக்கப்படும் குருத்தெலும்பு விலை உயர்ந்த சாறு தயாரிப்பதில் பயன்படுகிறது.
 
"https://tamilar.wiki/w/தோணியாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது