உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
{{தமிழ் எழுத்துகள்}}
'''ன்''' ({{audio|[[File:ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}}})]] [[தமிழ்|தமிழ் மொழியின்]] [[எழுத்து]]களில் ஒன்று. இது [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] முப்பத்தோராவது எழுத்து. இது [[மொழி]]யின் ஓர் [[ஒலி]]<nowiki/>யையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "னகர மெய்" அல்லது "னகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இன்னன்னா" என வழங்குவர். தனி மெய்களாக நிற்கும்போது '''ந்''', '''ன்''' என்பவற்றிடையே ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது. எனினும் இவ்விரண்டு எழுத்துகளுடனும் உயிர்கள் சேர்ந்து உருவாகும் இவ்வெழுத்துகளின் ஒத்த உயிர்மெய்களிடையே ஒலிப்பு வேறுபாடு இல்லை. இதனால் இவ்விரு எழுத்துகளையும் முறையே ''நகரம்'', என்றும் ''னகரம்'' என்றும் எழுத்தில் வேறுபாடு காட்ட முடிந்தாலும், சொல்லும்போது ஒலிப்பு வேறுபாடு இருக்காது. இதனால் இவற்றை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டியபோது அவற்றுக்கு முன்வரும் எழுத்துகளைக் குறித்து '''ன்''' ஐ ''றன்னகரம்'' என்றும் '''ந்''' ஐத் ''தன்னகரம்'' என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம். '''ண்''', '''ன்''' ஆகிய எழுத்துகளிடையே ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளனவாயினும் பலர் இவற்றை வேறுபடுத்தி ஒலிப்பதில்லை. எழுதுவதிலும் சில சமயங்களில் சில மாணவர்கள் குழப்பம் அடைவது உண்டு. இதனால் இவற்றை வேறுபடுத்திச் சொல்வதற்காக இரண்டு சுழி நானா, மூன்றுசுழி ணானா, றன்னகரம்(றகரத்தை அடுத்து அமையும் னகரம்) என்று கூடுதல் விளக்கத்துடன் சொல்லும் வழக்கமும் உண்டு.
=="ன்" இன் வகைப்பாடு==
|