மே நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சிNo edit summary |
"{{Infobox holiday |holiday_name = சர்வதேச தொழிலாளர்கள் தினம் |type = சர்வதேசியம் |longtype = |image = Triumph of Labour at Marina Beach.jpg |caption = இந்தியாவின், சென்னை மெரினாவில் உள்ள த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 17:
'''மே நாள்''' அல்லது '''மே தினம்''' எனப்படும் உலகத் [[தொழிலாளர் தினம்]] ஆண்டுதோறும் ''மே'' முதலாம் தேதி ([[மே 1]]) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும்.<ref>{{cite news|last1=Rothman|first1=Lily|title=The Bloody Story of How May Day Became a Holiday for Workers|url=http://time.com/3836834/may-day-labor-history/|accessdate=2 May 2017|work=Time|publisher=Time Magazine|date=1 May 2017}}</ref>
== மே தின வரலாறு - தொழிலாளர் போராட்டம் ==
[[File:Chartist meeting on Kennington Common by William Edward Kilburn 1848 - restoration1.jpg|thumb|1848 ஆம் ஆண்டு [[லண்டன்|இலண்டனில்]] உள்ள கென்னிங்டன் காமனில் நடந்த சாசன இயக்கம் கூட்டத்தின் புகைப்படம்.]]
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] தோன்றிய [[சாசன இயக்கம்]] (''chartists'') ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது, 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.
[[1830]]களில் [[பிரான்ஸ்|பிரான்சி]]ல் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். [[1834]]இல் ''ஜனநாயகம் அல்லது மரணம்'' என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
[[File:1.Mai 2013 (8697603319).jpg|thumb|2013 ஆம் ஆண்டு [[ஆஸ்திரியா]]வில், சர்வதேச தொழிலாளர் தின ஆர்ப்பாட்டம்]]
[[ஆஸ்திரேலியா]]வில் [[மெல்பேர்ண்|மெல்பேர்னில்]] கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து [[1856]]இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் [[1895]] - [[1899]]க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. [[1896]] [[ஏப்ரல்]] மாதத்தில் [[லெனின்]] மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே [[உருசியப் புரட்சி, 1917|ரஷ்யப் புரட்சிக்கு]] வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] [[1832]]இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், [[1835]]இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
| |||